உலகம்

தோட்டத்தில் விளைந்த கை! அதிர்ச்சியில் விவசாயி... வியப்பில் ஆழ்ந்த சீன கிராமம்

தான் ஒரு சடலத்தைத்தான் தோண்டிக் கொண்டிருக்கிறோம் என்று அஞ்சி அருகில் இருப்பவர்களை அழைத்திருக்கிறார்

மாலை முரசு செய்தி குழு

சீனாவின் ஒரு முதியவர் சமீபத்தில் அறுவடை செய்த சேனைக்கிழங்கு ஒன்று மனிதக் கையை ஒத்திருந்த நிலையில் அப்பகுதியில் அது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில், முதியவர், தனது தோட்டத்தில் காய்கறிகளை எடுக்க சென்றுள்ளார். அதற்காக அவர் நிலத்தை தோண்ட தொடங்கியுள்ளார். அப்போது, மனிதக்கை வடிவிலான ஒன்றினை அவர் கண்டிருக்கிறார். தான் ஒரு சடலத்தைத்தான் தோண்டிக் கொண்டிருக்கிறோம் என்று அஞ்சி அருகில் இருப்பவர்களை அழைத்திருக்கிறார். தோண்டியப் பின்தான் தெரிந்திருக்கிறது, அது மனிதக்கை அல்ல, சேனை கிழங்கு என்று. தனித்துவமான வடிவமுள்ள இந்தக்கிழங்கு ஐந்து தனித்தனி "விரல்கள்" கொண்டிருக்கிறது. மேலும், அவற்றுள் இடதுபுறமுள்ள விரல் மற்றவற்றை விடக் குட்டையாக, கட்டைவிரலைப் போல அமைந்துள்ளது. அந்த "விரல்களின்" நுனிகள் கூட நகங்களைப் போலவே வடிவம் கொண்டு காணப்படுவதால் அது பார்ப்பதற்கு மனிதக்கையை போலவே இருந்திருக்கிறது. இந்த கை வடிவிலான கிழங்கினைக் கண்டு வியப்பதற்காக, அப்பகுதி மக்கள் அந்த முதியவரின் வீட்டிற்குத் திரண்டு வந்துள்ளனர்.

அந்த முதியவரின் உறவினரான ஹுவாங் என்பவரும் அது தொடர்பான காணொளியை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இதனால் பலர் அந்த கிழங்கினை வாங்க ஆர்வம் காட்டிவருகின்றனர். மேலும், இந்த கிழங்கினை RMB 8,000 (S$1,490) வரை விலைபேசும் வாய்ப்புகள் வந்ததாகவும், ஆனால் அந்த முதியவர் அதை விற்க மறுத்துவிட்டதாகவும் ஹுவாங் கூறியிருக்கிறார். தற்போது இந்த கிழங்கினை விற்பதை அல்லது அவர்களே வைத்துக்கொள்வது எனபது குறித்து ஆலோசித்து வருவதாக கூறுகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.