Udhayanidhi Stalin speech 
தமிழ்நாடு

"தினமும் பேப்பர் படித்தால் மட்டும் போதாது" - காட்டமாக கேள்விகளை வீசிய உதயநிதி.. சட்டப்பேரவையில் வெடித்த காவிரி விவகாரம்!

பயிர்க்கடன் தள்ளுபடிக்காகத்தான் விவசாயிகள் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

Vinvizhi Leninton

3-வது நாளாக இன்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் காவிரி விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்து பல்வேறு கேள்விகளை எழுப்பினார். கர்நாடகாவில் அனைத்து கட்சி கூட்டத்தினை கூட்டி பேசும்போது ஏன் தமிழக அரசு அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டுவதை தவிர்க்கிறது? என்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

முதலமைச்சர் கர்நாடகா செல்கிறார் என்று வேளாண் துறை அமைச்சர் ஒரு பேட்டி கொடுக்கிறார். பின்பு அவரே அதனை மறுத்து பேசுகிறார். பிறகு 2 அமைச்சர்கள் அதிகார பூர்வமாக நாங்கள் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று குக்கிரார்கள். பின்பு 13 பேர் கொண்ட குழு ஒன்று செல்கிறது என்று கூறுகிறார்கள். இதனையடுத்துது, கர்நாடக முதலமைச்சர், தமிழக முதல்வர் வரத் தேவையில்லை; நாங்கள் தண்ணீர் தர தயாராக இல்லை என்று அவர் தெரிவித்தார். இந்நிலையில், அவர் முன்னவர் செங்கோட்டையன் குறுக்கிட்டு எழுந்து, எதிர்க்கட்சி தலைவர் ஒவ்வொன்றாக குறிப்பிட்டு பேசிக்கொண்டு இருப்பது மரபிற்கு ஏற்புடையதாக இல்லை என்று பேசிய நிலையில் அவையில் சலசலப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, சபாநாயகர் சுருக்கமாக பேசி அவையின் கவனத்தை ஈர்த்து பேசி அமரக்கோரினார்.

தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சி தலைவர், முதல்வர் வரத்தேவையில்லை என்று கர்நாடக முதல்வர் கூறியநிலையில், அவர் அங்கு செல்ல நினைத்தாரா?, ஏன் செல்ல நினைத்தார்?, தற்போது அவரின் நிலைப்பாடு என்ன? என்பது குறித்து பேசினார். பின்னர், முழு பயிர் கடன் தள்ளுபடி குறித்து பேசியநிலையில், சபாநாயகர் குறுக்கிட்டு கவனஈர்ப்பிற்கான நேரம் நிறைவடைந்த்தது என்றும் மீண்டும் பேச லைப்பதாகவும் கூறி எதிர்க்கட்சி தலைவரை அமரக் கோரினார். ஆனாலும், சலசலப்பிற்கு பின்பு சபாநாயகர் அனுமதித்ததால், பயிர்க்கடன் பிரச்சனைகளை குறித்து பேசினார். பயிர்க்கடன் தள்ளுபடிக்காகத்தான் விவசாயிகள் போராடிக்கொண்டிருக்கிறார்கள். இந்த முழு பயிர்க்கடன் தள்ளுபடிக்கு எவ்வளவு காலம் தேவைப்படும் என்று கூறவேண்டும்" என்று பேசினார்.

டெல்டா பகுதியில் இருக்கக்கூடிய விவசாய சங்க பிரதிநிதிகளை சந்தித்து பேசும் ஒரு கூட்டத்தை கூடவேண்டும். குறுவையில் நஷ்டத்தை சந்தித்துள்ள விவசாயிகளுக்கு இந்த அரசு உரிய இழப்பீடு வழங்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். திமுக ஆட்சியில் 6.5 லட்சம் ஹெக்டர் அளவிற்கு குருவை சாகுபடி நடந்தது என்று அவர் குறிப்பிட்டார். ஆனால் இன்று இந்த வருடம் இந்த ஆட்சியில வெறும் 1.5 லட்சம் ஹெக்டேர் அளவுக்கு தான் குருவை சாகுபடி நடந்துள்ளது. நீங்கள் 'ஸ்பெஷல் பேக்கேஜ்'னு சொல்லி 134 கோடி அறிவித்தீர்கள், அதை எத்தனை பேருக்கு கொடுத்தீர்கள்? என்பதை இந்த அவையில் தெரிவிக்க வேண்டும், ஏதாவது கணக்கெடுப்பு நடத்தி இருக்கிறீர்களா? என்று எதிர்க்கட்சி தலைவர் தனது கேள்விகளை எழுப்பினார். இந்நிலையில், குறுக்கிட்ட முதலமைச்சர் பேசத்தொடங்கினார். அப்போது வாய்ப்பு தரவேண்டு எபடப்பாடி பழனிச்சாமி கோரினார். இதனால் அவையில் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டது. எதிர்க்கட்சி தலைவர் பேசிமுடித்தபின்னர் அனுமதி தரப்படும் என்று அவைத்தலைவர் கூற எனக்கு பயப்படவேண்டாம் விதிக்கு பயப்படுங்கள் என்று காட்டமாக சபாநாயகர் பேசினார்.

பின்னர், முதலமைச்சர் பேசத்தொடங்கினார், அதில் அவர் காவிரி விவகாரத்தில் எதிர்கட்சி சில விவரங்களை கேட்டுள்ளார்கள். காவிரி நமக்கு உயிர் ஆதாரம், நமது உணர்வு ரீதியான ஒன்று. அதனால் அதை வைத்து அரசியல் செய்யும் எண்ணம் துளிக்கூட நமது அரசுக்கு இல்லை, அதுக்கான அவசியமும் இல்லை என்று முதலமைச்சர் பேசினார். மேகதாது விவகாரத்தில நாம் எல்லாரும் சேர்ந்துதான் தீர்மானம் போட்டோம். அதை நேர்முக கடிதமா மாண்புமிகு பிரதமர் அவர்களுக்கும் அனுப்பி வைத்துள்ளோம். அதோடு நாம் அப்படியே இருந்துவிடவில்லை என்று பேசினார். இதனைத்தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், 'ஸ்பெஷல் பேக்கேஜ்' என்பது அனைத்து கட்சியின் ஆட்சிக்காலத்திலும் கொடுக்கக்கூடிய ஒன்றுதான். வற்றாட்சி நிவாரணமாக நீங்கள் என்ன தரப்போகிறீகள்? இரண்டிற்கும் வித்தியாசம் இருக்கிறது என்று பேசினார். தினமும் காலையில் பேப்பர் படித்தால் மட்டும் போதாது, அனைத்து கட்சியினரை கூட்டி அவர்களது கோரிக்கை என்னவென்று கேட்கவேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்