தமிழகத்தில் சமீப காலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது பல்வேறு பாலியல் குற்றங்கள் நிகழ்கிறது. இதுகுறித்து நமது மாலைமுரசு செய்திகள் தொலைக்காட்சிக்கு சமூக செயற்பாட்டாளர் திருமதி கல்யாணந்தி அளித்த நேர்காணலில் பேசப்பட்டது. அதில் இப்போது நாட்டையே உலுக்கி கொண்டிருக்கும் தொழிலதிபர் வீரமணி மீதான போக்சோ வழக்கு குறித்தும் அது சார்ந்த பல்வேறு உளவியல் மற்றும் பாதுகாப்பு குறித்தும் பேசப்பட்டது.
அவர் பேசியதாவது, “தமிழ்நாடு நாட்டிலேயே எல்லா மாநிலத்துக்கும் எடுத்துக்காட்டாக இருக்கு அப்படின்னு நம்ம மார்தட்டிக் கொள்கிறோம் இல்லையா.. ஆனா அப்பப்ப நடக்கக்கூடிய இந்த மாதிரியான குற்றங்கள், 2019ல பொள்ளாச்சி இன்சிடென்ட், 2025 ஜெம் வீரமணியின் இன்சிடன்ட் போல சில விஷயம் வருஷக்கணக்கா நடந்துட்டு இருக்கு. அது திடீர்னு வந்து விஸ்வரூபம் எடுக்கும்போது நம்ம ஒன்னுதான் புரிஞ்சுக்க வேண்டியது இருக்கு, எங்குமே மாற்றமே ஏற்படலையா? அப்படின்ற ஒரு கேள்வி வருகிறது.
முழு நேர்காணலையும் காண இங்கே கிளிக் செய்யவும்
இவர் ஒரு தொழிலதிபர், சமுதாயத்தில் ஒரு அந்தஸ்துல இருக்கக்கூடிய ஒரு மனுஷன், ஒரு ஸ்கூல் வச்சு இருக்காரு, நன்கொடையாளர், சமூக சேவகர், மேலும் மத்திய அரசு விருது வழங்கியுள்ளது. மத்திய அரசு குடியரசு தினத்தை முன்னிட்டு வீரமணியை கௌரவித்து 50 வது குடியரசு தினத்தன்று விருது கொடுத்துள்ளார்கள். வெளியில் தன்னை நல்லவராக காட்டிக் கொண்டு அவருக்கு ப்ளாக் ஒரு சைடு இருந்திருக்கு. இப்போ மனநிலை எப்படி இருக்கும் என்றால் அவங்கள மாதிரி இருக்க எல்லாருமே அப்படிதான் இருப்பாங்களா? அப்படினு உளவியல் ரீதியான ஒரு மாற்றம் கண்டிப்பா வரும். அப்ப யாரை பார்த்தாலும் ஒரு சந்தேகப் பார்வையில் பார்க்கக்கூடிய ஒரு நிலை ஏற்படும். என்னதான் நாம பெண்கள் சுதந்திரம் பேசுறோம்.. பினான்சியல் இண்டிபெண்டன்ஸ் பேசுறோம்.. வேலைக்கு போகணும்னு பேசுறோம்.. ஆனா இப்போ யாரிடமாவது உதவி கேட்க போகிற குழந்தைகளுக்கு இப்ப மனநிலை வரும்.
இன்னொரு விஷயம் என்ன பார்க்கனும்.. எஸ்சி மற்றும் எஸ்டி குழந்தைகள் பாதிக்கப்பட்டு இருக்காங்க. விளிம்பு நிலையில் இருக்கக்கூடிய குழந்தைகளுக்கு பண உதவி செய்கிறேன்.. பொருள் உதவி செய்கிறேன், ஸ்காலர்ஷிப் கொடுக்கறேன், என்ஜிஓ வழியாக சப்போர்ட் பண்றேனு அவங்களை துஷ்பிரயோகம் பண்ணி இருக்காங்க. செக்சுவலா அசால்ட் பண்ணிருக்காங்க. இவங்களுடைய இச்சைகளுக்கு அவங்கள உட்படுத்தி இருக்காங்க. ஒரு பெரிய மனுஷன் போர்வையில ஒளிஞ்சிட்டு இருக்கக்கூடிய பீடோபைலாக இருந்துள்ளார்.
குழந்தைகள் மேல அதிகபட்சமா அவங்க ஆர்வம் காட்டுவது அவங்களுக்கு அவங்க மேல பாலியல் இச்சை இருக்கும். அவங்கள பாலியல் ரீதியாக யூஸ் பண்ணனும்னு நினைப்பாங்க. இதெல்லாம் பீடோபைல் அப்படின்னு சொல்லலாம். சொன்னயில் தேனாம்பேட்டை மாதிரி ஒரு முக்கியமான ஏரியா. அங்க இந்த குற்றச்செயல் கிட்டத்தட்ட 25 வருஷமா நடக்குது.. ஆனா பாதிக்கப்பட்ட ஒருத்தவங்க கூட வெளிய வந்து சொல்லல. சாந்தியே அப்யூஸ் தான் ஆயிருக்காங்க, ஆனா என்ன பண்ணிருக்காங்க சாந்தி தான், இவருக்கு உறுதுணையாகவும் இருந்திருக்காங்க இந்த மாதிரியான செயல்பாடுகளை செய்வதற்கு பாதிக்கப்பட்ட நாம தடையா இருக்கணும்னு அவங்க சிந்திக்கவே இல்லை. இதில் ஆதாயம் தேடியும் இருக்கிறார்கள்.
2025 ஆகஸ்ட் மாதம் ஆறாம் தேதி வந்து இந்த வீடியோ எவிடன்ஸ் கிடைச்சிருக்கு அதுக்கப்புறம் 7ம் தேதி FIR பைல் பண்றாங்க. செப்டம்பர் 2026 18ஆம் தேதி அன்னைக்கு ஆர்சிஎஸ் சார்ஜ் ஷீட் க்ளோஸ் பண்ணி நெகட்டிவ் ரிப்போர்ட்ன்னு சொல்லிட்டு சொல்லி க்ளோஸ் பண்றதுக்கு முற்படுறாங்க. அப்போது தான் பத்மா என்ற மாண்புமிகு நீதியரசர் அவர்கள் மீண்டும் விசாரிக்கணும் என்று உத்தரவு போடுறாங்க.
அங்கீகாரத்தை கொடுக்கறா ஒருத்தங்க, பவர்ல இருக்காங்க இல்ல ஒருத்தங்க, பணம் படைத்தவர்களாக இருக்கறாங்க அப்படின்னா நீங்க வந்து குழந்தைகளை அல்லது பெண்களை அப்யூஸ் பண்ணலாம் உங்களுக்கு யார் அந்த ரைட்ஸ கொடுக்கறா? அந்த குழந்தைகளுடைய ஒட்டுமொத்த வாழ்க்கையில இது அவர்களுக்கு என்ன மாதிரியான உளவியல் ரீதியான பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
இந்த வழக்கில் சரியாக விசாரித்து யாரெல்லாம் சம்பந்தப்பட்டு உள்ளார்களோ, அரசியல் பலம் படைத்தவங்க யாரா இருந்தாலும் அத்தனை பேருமே தண்டனைக்குரியவர்கள் தான். அவர்களுக்கு சரியான தண்டனையை வாங்கி கொடுங்க. இந்த வழக்கு சிபிஐ -இடம் ஹேண்ட் ஓவர் பண்ணுங்க.
மேலும் குழந்தைகளை பெற்றோர்கள் எவ்வாறு அணுக வேண்டும் அவர்களுக்கு எந்த மாதிரியான விழிப்புணர்வுகள் வழங்கப்பட வேண்டும் என்பது குறித்து குறிப்பிட்டுள்ளார் சமூக செயற்பாட்டாளர் கல்யாணந்தி.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்