Tamil Nadu by-election 2026 
தமிழ்நாடு

“முதலமைச்சர் கத்தாதீங்க.. BP வந்துரும்" - பெட்டி பாமா இல்ல.. பல்டி பாமா! உதயநிதி பேச்சால் தாராபுரத்தில் சிரிப்பலை

ஜெயிக்கவச்சிறேன்.. போயிட்டு வாங்கனு சொன்னீங்க. கடைசில பெரிய அல்வாவா குடுத்துடீங்க எனக்கு"

Vinvizhi Leninton

இன்று தாராபுரத்தில் திமுக வேட்பாளர் எஸ். சுகன்யாவை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஈடுபட்டார்.

மக்கள் கூட்டத்திற்கு நடுவே பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர், திமுகவிற்கு வாக்களிப்பீர்களா? என்று கேட்க அவர்களும் வாக்களிப்போம் என்று சத்தமாக கூறினர். அதற்கு அவர், "இப்படிதான் 5 மாசத்துக்கு முன்னாடி தாராபுரத்தில் வந்து வாக்கு கேட்டேன். ஜெயிக்கவச்சிறேன்.. போயிட்டு வாங்கனு சொன்னீங்க. கடைசில பெரிய அல்வாவா குடுத்துடீங்க எனக்கு" என்று அவர் பேச கூட்டத்தில் சிரிப்பலை எழுந்தது. தொடர்ந்து பேசிய அவர், நீங்க பெட்டி பாமாவுக்கு ஓட்டு போட்டீங்கனா.. அவங்க நூத்துல ஒன்னாதா இருப்பாங்க. ஆனால், சகோதரி சுகன்யாவுக்கு வாக்களிசீன்கனா உங்களில் ஒருத்தரா நிச்சயம் இருப்பாங்க" என்று பேசினார்.

பின்னர் தேர்தலில் தவெக எவ்வாறு ஆட்சியமைத்தது என்பது குறித்து பேசினார். "கடந்த தேர்தலில் திமுக வெற்றி வாய்ப்பை இழந்துவிட்டது. ஆட்சியை அமைக்க 234 தொகுதிகளில் 118 MLA-கள் தேவைப்படுவர். ஆனால், தவெக வெறும் 107 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது என்றும் அவர்கள் எப்படி ஆட்சி அமைத்தார்கள் என்றால்.. நம்மோடு கூட்டணி வைத்து, நம்ம தலைவரோட பெயர சொல்லி, புகைப்படத்தை காட்டி, திராவிட மாடலினுடைய சாதனைகளையெல்லாம் சொல்லி வாக்கு கேட்டு, நம் கூட்டணியில் இருந்தவர்கள் எல்லாம் ஜெயித்தார்கள்" என்று பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர், "சில பேர் சொல்லிட்டு போனாங்க, சில பேர் சொல்லாம போனாங்க. 'துரோகிகள்' சொல்லாமலேயே போனாங்க. அந்த துரோகிகளை கடைசி வரைக்கும் நாங்கள் மறக்கமாட்டோம் நீங்களும் மறக்காதீர்கள்" என்று ஆவேசமாக பேசினார். இதனைதொடர்ந்து, "அதன் பிறகுதான் அவர்கள் ஆட்சியமைத்தார்கள். அது பத்தலனு போனமுறை நீங்கள் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் இருந்து ஒரு MLA-வை தேர்ந்தெடுத்து சட்டமன்றத்திற்கு அனுப்பினீர்கள். ஆனா, இப்போ இருக்குற முதலமைச்சர் என்ன பன்றாரு?, நம்ம கூட்டணியில் இருந்த சில கட்சிகளை உருவுனாரு. அதன் பிறகு, அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை இரண்டா உடைச்சி, அதுல இருக்கக்கூடிய சில MLA-க்களை பெட்டிய குடுத்து வாங்கிட்டாரு".

அப்போது கூடத்தில் இருந்து 'சோஃபா' என்று கூற "கட்சி தலைவர்களுக்கெல்லாம் சோஃபா" என்று பதில் கூறினார் உதயநிதி. "வெறும் MLA மட்டும் வந்த பெட்டிதான். அதான் இப்போ ஆளுங்கட்சியுடைய வேட்பாளர் பெயரையே மாற்றி வச்சிருக்கீங்க" என்று கூறி கூட்டத்தை நோக்கி, "என்ன பேரு?.. பெட்டி பாமாவா?" என்று கேட்டார். "அதான் நேற்று தலைவர் பேசும்போது, 'பெட்டி பாமா இல்ல பல்டி பாமா. சாதாரண பல்டி இல்ல அந்தர் பல்டி'. அதாவது, அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் நீங்க வாக்களித்து, இரட்டை இலைக்கு வாக்களிச்சி நீங்க அனுப்பியிருக்கிங்க.

அவங்க MLA-வா பதவி ஏற்க இருந்த நாளு மே 12. ஆனா, வெறும் 12 நாள்ல மே 25ம் தேதி அங்க இருக்கக்கூடிய சபாநாயகர சந்திச்சி, நான் கட்சி மாறுறேன்னு சொல்லி, அவங்க கிட்ட பெட்டிய வாங்கிகிட்டு, உடனே ராஜினாமா செஞ்சி.. இன்னைக்கு வேற ஒரு கட்சியில போய் சேர்ந்து அவங்ககிட்டயே MLA சீட்ட வாங்கி, இப்போ மீண்டும் உங்ககிட்ட வேற சின்னத்துல வாக்கு கேக்குறாங்கன்னா.. இங்க இருக்கக்கூடிய தாராபுரம் மக்கள் ஏமாளிகள், நாம என்ன சொன்னாலும் கேப்பாங்க. இங்க இருக்கக்கூடிய தாராபுரம் மக்கள் சுயமரியாதை இல்லாதவங்க. அவங்க நிச்சயம் நம்ம சூழ்ச்சிக்கு அடிமையாயிருவாங்க. பயந்து ஓட்டு போட்டுருவாங்க அப்புடிங்குற நினைப்புல மீண்டும் உங்கள தேடி வந்துருக்காங்க" என்று உதயநிதி பேசினார்.

"நேற்று முன்தினம் பார்த்தீங்க. முதலமைச்சர் வந்தாரு. ஆனா, நீங்க முதலமைச்சருடைய பேச்சையெல்லாம் கேட்டிருக்கீங்களா?. முதலமைச்சர் இரண்டு இடத்துல பேசுனாரு. மதுராந்தகத்துல போய் காட்டு கத்தலு. பொதுவா அவரு எந்த பொதுக்கூட்டத்துல பேசுனாலும் சரி, அதுலயும் முக்கியமா சட்டசபைக்கு போனா காதுல பஞ்சி வச்சிக்கிட்டுதான் போகணும் அந்த மாதிரித்தான் கத்துவாரு. நாங்க எல்லாம் சொல்லி சொல்லி தயவு செஞ்சி கத்தாதீங்க BP வந்துற போகுது. கத்தாதீங்க கத்தாதீங்க" என்று கூறியதாக பேசினார்.

"முந்தாநாளு தாராபுரத்தில் பேசினார், காத்தாம என்ன பண்ணிட்டாரு நடிக்க ஆரம்பிச்சிட்டாரு. வேட்பாளர் 'பெட்டி பாமா' நல்ல பேசிக்கிட்டு இருக்காங்க. பின்னாடில இருந்து ஒரு அமைச்சர் பேசுனதுயெல்லம் போதும் 'பெர்ஃபாமன்ஸ்'-அ ஆரம்பிங்க சொன்னதும் அந்த அம்மா ஓ..னு அழுவுறாங்க. அந்த அம்மா ஏன் அழுவுறாங்க?, அந்த அம்மாக்கு ஓட்டுப்போட்ட நீங்கதான் அழுவனும்" என்று மக்களிடையே பேசினார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்