உள்நாட்டு சந்தையில் எரிபொருள் விலை உயர்வை தடுக்க பெட்ரோல் ஏற்றுமதிக்கு தடை விதிப்பதாக ரஷ்ய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
உள்நாட்டு பயன்பாட்டிற்கும் விநியோகத்தர்களுக்கும் முன்னுரிமை அளிக்கவும் எரிபொருள் விலைகளை நிலைப்படுத்தவும், ஏப்ரல் 1 முதல் பெட்ரோல் ஏற்றுமதிக்குத் தடை விதிக்கப் போவதாக ரஷ்ய அரசு அறிவித்தது. மத்திய கிழக்கில் அமெரிக்கா-ஈரான் மோதலால் உலகளாவிய எரிசக்தி சந்தையில் நிலவும் தொடர்ச்சியான நிலையில்லாத தன்மையால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய அரசு தெரிவித்துள்ளது. இந்த நெருக்கடி உலகளாவிய எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களின் விலைகளில் குறிப்பிடத்தக்க ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்தும் எனவும் தெரிகிறது. ஆனால் வெளிநாடுகளில் ரஷ்ய எரிசக்திக்கான தேவை வலுவாக உள்ளது என்றும் துணைப் பிரதமர் அலெக்சாண்டர் நோவக் கூறினார். உள்நாட்டு பெட்ரோலியப் பொருட்கள் சந்தையை மறுஆய்வு செய்ய நோவக் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியானது.
கூட்டத்தின் போது, உள்நாட்டு எரிபொருள் விலைகள் கணிக்கப்பட்ட அளவைத் தூண்டுவதாகவும் இதனால் ரஷ்ய விநியோகஸ்தர்களும் பயனாளர்களுக்கு பாதிக்க என்பதால் அதை தடுக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் நோக்கத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. எண்ணெய் சுத்திகரிப்பு விகிதங்கள் மார்ச் 2025-ஆம் ஆண்டு நிலைகளுக்கு இணையாக சீராக இருப்பதாகவும், இது நிலையான உள்நாட்டு விநியோகத்தை உறுதி செய்வதாகவும் எரிசக்தி அமைச்சகம் தெரிவித்தது.
உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு, போதுமான பெட்ரோல் மற்றும் டீசல் எரிபொருள் கையிருப்பு உள்ளதையும், சுத்திகரிப்பு ஆலைகளின் உற்பத்தித் திறன் உயர்வாகப் பயன்படுத்தப்படுவதை யும் தொழில்துறை நிறுவனங்கள் உறுதிப்படுத்தின. "உள்நாட்டு எரிபொருள் விலைகள் முன்கணிப்புகளுக்கு மேல் உயர்வதை தடுக்க ரஷ்ய அதிபரின் குறிக்கோளுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது," என்று ரஷ்ய அரசாங்க அறிக்கை தெரிவித்தது.
தற்போது ரஷ்ய அரசு ஏப்ரல் 1 முதல் பெட்ரோல் ஏற்றுமதிக்குத் தடை விதிக்கும் தீர்மானத்தை வரைவு செய்யுமாறு எரிசக்தி அமைச்சகத்திற்கு நோவாக் அறிவுறுத்தினார். வரலாற்று ரீதியாக ரஷ்யா ஒரு நாளைக்கு சுமார் 120,000 முதல் 170,000 பீப்பாய்கள் பெட்ரோல் ஏற்றுமதி செய்து வருகிறது. ரஷ்ய எண்ணெய் பொருட்களின் முதன்மை வாங்குபவர்களில் அடங்கியுள்ள சீனா, துருக்கி, பிரேசில், ஆப்பிரிக்கா மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு இந்த அறிவிப்பு ஒரு பின்னடைவாக அமைந்துள்ளது.
இது உலகளாவிய எரிபொருள் சந்தையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என தெரிகிறது. இந்தியாவுக்கு எரிபொருள் இறக்குமதி செய்ய இரண்டு பக்கங்களை சார்ந்துள்ளது. வளைகுடாவில் இருந்தும், ரஷ்யாவிடமிருந்தும் கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்துவந்த நிலையில் போர் பதற்றத்தால் வளைகுடாவில் இருந்து வரும் கப்பல்கள் கடந்த சில வாரங்களாக தடைபட்டது. ஆனால், இப்போது இந்த இரண்டு மார்கெட்டும் மூடப்பட்டுள்ளது செய்யப்பட்டிருக்கிறது. அதனையடுத்து இந்தியாவில் மட்டுமில்லாமல் உலகளாவிய சந்தையிலும் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வந்தது. சில நாடுகள் எரிபொருள் பயன்பாட்டிற்கு சில கட்டுப்பாடுகளை வித்தித்து வருகிறது. பிலிப்பைன்ஸ் முன்னதாக அவரச நிலையைபிரகடனம் அறிவித்தது. அதனையடுத்து ஆஸ்திரேலியாவிலும் எரிபொருள் பயன்பாட்டிற்கு கட்டுப்பாடுகள் விதிக்க பட்டது. இந்தியாவிற்கு ஈரான் அரசு ஹார்மூஸ் ஜலசந்தியில் அனுமதி அளித்திருந்தாலும் இந்த அறிவிப்பு பங்குசந்தியிலும் பின்னடைவை ஏற்படுத்தும் என தெரிகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.