தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்ற "சமத்துவ கிறிஸ்துமஸ்" விழாவில், மேடையில் நடந்த சுவாரஸ்யமான உரையாடல் ஒன்று தற்போது வெளியாகித் தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழாவில் பேசிய டாக்டர்.அந்தோணி சாமி, விஜய்யிடம், "இவ்வளவு பெரிய அரசியல் பொறுப்பில் இருக்கிறீர்களே, உங்களுக்கு அதிகப்படியான அழுத்தம் அல்லது பதற்றம் இருக்கிறதா?" என்று கேட்டுள்ளார். அதற்கு மிக நிதானமாகப் பதிலளித்த விஜய், "I am just enjoying the process" என்று கூறியுள்ளார். எதையும் பதற்றம் இல்லாமல் ரசித்துச் செய்யும் இந்த முதிர்ச்சியும், பக்குவமும் ஒரு தலைவருக்கு மிக அவசியமானது என அந்த போதகர் பாராட்ட அரங்கம் அதிர்ந்தது.
தொடர்ந்து பேசிய அவர், நாங்கள் பொன்னாடை போர்த்தும் போது, விஜய் தனது இருக்கையை விட்டு எழுந்து, மேடையின் விளிம்பு வரை இறங்கி வந்து, தலை குனிந்து அதனை ஏற்றுக்கொண்டார். விஜய்யின் இந்த எளிமையும், பணிவும் தன்னை மிகவும் கவர்ந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுவாக அரசியல் கட்சிப் பொதுக்கூட்டங்களில், மேடையில் இடம் பிடிப்பதில் நிர்வாகிகளிடையே கடும் போட்டி நிலவும். ஆனால், இந்த விழாவில் கட்சியின் முக்கியத் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட, மேடைக்குக் கீழே பார்வையாளர்களுடன் அமர்ந்து நிகழ்ச்சியை ரசித்தனர். மேடையில் யார் இருக்க வேண்டுமோ அவர்கள் மட்டுமே அமரவைக்கப்பட்டனர். இந்த ஒழுக்கமும், கண்ணியமும் பார்ப்பதற்கே மிக அழகாக இருந்ததாக அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.