கடந்த 2019-ஆம் ஆண்டு உலகையே உலுக்கிய கொரோனா பெருந்தொற்றிலிருந்து மீளவே 2 ஆண்டுகளாகிவிட்டது. எண்ணற்ற உயிரிழப்புகள், வேலையின்மை, புலம்பெயர்தல், குழந்தை திருமணம் என கொரோனா காலத்தில் மிக மோசமான சமூக சூழல் உருவானது.
அதிலிருந்து மீண்டு ‘அப்பாடா’ என நாம் உட்கார ஆரம்பிப்பதற்குள் ஒமிக்ரான் அச்சம் தொற்றியது, ஆனால் ஒமிக்ரானால் பெரும் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை..ஆனால் தற்போது மீண்டும் கொரோனா தொற்று பெருகி வருவது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. புதிய வகை கொரோனா வைரஸ் சிங்கப்பூர், ஹாங்காங், சீனா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் JN 1 எனப்படும் புதுவகை கொரோனா வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா தொற்று மெல்ல அதிகரிப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
மத்திய சுகாதார சேவைகள் துறை சார்பில் டெல்லியில் முக்கிய ஆலோசனை கோட்டம் நடைபெற்றது . இதில் செய்தியாளர்களை சந்தித்த “அதிகாரிகள் இந்தியாவில் மே 19 நிலவரப்படி 257 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாகவும் இது அஞ்சத்தக்க அளவு அல்ல என்றும் தெரிவித்தனர். மேலும் இந்த 257 பேருக்கு தொற்றின் தீவிரம் மிகக்குறைவாகவே இருப்பதாகவும் மருத்துவமனை அனுமதி தேவைப்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கேரளாவில் சுமார் 100 பேருக்கு கொரோனா தொற்று உள்ள நிலையில் ஒருவர் அதனால் இறந்துள்ளார். கேரளாவில் தற்போது காய்ச்சல், தலைவலியால் பாதிக்கப்படுவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதையும் நாம் கவனிக்க வேண்டும். ஒமைக்ரான் வகை கொரோனா வைரசின் திரிபாக கருதப்படும் JN1 வேகமாக பரவும் தன்மை கொண்டது என்றும் உடலின் இயல்பான நோய் எதிர்ப்புத்திறனை மீறி பாதிப்பு ஏற்படுத்தக்கூடியது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது..
காய்ச்சல், தொண்டை வலி, இருமல், உடல் வலி, நுகரும் திறன் பாதிப்பு போன்றவையே புது வகை கொரோனாவுக்கும் அறிகுறி.. எனினும் பிற வகை ஒமிக்ரான் வைரஸ்களை விட இது தீவிர பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்கான ஆதாரம் எதுவும் இல்லை என்றும் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த கொரோனா மீண்டும் புது அலையை உருவாக்குவதறகு முன்பு அரசுகள் கவனமாக் செயல்படுவது அவசியம்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்