america tariff tax regulation protest 
உலகம்

முசோலினி மாதிரியான அரசியலா? - டொனால்ட் டிரம்பை எதிர்க்கும் மக்கள்.. வரி விதிப்பில் மாற்றம் ஏற்படுமா?

சிலர் உக்ரைன் கொடியை தூக்குறாங்க, சிலர் பாலஸ்தீன துணியை போட்டு "ஃப்ரீ பாலஸ்தீன்னு" சொல்றாங்க.

Anbarasan

அமெரிக்க ஜனாதிபதி, டொனால்டு டிரம்புக்கு எதிரா மக்கள் தெருவுல இறங்கி போராட்டம் பண்ணிட்டு இருக்காங்க. இது சும்மா ஒரு நாள் கோபமோ, சின்ன சத்தமோ இல்லைங்க... நாடு முழுக்க பரவி, லட்சக்கணக்குல மக்கள் கலந்துக்கற அளவுக்கு பெருசா போயிட்டு இருக்கு. இதுக்கு பின்னாடி என்ன காரணம்? ஏன் இவ்ளோ பெரிய எதிர்ப்பு, மக்கள் என் இப்படி போராடுறாங்க.

போராட்டம் ஒரு ஊர்ல மட்டும் இல்லாம. பாஸ்டன், சிகாகோ, லாஸ் ஏஞ்சல்ஸ், நியூயார்க், வாஷிங்டன் டிசினு இப்படி பெரிய பெரிய நகரங்கள்ல, மக்கள் கூடி குரல் கொடுக்குறாங்க. ஒரு சில இடங்கள்ல "ஹேண்ட்ஸ் ஆஃப்"னு ஒரு பெயர் வச்சு, ஆயிரக்கணக்கான போராட்ட நிகழ்ச்சிகளை ஒருங்கிணைச்சு நடத்துறாங்க. சிலர் உக்ரைன் கொடியை தூக்குறாங்க, சிலர் பாலஸ்தீன துணியை போட்டு "ஃப்ரீ பாலஸ்தீன்னு" சொல்றாங்க. அதாவது, டிரம்போட உலகளாவிய கொள்கைகளையும் எதிர்க்கிற மாதிரி மக்கள் போராட்டம் நடத்துறாங்க.

சமீபத்துல டிரம்போட நிர்வாகம் சில பெரிய முடிவுகளை எடுத்துச்சு. முதல்ல சுகாதார சேவைக்கு நிதியை குறைச்சது, அப்புறம் அரசு ஊழியர்களை பெருமளவுல பணி நீக்கம் பண்ணது, இதெல்லாம் மக்களுக்கு செம கோபத்தை கொடுத்துருக்கு. இதோட டிரம்ப் சொன்ன புது வரி திட்டம் - "டாரிஃப்"னு சொல்றாங்களே, அதுவும் உலக சந்தையையே ஆட்டி வச்சிருக்கு. இந்த டாரிஃப் திட்டம் அமெரிக்காவுக்கு வெளிய இருந்து வர்ற பொருட்களுக்கு அதிக வரி போடுறது. இதனால பொருள் விலை ஏறிடும்னு மக்கள் பயப்படுறாங்க. இதெல்லாம் சேர்ந்து, "இது நம்ம நாட்டை பின்னோக்கி இழுத்துடுது"னு ஒரு பெரிய கருத்தை முன்வைக்குறாங்க அமெரிக்கா மக்கள்.

"டிரம்ப் ஒரு அதிகார பிடியில மக்களை கட்டுப்படுத்த பாக்குறாரு"னு சொல்றாங்க, மக்களும் அமெரிக்க சமூக ஆர்வலர்களும். ஒரு பக்கம், "இது முசோலினி மாதிரி அரசியல்"னு கடுமையா விமர்சிக்கிறவங்க இருக்காங்க. இன்னொரு பக்கம், "நாட்டோட பொருளாதாரத்தை காப்பாத்துறேன்னு டிரம்ப் சொல்றது சரியாதான் இருக்கு"னு அவரை ஆதரிக்கிறவங்களும் இருக்காங்க. ஆனா இப்போ மக்களோட கோபம் டிரம்போட துணை ஆலோசகர் எலான் மஸ்க்கையும் தாக்குது. "இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து நாட்டை தங்கள் கையில எடுத்துக்கிட்டாங்க"னு ஒரு குற்றச்சாட்டு சொல்றாங்க அமெரிக்கா மக்கள்.

இந்த "டாரிஃப்" விஷயத்துல அமெரிக்க மக்கள் மட்டும் இல்லாம, பிற நாடுகளும் எதிர்ப்பு தெரிவிச்சிட்டு வாரங்க,ஐரோப்பிய யூனியன், சீனா எல்லாம் எதிர்ப்பு தெரிவிச்சிருக்கு. சீனா, "வரியை ஆயுதமா பயன்படுத்தாதீங்க"னு எச்சரிக்கை விடுத்துருக்கு. 50க்கும் மேற்பட்ட நாடுகள் டிரம்போட பேச்சுவார்த்தை நடத்த முயற்சி பண்ணுதுனு அவரோட பொருளாதார ஆலோசகர் சொல்றாரு. இந்த வரி விதிப்பு உலக பங்கு சந்தை தடுமாற வைக்குதுனும், பங்கு விலைகள் சரியுதுனும். இது அமெரிக்க மக்களுக்கு மட்டும் இல்ல, உலக பொருளாதாரத்துக்கே ஒரு பெரிய சவால் மாதிரி இருக்கும் என பொருளாதார வல்லுநர்கள் சொல்றாங்க.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்