மியான்மரில் நேற்று [மார்ச் 28,] பகல் 12:50 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.7 என்று பதிவாகியுள்ளது, என்று ஐக்கிய அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.இதனை தொடர்ந்து ,அடுத்தடுத்த நில நடுக்கங்கள் ஏற்பட்ட நிலையில் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 700 ஆக அறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை தேடும் பணி தீவிரம் , பலியானவர்களின் எண்ணிக்கை 1000 மாக உயரக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது , 2000 பேர் காயமடைந்து உள்ளனர் . மியான்மர் சந்தித்ததில் இதுவே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் என மியான்மரின் ராணுவ ஆட்சியாளர் தெரிவித்துள்ளார் .
மியான்மரின் மண்டலே, நேபிடா உள்ளிட்ட பல நகரங்களில் நூற்றுக்கணக்கான வீடுகள் மற்றும் கட்டடங்கள் இடிந்து விழுந்தன. மண்டலேயில் உள்ள பிரபலமான மா சோய் யேன் மடாலயம் உட்பட பல கட்டடங்கள் சேதமடைந்தன.
மேலும் படிக்க:Vibe" கலாச்சாரம்.. நாசமான "knowledgeable Chennai crowd" பெருமை - ஊரே கைகொட்டி சிரிக்கும் அவமானம்!
தாய்லாந்தின் தலைநகரான பாங்காக்கிலும் (மண்டலேயில் இருந்து 600 மைல்களுக்கு மேல் தொலைவில்) நிலநடுக்கம் உணரப்பட்டது. அங்கு கட்டுமானத்தில் இருந்த 33 மாடிக் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் குறைந்தது 10 பேர் உயிரிழந்தனர், மேலும் 100-க்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கின்றனர்.
மியான்மரின் சாகைங் பகுதியில் 90 ஆண்டுகள் பழமையான பாலம் ஒன்று இடிந்து ஆற்றில் விழுந்தது. மண்டலே-யங்கூன் நெடுஞ்சாலையின் சில பகுதிகளும் சேதமடைந்தன.
அதிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் , மியான்மரில் உள்ள பல்வேறு இடங்கள் பலத்த சேதம் அடைந்துள்ளது , உணவு மருந்துகளுக்கும் மற்றும் அத்தியாவசிய , பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது , மியான்மரின் ராணுவ வீரர்களும் தன்னார்வலர்களும், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க்கும் பணிகளில் தீவிரம் .
மக்கள் இடிபாடுகளில் காயமடைந்ததையும் , நில நடுக்கத்திற்கு பயந்து கட்டிடங்களை விட்டு வெளியேறுவதும் , அத்தியாவசிய தேவைகள் இல்லாமல் கஷ்டப்படுவதையும் குறித்த வீடியோக்கள் , சமூக வலைத்தளங்களில் வெளியாகி , பார்ப்பவர்களை மனதை பதற வைக்கிறது .
இதனை அடுத்து தொலைக்காட்சியில் பேசிய மியான்மரின் , ராணுவ ஆட்சியாளர் "மின் ஆங் ஹிலெய்ங்" இந்த நில நடுக்கத்தால் , மியான்மர் பெரும் சேதத்தை சந்தித்து உள்ளதாகவும் , மற்ற நாடுகளோ அல்லது தனியார் அமைப்போ , தனி நபர்களோ உதவ நினைத்தால் அதை வரவேற்பதாக தெரிவித்துள்ளார் .
இந்த நிலையில் பல்வேறு நாடுகளும் தனியார் நிறுவனங்களும் , மியான்மர் மக்களுக்கு உதவி கரங்களை நீட்டிவருகிறது , இதில் நமது இந்தியாவும் , அமெரிக்காவும் முன்னிலை வகுக்கிறது. மியான்மருக்கு கிடைத்த உதவிகளை பற்றி தகவலை தெரிந்துகொள்ளவோம் .
இந்தியா:
இந்தியா மியான்மருக்கு முதல் கட்டமாக 15 டன் நிவாரணப் பொருட்களை அனுப்பியுள்ளது. இதில் கூடாரங்கள், படுக்கை விரிப்புகள், போர்வைகள், தண்ணீர் சுத்திகரிப்பு சாதனங்கள், சூரிய விளக்குகள், மின்சார ஜெனரேட்டர்கள், அத்தியாவசிய மருந்துகள் மற்றும் தயாராக சாப்பிடக்கூடிய உணவு பொருட்கள் அடங்கும்.
இந்திய விமானப்படையின் C-130J விமானம் மூலம் இந்த பொருட்கள் ஹிண்டன் விமான தளத்தில் இருந்து மியான்மருக்கு அனுப்பப்பட்டன.
பிரதமர் நரேந்திர மோடி, "இக்கட்டான சூழலில் மியான்மர் மற்றும் தாய்லாந்து மக்களுக்கு இந்தியா துணை நிற்கும்" என்று உறுதியளித்தார். மேலும், வெளியுறவுத்துறை அமைச்சகம் மியான்மருடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளது.
இந்தியா மீட்பு மற்றும் மருத்துவ குழுக்களையும் அனுப்பி, மனிதாபிமான உதவிகளை விரிவுபடுத்தியுள்ளது.
அமெரிக்கா:
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், "மியான்மருக்கு உதவுவோம்" என்று அறிவித்தார். அவர், "இது மிக மோசமான பேரிடர், நாங்கள் நிச்சயமாக உதவுவோம்" என்று வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.
அமெரிக்கா மியான்மருடன் ஏற்கனவே தொடர்பு கொண்டு, உதவி திட்டங்களைத் தயாரித்து வருகிறது. மேலும், அமெரிக்க தூதரகம் மியான்மரில் அவசரமற்ற சேவைகளை நிறுத்தி, அமெரிக்க குடிமக்களுக்கு உதவுவதற்கு முன்னுரிமை அளித்துள்ளது.
நிதி உதவி மற்றும் மருத்துவ பொருட்கள் அனுப்பப்படுவதற்கான திட்டங்கள் பரிசீலனையில் உள்ளன.
தாய்லாந்து:
தாய்லாந்து பிரதமர் பேடோங்டார்ன் சினாவத்ரா, மியான்மருக்கு ஆதரவு தெரிவித்து, உதவி செய்ய தயாராக உள்ளதாக அறிவித்தார். தாய்லாந்து தனது சொந்த பாதிப்புகளை சமாளித்தாலும், மியான்மருக்கு மனிதாபிமான உதவி வழங்குவதற்கு முன்னுரிமை அளித்துள்ளது.
தாய்லாந்து அரசு, மியான்மருக்கு அவசர மருத்துவ உதவி மற்றும் உணவு பொருட்களை அனுப்புவதற்கான திட்டங்களை அறிவித்துள்ளது.
இந்தோனேசியா :
இந்தோனேசிய ஜனாதிபதி பிரபோவோ சுபியாண்டோ, மியான்மர் மற்றும் தாய்லாந்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, மீட்பு முயற்சிகளுக்கு தேவையான அனைத்து ஆதரவையும் வழங்க தயாராக இருப்பதாக X தளத்தில் பதிவிட்டார்.
இந்தோனேசியா, ஆசியான் (ASEAN) உறுப்பு நாடாக, மியான்மருக்கு நிவாரண பொருட்கள் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை அனுப்புவதற்கு திட்டமிட்டுள்ளது.
பிரான்ஸ்:
பிரான்ஸ் அரசு மியான்மருக்கு உதவுவதற்கு தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது. மருத்துவ உதவி மற்றும் நிதி ஆதரவு வழங்குவதற்கான திட்டங்கள் பரிசீலிக்கப்படுகின்றன.
பிரான்ஸ், மருத்துவர்கள் மற்றும் மீட்பு குழுக்களை அனுப்புவது குறித்து ஆலோசித்து வருகிறது.
சீனா:
சீனாவின் யுன்னான் மற்றும் சிச்சுவான் மாகாணங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டதால், சீனா மியான்மருக்கு உதவ முன்வந்துள்ளது. உள்ளூர் ஊடக அறிக்கைகளின்படி, சீனா மருத்துவ உதவி மற்றும் நிவாரண பொருட்களை அனுப்ப தயாராக உள்ளது.
இதே போல பல்வேறு அமைப்புகளும் , உதவிகளை தொடர்ந்து வழங்கி வருகிறது .
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்