கோவையில் உயர்ரக போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக பெண் காவல் உதவி ஆய்வாளரின் மகன் உள்ளிட்ட ஏழு பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.
போதை பொருள் தடுப்பு நடவடிக்கையாக கோவையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், மேட்டுப்பாளையம் ரோடு, பூமார்க்கெட் அம்மா உணவகம் கேட் அருகில் போதை பொருட்கள் விற்பனை செய்து வந்த ஏழு பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து கொக்கைன் உள்ளிட்ட போதைப்பொருட்கள் மட்டுமின்றி மூன்று கார்கள், 12 செல்போன்கள் உள்ளிட்ட 70 லட்சம் ரூபாய் மதிப்பு உள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கைதான ஏழு பேரும் மகாராஷ்டிரா மற்றும் இமாச்சல பிரதேசத்தில் இருந்து கொகைன், உயர்தர குஷ், கிரீன் கஞ்சா உள்ளிட்ட பொருட்களை பெற்று தமிழகம் முழுவதும் ஒன்றரை வருடங்களாக விற்பனையில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதுமட்டுமின்றி கைதான நபர்கள் கஞ்சா விற்ற பணம் மூலம் கோவை புதூர், காரமடை டீச்சர்ஸ் காலனி உள்ளிட்ட பகுதிகளில் புதிதாக மனை வாங்கி மற்றும் வீடு கட்டி வரும் நிலையில், அவற்றை பறிமுதல் செய்ய சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் தெரிவித்துள்ளார்.
மேலும் கஞ்சா விற்பனைக்காக பயன்படுத்தப்பட்ட 12 வங்கி கணக்குகளை முடக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்
கைதான நபர்கள் ஊட்டி ,கோவையை சேர்ந்த ஐ.டி. ஊழியர்கள் மற்றும் கார் ஓட்டுனர்கள் ஆவர். அதில் மகாவிஷ்ணு என்பவர் கோவை மாவட்ட பொருளாதர குற்றப்பிரிவு பெண் சிறப்பு உதவி ஆய்வாளர் விஜய் லட்சுமியின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்