சமூக வலைதளங்கள் மற்றும் யூடியூப் தளங்கள் மூலமாக அரசியல் கருத்துக்களை பகிர்ந்து வரும் பிரபல யூடியூபர் மாரிதாஸ், அண்மைக்காலமாக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தலைமையிலான அரசின் செயல்பாடுகள் மற்றும் அமைச்சர்களின் நடவடிக்கைகள் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்தார். இதனால் மாரிதாஸ் மீது தவெக நிர்வாகிகள் புகாரளித் நிலையில், தமிழக அரசுக்கு எதிராகவும், பொது அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலும் சில கருத்துகள் பதிவிடப்பட்டதாகக் கூறி, சென்னை மாநகர சைபர் கிரைம் காவல்துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.இதையடுத்து, வழக்கின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு சென்னை சைபர் கிரைம் தனிப்படை காவல்துறையினர் மதுரைக்கு விரைந்தனர்.
தொடர்ந்து மதுரை மாநகர காவல்துறையினரின் உதவியுடன், மதுரை சூர்யா நகர் பகுதியில் உள்ள மாரிதாஸ் இல்லத்தைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் காவல்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கையின் பேரில், யூடியூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டார். மாரிதாஸ் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கின் தன்மை, எந்த குற்றப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, அவர் வெளியிட்டதாகக் கூறப்படும் குறிப்பிட்ட வீடியோக்கள் என்ன என்பன குறித்து காவல்துறை தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகவில்லை. அவரிடம் நடத்தப்படும் விசாரணைக்குப் பின்னரே முழுமையான விவரங்கள் வெளியாகும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், மாரிதாஸ் கைது செய்யப்பட்ட சம்பவம் சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் பரவலான விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. கருத்துச் சுதந்திரம், அரசியல் விமர்சனங்களின் எல்லை, சமூக ஊடகங்களின் பொறுப்பு உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் மீண்டும் விவாதப் பொருளாக மாறியுள்ளன. எனவே தற்போது மாரிதாஸ் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கடைசி மூன்று பதிவுகள் தான் கைது செய்யப்பட்டதற்கு காரணம் என அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வரும் நிலையில் அந்த பதிவுகள் மீண்டும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அமைச்சர் கீர்த்தனா பற்றிய பதிவு :
இவனுக்காக வீட்டை விட்டு வெளியேறினாரா அமைச்சர் கீர்த்தனா?! பெயர் மதன்.. ஏம்மா இவனை ஏம்மா இரவு பகலாக கூட்டிட்டு சுற்றிகிறீர்? அமைச்சர் தனி பாதுகாப்பு அதிகாரிகளை விட்டு விட்டு இவனுடன் சென்று அமைச்சர் என்ன செய்கிறார் என்பதை ஆளும் விஜய் தரப்பு விளக்கம் அளிக்க வேண்டும். ஏன் எனில் ஒரு சின்ன அரசின் கொள்கை முடிவு கூட பல ஆயிரம் கோடி வரத்தகத்தில் பாதிப்பு ஏற்படுத்தும் அளவுக்கு அரசு அமைச்சரவை பாதுகாப்போடு இருப்பது அவசியம்.
அது கசிந்தால் போது பங்கு சந்தையில் சூதாட்டம் உச்சம் தொடும். அப்படி சென்சிட்டிவான துறையில் இருந்து கொண்டு இப்படி இருப்பது தமிழகத்தின் தலைகுனிவு.. தொடர்ந்து தமிழகத்தின் முதலீடுகள் ஆந்திராவை நோக்கி செல்வது பெரும் சந்தேகத்தையும் - கீர்த்தானா நடவடிக்கைகள் பெரும் கேள்விகளையும் எழுப்புகிறது.. இந்த கீர்த்தனாவிற்கும் விஜய் ரசிகர் மன்றத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. இவர் முழுக்க முழுக்க ஆதவ் வட்டத்தில் இருந்த நபர்.
அமைச்சர் ஆதவ் அர்ஜுனன் குறித்த பதிவு:
ஏன்ம்பா லாட்டரி ஆதவ் ! உன் மாமனார் லாட்டரி திருடன் அக்கவுண்டன் பழனிச்சாமி கொலை செய்யப்பட்ட கேஸ் மீண்டும் விசாரனைக்கு வருமா - நீதி கிடைக்குமா? இல்லை மூடப்படுமா! , உன் மாமியார் லீமா ரோஸ் சகோதரன் ஜான் பிரிட்டோ எங்கே திரியுறான்! என்ன ஹவாலா வேலை பார்க்கிறான் என்பதை விசாரிக்கப்பட வேண்டிய வழக்குகள் அனைத்தும் ஊத்தி மூடப்படுமா? கொஞ்சம் உன் காந்தி புகைப்படம் வைத்து அம்பேத்கார் என பேசி ஊரை ஏமாற்றும் யுக்தியை விட்டு விளக்கம் தரவும்.
ஆதவ் தற்போது சிறு துறைமுகங்கள் சார்ந்த அமைச்சகத்தையும் தன் கையில் வைத்திருப்பது ஆபத்தானது தமிழகத்திற்கு.. தமிழகத்தின் எல்லை தாண்டிய கடத்தல்கள் , போதை கடத்தல்களும் செய்வதற்கு ஜான் பிரிட்டோ சிண்டிக்கேட் கடத்தலுக்கும் இந்த சிறு துறைமுகங்கள் உதவிகரமாக இருக்குமோ என்ற கேள்வியும் இணைகிறது… எனவே ஆதவ் + லீமா ரோஸ் கும்பல் மொத்த தமிழகமும் விரட்டி அடிக்க கேள்விகள் கேட்பது முதலில் அவசியம்.லாட்டரி மாபியா மீண்டும் தமிழகத்தை தன் கொடூரமான காசு வெறிக்கு வேட்டையாக கிளம்பியுள்ளது…
தவெக ஆட்சி குறித்த பதிவு :
கடந்த ஒரு மணி நேரத்தில் 87 முறை மின்சாரம் செல்வதும் பின் low கரண்டாக வருவதுமாக இருக்கிறது. டேய் வீட்டில் ஒரு பொருள் மிச்சம் இருக்காதுடா இப்படி மின்சாரம் வந்தா. கரண்ட் மொத்தமா கூட நிறுத்தி போட்டு தொலைங்கடா, இப்படி power fluctuation மொத்த மின்சாதன பொருட்களையும் நாசம் செய்துவிடும்..
நடுத்தர குடும்பம் EMI போட்டு வாங்கி வச்ச பொருளேல்லாம் பழுதாகுமே என வருத்தமே இல்லாம எப்படியா எருமை மாடு மாதிரி ஆட்சி நடத்துறேங்க! மின் விசிறி ஆரம்பித்து பிரிட்ஜ் , டீவி வரை எல்லாம் நாசமாக போவது உறுதி. விஜய் யோவ் என்னய்யா நீ ஆலோசனை வழங்கின.. அப்படி என்ன தான் நீங்க நிர்வாகம் பண்றேங்க… எருமை ஆட்சி.. என கூறியுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.