"மாலை முரசு - கான்சிலிடிக்ஸ்" இணைந்து தமிழகம் முழுவதும் நடத்திய மாபெரும் கருத்துக்கணிப்பு முடிவுகள் குறித்து "Tamil Nadu Political League" நிகழ்ச்சியில் தொகுதி பற்றியும், வரும் சட்டமன்ற தேர்தலில் அங்கு வெற்றிப் பெற அதிகம் வாய்ப்புள்ள கூட்டணி எது? என்பது குறித்த தகவல்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. திருச்சி மாவட்டத்தின் மணப்பாறை தொகுதி, முறுக்குக்கும் மாட்டுச் சந்தைக்கும் உலகப் புகழ்பெற்றது. 84 சதவீத கிராமப்புற வாக்குகளைக் கொண்ட இந்தத் தொகுதியில், தற்போது நிலவும் அரசியல் சூழல் தற்போதைய அரசுக்குச் சற்று பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.
மணப்பாறை தொகுதியின் முக்கிய வாக்காளர் அடையாளங்களாக 41 முதல் 60 வயதுடையவர்கள் 36 சதவீதமும், 26 முதல் 40 வயதுடையவர்கள் 31.6 சதவீதமும் உள்ளனர். சமூக ரீதியாக முத்தரையர்கள் 29 சதவீதத்தோடு பெரும்பான்மையாக உள்ளனர். சோழிய வெள்ளாளர்கள் 20 சதவீதமும், ஆதிதிராவிடர்கள் 10 சதவீதமும், தேவேந்திர குல வேளாளர்கள் 8 சதவீதமும் உள்ளனர். விவசாயமும் கால்நடை வளர்ப்பும் பிரதான தொழிலாக உள்ள இந்தத் தொகுதியில், கிராமப்புற இளைஞர்களின் வாக்குகள் மாற்றத்தை விரும்புகின்றன.
முக்கிய உள்ளூர் பிரச்சினைகளாக உய்யக்கொண்டான் கால்வாய் முறையாகப் பராமரிக்கப்படாததால் பாசன நீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. விவசாயம் தவிரப் பெரிய தொழிற்சாலைகள் இல்லாததால் இளைஞர்கள் வேலை தேடி வெளியூர்களுக்குச் செல்வது தொடர்கிறது. டிஎன்பிஎல் (TNPL) தொழிற்சாலையினால் ஏற்படும் மாசு மற்றும் கால்நடை மருத்துவமனைகள் தொலைவில் இருப்பது மக்களின் பிரதான குறையாக உள்ளது. அரசுச் சேவைகளுக்கு ஆன்லைன் வசதிகள் இன்னும் கிராமப்புறங்களுக்குச் சென்றடையவில்லை என்பது மக்களின் புகாராகும்.
மணப்பாறை தொகுதி பற்றிய முழு கருத்து கணிப்பை காணொளியாக காண : இங்கே கிளிக் செய்யவும்
தேர்தல் புள்ளிவிவரங்களைப் பார்த்தால், 2021-ல் திமுக 44.4 சதவீத வாக்குகளைப் பெற்றது, அது 2024-ல் 45.5 சதவீதமாகச் சற்றே உயர்ந்துள்ளது. அதிமுக 2021-ல் 38.8 சதவீத வாக்குகளைப் பெற்ற நிலையில், 2024-ல் 41.9 சதவீதமாகத் தனது செல்வாக்கை உயர்த்தியுள்ளது. பூத் அளவில், 2021-ல் திமுக 148 பூத்களில் வலுவாக இருந்தது, 2024-ல் 155 ஆக உயர்ந்துள்ளது. அதிமுக 2021-ல் 78 பூத்களில் வலுவாக இருந்த நிலையில், 2024-ல் 92 பூத்களாக உயர்ந்துள்ளது. சுமார் 50 பூத்கள் ஸ்விங் நிலையில் உள்ளன.
2026 தேர்தல் கணிப்பின்படி, மணப்பாறையில் அதிமுக 125 வாக்குச்சாவடிகளில் வலுவாக உள்ளது. திமுக 115 வாக்குச்சாவடிகளில் தனது பலத்தைக் கொண்டுள்ளது. சுமார் 75 வாக்குச்சாவடிகள் ஸ்விங் பூத்களாக உள்ளன. கான்சிலிடிக்ஸ் குழுவின் முடிவுகளின்படி, 2026-ல் அதிமுக 35 சதவீத வாக்குகளைப் பெற்று முன்னிலை வகிக்கும் எனத் தெரிகிறது. திமுக 30 சதவீத வாக்குகளைப் பெறும் நிலையில் உள்ளது. தவெக மற்றும் நாம் தமிழர் கூட்டணி 26 சதவீத வாக்குகளைப் பெறும். வெற்றி வித்தியாசம் சுமார் 5 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.