எரிபொருள் பற்றாக்குறையால் திணறும் ஆஸ்திரேலியா!அதிகரித்து வரும் தட்டுப்பாடு.. உலகத்தலைவர்களின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

ஆஸ்திரேலியாவின் இரண்டு பெரிய மாநிலங்கள் முழுவதும் நூற்றுக்கணக்கான எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் எரிபொருள் தீர்ந்துவிட்டது..
fuel shortage
Published on
Updated on
2 min read

ஆஸ்திரேலியாவில் பெட்ரோல் தட்டுப்பாடு, நாட்டின் எரிபொருள் நெருக்கடி மோசமடைந்து வருவதால், ஆஸ்திரேலியாவின் இரண்டு பெரிய மாநிலங்கள் முழுவதும் உள்ள நூற்றுக்கணக்கான எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் எரிபொருள் தீர்ந்துவிட்டது என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

ஈரான் மீது அமெரிக்காவும்-இஸ்ரேலும் நடத்தும் கூட்டு தாக்குதலின் காரணமாக, உலகநாடுகளில் எரிபொருள் தட்டுபாடு அதிகரித்து வருகிறது. மேலும், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் அவசர நிலைபிரகடனம் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது ஆஸ்திரேலியாவிலும் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. விக்டோரியா மற்றும் நியூ சவுத் வேல்ஸ் அரசாங்கங்களின் புள்ளிவிவரங்களின்படி, இந்த இரு மாநிலங்களிலும் உள்ள 520 பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு நிலவுகிறது.

புதன்கிழமை அன்று நியூ சவுத் வேல்ஸ் முதலமைச்சர் கிறிஸ் மின்ஸ் வெளியிட்ட அறிக்கையில், மாநிலம் முழுவதும் உள்ள 313 எரிபொருள் நிலையங்களில், அவர்கள் வழக்கமாக விற்கும் குறைந்தபட்ச எரிபொருள் கூட கையிருப்பில் இல்லை என்பதை தெரிவித்தார். சர்வதேச எரிசக்தி முகமையின் தலைவர் ஃபாத்திஹ் பிரோல், இந்த வாரம் தேசிய பத்திரிகையாளர் மன்றத்தில், "வரலாற்று காணாத எரிசக்தி நெருக்கடி ஏற்பட்டுள்ளது" என்று விவரித்தார். மேலும், "முன்னணியில் ஆசியா உள்ளது" என்றும் அவர் எச்சரித்துள்ளார். ஏனெனில், ஆசியா எண்ணெய் மற்றும் எரிபொருளை அதிகளவில் இறக்குமதி செய்கிறது, மேலும் மத்திய கிழக்கு நாடுகளின் எண்ணெயை பெருமளவில் சார்ந்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளின் நிலவி வரும் போரின் காரணமாக, எண்ணெய் விநியோகத்தில் ஏற்படும் இடையூறு, ஆசியாவில் தொடங்கி, இறுதியாக ஆஸ்திரேலியா வரை அதன் அலை பரவியுள்ளது என்றும் அவர் கூறினார்.

நியூ சவுத் வேல்ஸ் மற்றும் விக்டோரியா ஆகிய இரு மாநிலங்களிலிருந்தும் கிடைக்கும் புள்ளிவிவரங்கள், பெருநகர மற்றும் பிராந்தியப் பகுதிகள் ஆகிய இரண்டிலும் பற்றாக்குறை நிலவுவதைக் காட்டுகின்றன. விக்டோரியாவில் பெட்ரோல் இல்லாத 115 பெட்ரோல் நிலையங்களில், 61 பெருநகரப் பகுதிகளிலும், 54 மாநிலத்தின் பிராந்திய மற்றும் கிராமப்புறப் பகுதிகளிலும் அமைந்திருக்கின்றன என்று அந்நாட்டு அரசு கூறியிருக்கிறது. நெருக்கடியைச் சமாளிக்க நியூ சவுத் வேல்ஸ் அரசாங்கம் இரண்டு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருவதாக மாநிலத்தின் தற்போதைய பிரதமர் கிறிஸ் மின்ஸ் கூறிருக்கிறார். தேவைப்படும் இடங்களுக்கு விநியோகம் சென்றடைவதை உறுதி செய்வதற்காக, மாநில அரசால் சேகரிக்கப்பட்ட தரவுகளை எரிசக்தி மற்றும் வளங்கள் அமைச்சர் லில்லி டி'அம்ப்ரோசியோவும், மாநிலத்தின் எரிசக்தி கட்டுப்பாட்டாளரும் பயன்படுத்தி வருவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாநிலத்தின் 24 மணி நேர விலைக் கட்டுப்பாட்டு விதிமுறைகள் மற்றும் அதிக விலைக்கு விற்பனை செய்வதைத் தடுக்கும் சட்டங்களுக்கு இணங்கி எரிபொருள் நிலையங்கள் இணங்குகின்றனவா? என்பதை உறுதி செய்வதற்காக, விக்டோரியன் அரசாங்கம் ஆய்வாளர்களின் கணக்கெடுப்பு அதிகரித்து வருகிறது.

தற்போது, கியூபா, பிலிப்பைன்ஸ், இலங்கை போன்ற நாடுகளின் வரிசையில் தற்போது ஆஸ்திரேலியாவும் எரிபொருள் தட்டுப்பாட்டை சந்தித்து வருகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com