15 வருஷமா.. மனைவி மீது சந்தேகம்.. அதுக்கு மாமியாருக்கா இப்படி ஒரு தண்டனை கிடைக்கணும்? முடிந்த "மீனாட்சி"யின் வாழ்க்கை!

தடுக்கச் சென்ற அலமேலுவின் தாயார் மீனாட்சியையும்...
man killed his mother in law and attacked his wife
man killed his mother in law and attacked his wife
Published on
Updated on
1 min read

புதுக்கோட்டை மாவட்டம் ராயவரம் அருகே உள்ள ஆண்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மீனாட்சி (65). இவரது இரண்டாவது மகள் அலமேலு. இவர் தர்மபுரி மாவட்டம் அய்யனார்புரம் பி.அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த சத்திய குமார் என்பவரை கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் 12 ஆம் வகுப்பும்  இரண்டாவது மகன் ஒன்பதாம் வகுப்பு படித்துவருகின்றனர். இந்நிலையில் கடந்த 15 ஆண்டுகளாக கணவனை பிரிந்த அலமேலு அவரது தாயார் மீனாட்சியுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அலமேலுவின் கணவர் சத்யகுமார் அவ்வப்போது வந்து மனைவியையும் அவரது குழந்தைகளையும் பார்த்துவிட்டு சொல்லும்போதெல்லாம் இவர்களுக்கு இடையே பிரச்சனை நடந்துள்ளது. மேலும் கடந்த 15 ஆண்டுகளாக அலமேலுவின் நடத்தையில் சந்தேகம் பட்டு அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. 

இந்நிலையில் கடந்த நான்கு தினங்களுக்கு முன்பு அலமேலுவையும் அவரது மகன்களையும் பார்க்க வந்த சத்தியகுமார் இங்கேயே தங்கிய நிலையில் நேற்று இரவு அலமேலு மீது சந்தேகப்பட்டு சண்டையிட்டுள்ளார். இந்நிலையில் அலமேலு விற்கும் சத்யகுமாருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அதனை தடுக்கச் சென்ற அலமேலுவின் தாயார் மீனாட்சியையும் , அவரது தங்கையையும் தாக்கியுள்ளார்.  இந்த அடிதடியில்  மாமியாரை சவிறகு கட்டையால் சத்தியகுமார் அடித்ததில் அவர்  சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்த மீனாட்சியின் உடலை போலீசார்  மீட்டு உடற்கூறு ஆய்விற்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் இதில் காயமடைந்த சத்திய குமாரின் மனைவி அலமேலு திருமயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரக்கூடிய நிலையில் சத்யகுமார் தப்பிச்சென்றுள்ளார். இந்த கொலை விவகாரம் தொடர்பாக அரிமளம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சத்யகுமாரை  தேடி வந்தனர். 

இந்நிலையில்  தப்பிச்சென்ற சத்யகுமார் திருமயம் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். பின்னர் திருமயம் காவல் நிலையத்திற்கு வந்த அரிமளம் காவல்துறையினர் சத்திய குமாரை கைது செய்து அரிமளம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு மது போதையில் மாமியாரை மருமகன் விறகு கட்டையால் அடித்து கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com