"டீலிங் பேசிய போலீஸ்?.. சிக்கிய வாட்ஸ்அப் chat-கள்?" வீரமணி வழக்கில் சாந்தியிடம் 200 கேள்விகள்.. துளைத்தெடுத்த SIT!

தேசிய அளவில் பேசப்பட்டு வரும் இந்த விவகாரத்தில் விவாதம் நடத்தவும், வீடியோக்கள், புகைப்படங்களை வெளியிடவும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதை அரசியலாக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.
Veeramani Case
"டீலிங் பேசிய போலீஸ்?.. சிக்கிய வாட்ஸ்அப் chat-கள்?" வீரமணி வழக்கில் சாந்தியிடம் 200 கேள்விகள்.. துளைத்தெடுத்த SIT!
Published on: 
Updated on: 
1 min read

தமிழகமே ஊற்றுநோக்கும் வீரமணி வழக்கில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வழக்கில் புதிய திருப்பங்கள் நடந்துகொண்டிருக்கின்றன.

ஏற்கெனவே கைது செய்யப்பட்ட ஜெம் வீரமணியிடம் வேலை செய்யும் மகேந்திர சிம்ஹன் மற்றும் அவரது மனைவி சாந்தி ஜாமீன் மனு தாக்கல் செய்த நிலையில் 3 நாள் விசாரணை நடத்த அவகாசம் கேட்டிருந்தனர் காவல்துறையினர்.

இரண்டாம் நாள் விசாரணையில் அவர்களிடம் 200க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டதாகவும் பல விவரங்கள் சேகரிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

இதுவரையில் வீரமணி, சாந்தி, மகேந்திர சிம்ஹன் மற்றும் கணேசன் உட்பட சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அருண் ஐபிஎஸ், கண்ணன் ஐபிஎஸ், யாஸ்மின் உள்ளிட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்னும் சில அதிகாரிகள், அரசியல்வாதிகள் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர்.

தேசிய அளவில் பேசப்பட்டு வரும் இந்த விவகாரத்தில் விவாதம் நடத்தவும், வீடியோக்கள், புகைப்படங்களை வெளியிடவும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதை அரசியலாக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் சாந்தி மற்றும் மகேந்திர சிம்ஹன் தம்பதியிடம் விசாரணை நடத்திய காவல்துறையினர், "வீரமணியிடம் எத்தனை ஆண்டுகள் பணியாற்றினீர்கள்? அவருடைய வெளிவட்டார தொடர்புகள்? அப்பாவி சிறுமிகளை எப்படி மூளைச்சலவை செய்து அழைத்து வந்தீர்கள்? சிறுமிகளை அழைத்து வர இடைத்தரகர்களாக செயல்பட்டது யார்? யார்?

உங்களுக்கும் வீரமணிக்கும் எப்போது கருத்து வேறுபாடு வந்தது? வீரமணியை மிரட்டி பணம் பறிக்க யார், யாரை அணுகினீர்கள்?" எனப் பல கேள்விகளைக் கேட்டு துளைத்தெடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.

இருவரிடமும் 8 மணி நேரம் விசாரணை நடந்ததாகவும் 200க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

வீரமணி ஏறத்தாழ 30 ஆண்டுகள் இதுபோன்ற சிறுமிகளை பாலியல் இச்சைக்கு பயன்படுத்தும் கொடூரத்தில் ஈடுபட்டு வந்ததால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர், குற்றத்துக்கு உடந்தையாக இருந்தது, குற்றத்தை மறைக்க உதவியது எத்தனை பேர் என்ற தகவல்கள் காவல்துறையால் திராட்டப்பட்டு வருகின்றன.

மேலும் வீரமணி, சாந்தி, மகேந்திர சிம்ஹன், கணேசன் ஆகியோரின் செல்போன்களை ஆய்வு செய்த போலீசார், செல்போன் அழைப்புகள் வாட்ஸ் அப் chatகளை ஆதாரமாகக் கொண்டு அடுத்தகட்ட விசாரணைகள் மேற்கொள்வர் எனக் கூறப்படுகிறது.

Veeramani Case
ஜெம் வீரமணி வழக்கில் மகனுக்கு ‘Look Out Notice’.. 2008-லேயே ரயில்வே பணியை ராஜினாமா செய்த கண்ணையா - 18 ஆண்டுகளாக SRMU-வில் அதிகாரத்தில் இருப்பது எப்படி?

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com