ஜம்மு-காஷ்மீரில் கடந்த ஏப்ரல் 22 -இல் உள்ள பஹல்காம் பைசரன் பள்ளத்தாக்கில் கேளிக்கையில் ஈடுபட்டிருந்த சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றது. இதில் 2 வெளிநாட்டு பயணிகள் உட்பட 26 பேர்உயிரிழந்தனர். இச்சம்பவம் நாட்டில் பெரும் அமைதியின்மையை விதைத்துள்ளது. மேலும் இந்திய எல்லைகளில் போர் குறித்த அச்சம் நிலவுகிறது.
இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னால் பாகிஸ்தான் இருப்பதாக கூறப்படுகிறது. இதை பாகிஸ்தான் மறுத்திருந்தாலும், இந்த தாக்குதலில்
நிகழ்த்திய The Resident Front பாகிஸ்தானுடன் தொடர்புடையதாக கூறப்படுறது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பல வகையில் எதிர் வினையாற்றி வருகிறது இந்தியா.
சிந்து நதிநீர் நிறுத்தம்!
சிந்து நதி நீர் ஒப்பந்தம் செப்டெம்பர் 19, 1960 -இல் கையெழுத்தானது , இந்தியாவில் ரவி, சட்லெட்ஜ், பியாஸ் ஆகிய நதிகளையும் பாகிஸ்தானின் சிந்து, சீலம், செனாப் ஆகிய நதிகளையும் ஒன்றிணைத்து பாகிஸ்தானில் பாய்கிறது.
சிந்து நதியின் 20% மட்டுமே இந்தியாவில் உள்ளது, ஆனால் பாகிஸ்தானில் உள்ள 2 மாகாணங்கள் இந்த நதிநீரையே நம்பி இருக்கின்றன. இதற்கு முன்பு ராணுவ வீரர்களின் மீது தாக்குதல் நடத்தியபோது கூட சிந்து நதிநீர் ஒப்பந்தம் முறிக்கப்படவில்லை. ஆனால் தற்போது பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால் ஒப்பந்தம் முறியடிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் முக்கிய நீராதாரமாக விளங்கும் சிந்துவின் நீர் வரத்து தடை செய்யப்பட்டது பாகிஸ்தானின் பொருளாதாரத்திற்கு பெரும் பிரச்சனையாக வந்துள்ளது.
விசா ரத்து!
தாக்குதலை தொடர்ந்து இந்தியாவிற்கு வருகை தந்துள்ள அணைத்து பாக்கித்தானியர்களின் விசாவையும் ரத்து செய்து அவர்களை உடனடியாக தாயகம் திரும்புமாறு அறிவுறுத்தியுள்ளது.
மேலும் பாகிஸ்தானியர்கள் மருத்துவ விசாவை 29 தேதிக்கு பிறகு காலாவதியாகும் என்பதால், அனைத்து பாகிஸ்தானியர்களும் நாடு திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வான் சேவைகள் ரத்து!
தாக்குதலை ஒட்டி பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான அனைத்து போக்குவரத்து மூலங்களும் மூடப்பட்டன. மேலும் பாகிஸ்தான் வான் பரப்புப்புக்குள் எந்த இந்திய விமானமும் பார்க்கக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
வாகா எல்லை மூடல்
நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பஞ்சுபோல் அமைந்துள்ள இந்திய - பாகிஸ்தான் எல்லையான வாகா- அட்டாரி சுங்கச்சாவடிகள் மூடப்பட்டுள்ளன. மேலும் இரு நாட்டு வீரர்களும் பரஸ்பர கை குலுக்கும் சம்பிரதாய செயல்களும் தற்போதைக்கு நிறுத்தப்பட்டுள்ளது.
சிம்லா ஒப்பந்தம் ரத்து
பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா சிந்து நதி நீரை நிறுத்தியிருக்கிறது. 240 மில்லியன் மக்களின் வாழ்வாதாரம் இதனால் பாதிக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது. மேலும் இந்த நடவடிக்கையை வன்மையாக கண்டித்த பாகிஸ்தான் “இது போருக்கான அறைகூவல்” என்று கூறியிருக்கிறது, 1972 -இல் போரை மீறி உறவுகளை சீரமைக்கும் நோக்கோடு கொண்டுவரப்பட்ட ‘சிம்லா ஒப்பந்தத்தை” பாகிஸ்தான் தற்காலிகமாக ரத்து செய்துள்ளது. மேலும் இந்தியா வாகா எல்லையை முடியாத தொடர்ந்து, பாகிஸ்தானும் தற்போது வாக எல்லையை மூடியிருந்தது.
இரண்டு நாடுகளும் தொடர்ந்து கட்டுப்பாடுகளை விதித்து வருவதால், எல்லையில் பதற்றம் நிலவுகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்