தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர், தேனாண்டாள் முரளி சென்னை அண்ணா சாலையில் உள்ள தயாரிப்பர் சங்கத்தின் அலுவலகத்தில் செய்தியாளர் சந்தித்தார்.அப்போது பேசிய அவர்
தயாரிப்பாளர்களின் நலனை கருதி புதிய தொழிலாளர்கள் அமைப்பை தொடங்கியுள்ளோம், அதற்கு தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர்கள் கூட்டமைப்பு என்ற பெயர் வைத்துள்ளோம். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கும் பெப்சி யூனியனுக்கு மட்டுமே இருந்த இந்த ஒப்பந்த முறையை பணக்கார நண்பர்களுக்காக நடப்பு தயாரிப்பு சங்கத்தில் ஆர் கே செல்வமணி மணி ஒப்பந்தம் செய்துள்ளார்.
தனுஷ் விவகாரத்தில் தயாரிப்பாளர் சங்கத்திற்கும் நடிகர் சங்கத்திற்கும், இடையில் உள்ள பிரச்சனை இதில் பெப்சி தலைவர், ஆர் கே. செல்வமணி எதற்கு கட்டப்பஞ்சாயத்து செய்ய வேண்டும்.சங்கத்தின் தலைவர் ஆர் கே செல்வமணி, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் மீது பல அவதூறுகளைச் சொல்லி வருகிறார்.
50 ஆண்டுக்கும் மேல் பாரம்பரியமிக்க தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துடன் தொழில் ஒத்துழைப்பும் விதிமுறைகளையும் பின்பற்றி இருந்தார்கள்.
ஆனால் சில காரணங்களுக்காக தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் இல்லை,என்று சொல்லி அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தில் இணைந்துள்ளார். எனவே இந்தசெயலை, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் வன்மையாக கண்டிக்கின்றோம்.
இந்த முடிவை முதலில் ஆர்கே செல்வமணி தான் எடுத்தார் ஆனால் நாங்கள் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் அதற்கு முன் வரவில்லை.
வெற்றி தோல்வி என்பது சினிமாத்துறையில் இயல்பான ஒன்றுதான் ஆனால் 90% தயாரிப்பாளர்கள் தான் இதில் பாதிக்கப்படுகின்றார்கள். எனவே இதனை சரி செய்வதற்கு சில விதிமுறைகளை நாங்கள் செயல்படுத்தும் பொழுது பெப்சி அவர்களுக்கு சாதகமாக இன்னொரு சங்கத்தில் ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளார்.
எனவே இந்த செயற்குழு கூட்டத்தில் அனைத்து தயாரிப்பாளர்களின் ஆதரவோடு தயாரிப்பாளர்களின் நலனை கருதி புதிய தொழிலாளர்கள் அமைப்பை தொடங்க உள்ளோம்.
அதற்கு தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர்கள் கூட்டமைப்பு என்ற பெயர் வைக்க உள்ளோம்.
இந்த தயாரிப்பாளர் சங்கம் எம் ஜி ஆர் ஆல் தொடங்கப்பட்டு கலைஞர் அவர்களால் வழிநடத்திய சங்கம் இப்படி பாரம்பரியமாக அமைந்த ஒரு சங்கத்தின் நிர்வாகிகள் சரியில்லை, என்பது போல பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி தயாரிப்பாளர் சங்கத்தை உதாசீனப்படுத்தியுள்ளார்கள்.
ஆர்கே செல்வமணி எப்படி மற்றொரு தயாரிப்பாளர் சங்கத்தை ஆதரித்து செயல்படுகிறாரோ நாங்களும் எங்களுக்கு வேறு வழியில்லாமல் தொழிலாளர்கள் கூட்டமைப்பு உருவாக்குவதற்கு, அவரே வழிவகை செய்துவிட்டார்.
என்றைக்குமே தயாரிப்பாளர்கள் தொழிலாளர்களுக்கு உறுதுணையாக தான் இருந்துள்ளோம், ஆனால் இதையெல்லாம் பெப்சி தலைவர் ஆர் கே செல்வமணி நினைத்து பார்க்கவில்லை. இது ஒரு தனிப்பட்ட காரணத்திற்காக தயாரிப்பாளர்களின் நிர்வாகிகளை தரை குறைவாக பேசி செயல்பட்டு வருகிறார்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கும் பெப்சி யூனியனுக்கு மட்டுமே இருந்த இந்த ஒப்பந்த முறையை பணக்கார நண்பர்களுக்காக நடப்பு தயாரிப்பு சங்கத்தில் ஆர் கே செல்லும் மணி ஒப்பந்தம் செய்துள்ளார்.
நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தில் 2023 ஆண்டு மட்டும் 18 படம் மட்டும் தான் எடுத்து உள்ளார்கள். 2024இல் 25 படம் மட்டும் தான் எடுத்து உள்ளார்கள் ஆனால் தயாரிப்பாளர் சங்கத்தில் ஒட்டுமொத்தமாக வெளியான படங்கள் 2023 இல் 225 படமும் 2024 இல் 250 படமும் எடுத்துள்ளோம், இதன்மூலம் எந்த தயாரிப்பாளர்கள் பெப்சி யூனியனுக்கு வேலை கொடுத்துள்ளார்கள் என்பது நூறு சதவீதம் உண்மையாகியுள்ளது.
இந்த தொழிலாளர்களை புறம் தள்ளிவிட்டு பணக்கார நண்பர்களுக்காக 8 10 படங்களை தயாரிக்கக்கூடிய நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தில் ஒப்பந்தம் செய்துள்ளார் ஆர்கே செல்வமணி, இதன் மூலம் தொழிலாளர்களின் மீது உள்ள அக்கறையின் காரணமாக செய்யவில்லை என்பது தெரிய வருகிறது.
எனவே தொழிலாளர்கள் மீது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு அக்கறை இருப்பதால் புதிய தொழிலாளர்கள் அமைப்பை உருவாக்கியுள்ளது.
ஒரு காலத்தில் தென்னிந்திய இயக்குனர்கள் சங்கம் பெயர் மாற்றம் செய்யப்பட்டு தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கம் என்று ஆனதோ அதேபோல தான் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய இளைஞர்களுக்கும் தற்போது இருக்கக்கூடிய தொழிலாளர்களுக்கும், வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த தொழிலாளர்கள் கூட்டமைப்பை உருவாக்கியுள்ளோம்.
ஆர்கே செல்வமணி ஒரு பேட்டியில் தயாரிப்பாளர் சங்கம் தனுஷ் விவகாரத்திற்கு தான் இப்படி செய்கின்றார்கள் என்னை அடியார்கள் போல் பயன்படுத்தி பணம் வாங்கி தர சொன்னார்கள், எங்கள் செயலாளார் பெயரை குறிப்பிட்டு கூறியிருந்தார் இது முற்றிலுமான தவறு.
தனுஷ் விவகாரம் தயாரிப்பாளர் சங்கத்திற்கும் நடிகர் சங்கத்திற்கும் இடையில் உள்ள பிரச்சனை இதில் பெப்சி தலைவர் ஆர் கே செல்வமணி இடையில் எதற்கு கட்டப்பஞ்சாயத்து செய்ய வேண்டும். தனிப்பட்ட முறையில் தனுஷ் உடைய தந்தை அவருக்கு நண்பர் என்பதற்காக இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள்?
தமிழக அரசு 65 ஏக்கரில் பெப்சி தொழிலாளர்களுக்கு நிலம் கொடுத்துள்ளார்கள் ஆனால் 15 ஏக்கரில் பொது பயன்பாட்டிற்கென்று ஒதுக்கப்பட்ட இடத்தில் கட்டிடம் கட்டி வாடகை வசூல் செய்து கொண்டிருக்கிறார்கள். அதில் வரக்கூடிய வாடகை, அந்த அமைப்புக்கு வர வேண்டும் ஆனால் இது முறையாக வருகிறதா என்பதில் சந்தேகம் உள்ளது. எனவே இதுபோன்ற பிரச்சனைகளை திசை திருப்புவதற்காக தான் தனுஷ் பிரச்சினை பற்றி எல்லாம் பேசி வருகிறார்கள்.
தனுஷ் விகாரத்தில் நாங்கள் கொடுத்த பணத்திற்கு எங்களுக்கு கால் சீட்டு தான் வேண்டும் எங்களுக்கு வட்டி வேண்டாம் ஏழு வருடத்திற்கு முன்பு என்ன, பேசி அட்வான்ஸ் கொடுத்தோமோ அதற்கு மட்டும் நடித்துக் கொடுத்தால் போதும்.
பெப்சி தொழிலாளர்களுக்கு ஒரு நாள் சம்பளம் தரவில்லை, என்றால் படத்தின் ஹார்ட் டிஸ்கை எடுத்துக்கொண்டு செல்கிறார்கள் ஆனால் தயாரிப்பாளர் மூன்று கோடி ரூபாய் கொடுத்துவிட்டு தற்போது வரை அமைதியாக இருக்கிறார். ஆனால் இந்த விஷயத்தை கொச்சைப்படுத்தி திசை திருப்பி நாங்கள் செய்வது தான் நியாயம் என்பது போல் பேசி வருகிறார்,இன்னும் பல குற்றச்சாட்டுகள் உள்ளது அவர் மீது.
தயாரிப்பாளர் சங்கத்திற்கு துரோகம் செய்துவிட்டு நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தில் கையெழுத்துட்டு உள்ள நிர்வாகிகள் மீது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் நடவடிக்கை எடுக்கும்.
பெப்சி தொழிலாளர்கள் நாங்கள் புதிதாக உருவாக்கியுள்ள தமிழ் திரைப்பட தொழிலாளர்கள் கூட்டமைப்பில் இணைந்து கொள்ளலாம் நாங்கள் தொழிலாளர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் பாதுகாப்புக்காக தான் இந்த சங்கம் ஆரம்பித்துள்ளோம்.
இரு சங்கத்திற்கும் இடையே உள்ள பிரச்சினையை ஊதி பெரிசாக்கி புதிய சங்கத்தில் இணைவதற்காக ஆர் கே செல்வமணி இது போன்ற பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.
ஆர் கே செல்வமணி நன்றி மறந்து விட்டு நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தில் ஒப்பந்தம் கையில் திட்டு இருக்கிறார்..
நடிகர்களை வெளியில் இருந்து அழைத்து வரும்பொழுது அவர்களுக்கு சரியான சம்பளம் செல்வதில்லை என்ற குற்றச்சாட்டு ஒன்று இருக்கிறது அந்த விவகாரத்தில் பெரிய ஊழல் நடப்பதாக எங்களுக்கு தகவல் கிடைக்கிறது.
தயாரிப்பாளர்கள் தரப்பிலிருந்து சரியான சம்பளம் கொடுக்கப்பட்டு வருகிறது, அதற்கான ஆதாரமும் எங்களிடம் உள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்
.