தமிழ்நாடு

கொடைக்கானலில் பூத்துக் குலுங்கும் வெள்ளை லில்லியம் மலர்கள்.......!

Malaimurasu Seithigal TV


 திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளை கவரும் இடங்களில் முக்கியமானது பிரையண்ட் பூங்கா.  இந்த பூங்காவில் பூத்துக் குலுங்கும் வெள்ளை லில்லியம் மலர்களை காண்பதற்காக திரளான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். 

பிரையண்ட் பூங்காவில்  மூன்று கட்டங்களாக மூன்று லட்சம் மலர் நாற்றுகள் நடப்பட்டன. பல்வேறு வகையான வண்ணங்களில் பூக்கக்கூடிய மலர் நாற்றுக்கள் நடப்பட்டு பூப்பதற்கு தயாராகி உள்ளன. 


வரும் மே மாதத்தில் ஒரு கோடி மலர்கள் இந்த பூங்காவில் பூக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் நெதர்லாந்து நாட்டில் பூக்கக்கூடிய லில்லியம் மலர்கள் தற்போது இந்த பூங்காவில் பூத்துள்ளது. 

வெள்ளை லில்லியன் மலர்கள் பிரையன்ட் பூங்காவில் பூத்துக் குலுங்குகின்றன. இந்த லில்லியம் மலர்களை பார்ப்பதற்கு பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர் .வரும் வாரங்களில் மலர்கள் பூங்காவில் பூக்கத் தொடங்கும் என்று பூங்கா நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.