AI development risks 
உலகம்

“நமக்கு நேரம் குறைந்துகொண்டே இருக்கிறது.." - 10 ஆண்டுக்குள் அழியப்பகும் மனித இனம்! AI குறித்து வெளியான பகீர் எச்சரிக்கை!

அடுத்த பத்தாண்டுகளுக்குள் செயற்கை நுண்ணறிவு அனைத்து மனிதர்களையும் அளித்து விடுவதற்கான வாய்ப்பு

Vinvizhi Leninton

கூகுள் டீப்-மைண்ட் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் ஒருவர், இந்தத் தொழில்நுட்ப வளர்ச்சி "அனைத்து மனிதர்களையும் கொன்றுவிடும்" என்று எச்சரிக்கை விடுத்திருப்பது உலகளவில் மிகப்பெரிய விவாதத்தை கிளப்பியுள்ளது. மேலும், இந்த கொடூர விளைவை தவிர்ப்பதற்கான நேரம் நமக்கு இல்லை என்றும், நேரம் குறைந்துகொண்டே வருகிறது என்றும் அவர் உலக மக்களை எச்சரிதுள்ளார்.

"இந்த தசாப்தத்தின் முடிவில் செயற்கை நுண்ணறிவு நம் அனைவரையும் கொன்றுவிடும்" என்று கூறி, இதுவும் தனது பதவி விலகலுக்கு இது ஒரு முக்கிய காரணம் என மானுடவியல் ஆய்வாளர் ஜேக்கப் காக்சன் கடந்த வாரம் தெரிவித்திருந்த நிலையில், இந்த கருத்தானது செயற்கை நுண்ணறிவால் ஏற்படக்கூடிய ஆபத்து குறித்த பொதுமக்களிடம் மிகப்பெரிய அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்தியது. பின்னர், மானுடவியல் விஞ்ஞானி இவான் ஹூபிங்கர், காக்சனின் கருத்துகளுக்குப் பதிலளித்து, அவர் கூறுவது சரிதான் என்றும், அடுத்த பத்தாண்டுகளுக்குள் செயற்கை நுண்ணறிவு அனைத்து மனிதர்களையும் அழித்து விடுவதற்கான வாய்ப்பு 10%க்கும் அதிகமாக இருப்பதாகத் தாம் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

"நான் சமீபத்தில் கூகுள் டீப்-மைண்ட் நிறுவனத்தில் இருந்து ராஜினாமா செய்தேன். அங்கு நான் ஏஜிஐ (Artificial General Intelligence) பாதுகாப்பு மற்றும் சீரமைப்பு ஆராய்ச்சியில் பணியாற்றி வந்தேன்," என்று பிலால் சுக்தாய் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். "செயற்கை நுண்ணறிவு நம் அனைவரையும் கொல்லும் ஆற்றலைக் கொண்டுள்ளது என்றும், இந்த கொடூர சம்பவத்தை தவிர்ப்பதற்கு நமக்கு நேரம் குறைந்து கொண்டே இருக்கிறது என்றும் நான் உறுதியாக நம்புகிறேன்" என்று அவர் தெரிவித்திருந்தார். கூகுள் டீப்-மைண்டில் பணிபுரிந்த ஆய்வுக் கட்டுரைகளை இணைந்து எழுதிய சுக்தாய், தாம் அந்த நிறுவனத்தில் ஆராய்ச்சிப் பொறியாளராகப் பணியாற்றி, பின்னர் ஜூலை 2026-ல் அந்நிறுவனத்திலிருந்து விலகினார் என்று அவரது லிங்க்ட்இன் விவரங்கள் குறிப்பிடுகிறது.

இந்த சர்ச்சைக்குரிய கவலைகள் ஒருபுறம் இருக்க, ஆந்த்ரோபிக் தலைமை நிர்வாக அதிகாரி டாரியோ அமோடி, "மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியின் வேகத்தைக் குறைக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்" என்ற செய்தி மக்களிடையே இன்னும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த செயற்கை நுண்ணறிவு குறித்த "அழிவு கண்ணோட்டம்" பற்றிய ஒரு விவாதத்தை உலகளவில் தூண்டியுள்ளதாக என்று கூறப்படுகிறது.

செயற்கை நுண்ணறிவை பாதுகாப்பாகக் கையாள்வது சாத்தியம்தான், ஆனால் "செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களுக்கு இடையில் நிகழும் கடுமையான போட்டியைத் தவிர்க்க" ஒரு ஒருங்கிணைப்பு தேவைப்படும் என்றும் சுக்தாய் தெரிவித்துள்ளார். "கடுமையான பாதிப்புகள் ஏற்படுவதற்கு முன்பே, உருவாகிவரும் இந்த பெரும் அபாயங்களைக் கையாளும் வகையில், 'செயற்கை நுண்ணறிவு மேம்பாட்டை இந்த சமூகம் சரியான விதத்தில் கையாளக்கூடிய வேகத்திற்கு நாம் கொண்டு செல்ல வேண்டும்," என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். இருப்பினும், அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த எச்சரிக்கைகளை நிராகரித்து , செயற்கை நுண்ணறிவுத் துறையின் ஒழுங்குமுறைக்கான அழைப்பு ஒரு "மோசடி" என்று சமூக ஊடகங்களில் கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்