காத்மாண்டு, மார்ச் 27ம் தேதி அன்று, ராப் பாடகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய பாலேந்திர ஷா, வெள்ளிக்கிழமை நேபாளத்தின் பிரதமராகப் பதவியேற்றார். பலவீனமான அரசாங்கங்கள் மற்றும் மந்தமான நாட்டின் வளர்ச்சி வாய்ப்புகளால் நீண்ட காலமாகப் பாதிக்கப்பட்டு வரும் இந்த இமயமலை நாட்டின் அரசியல் நிலைப்புத்தன்மையை மீட்டெடுப்பதும், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதும் அவருக்கு வழங்கப்பட்ட பணிகளாகும். 35 வயதான இவர், நாட்டின் 47வது பிரதமராகப் பதவியேற்கும் மதேஷ் பகுதியைச் சேர்ந்த முதல் நபரும் ஆவார். கடந்த ஆண்டு செப்டம்பரில் நடந்த வன்முறைப் போராட்டத்தில் கே.பி. சர்மா ஓலி தலைமையிலான கூட்டணி அரசைக் பிறகு, பதவியேற்கும் பிரதமராவர். பல பத்தாண்டுகளில் நேபாளத்தின் மிக இளைய பிரதமர் ஆவார்.
தலைநகர் காத்மாண்டுவின் முன்னாள் மேயரான 35 வயதான ஷா, கடந்த ஆண்டு செப்டம்பரில் 76 பேர் கொல்லப்பட்ட ஊழலுக்கு எதிரான ஜென் Z தலைமுறைப் போராட்டங்களுக்குப் பிறகு நடந்த முதல் தேர்தலான மார்ச் 5 தேர்தலில் , அவரது மூன்று வருட ராஷ்ட்ரிய சுதந்திர கட்சி (RSP) 275 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் 182 இடங்களை வென்றதைத் தொடர்ந்து பிரதமரானார். அவர், ஜாப்பா 5 தொகுதியில், நான்கு முறை பிரதமராக இருந்தவரும், நேபாளத்தின் பாரம்பரியக் கட்சியான நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (ஐக்கிய மார்க்சிய-லெனினிச) தலைவருமான ஓலியை, சுமார் 50,000 வாக்குகள் என்ற மிகப்பெரிய வித்தியாசத்தில் தோற்கடித்தார். ஜனாதிபதி மாளிகையில் தூதர்கள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகள் கலந்துகொண்ட விழாவின்போது, 200க்கும் மேற்பட்ட இந்து பூசாரிகளும் பௌத்த லாமாக்களும் சங்கு முழக்கத்துடன் பக்திப் பாடல்களையும் அமைதிப் பிரார்த்தனைகளையும் ஓதினர்.
பதவியேற்ற பிறகு, "அரசின் செலவினங்களைக் குறைப்பதற்கு ஒரு சிறிய குழுவை அமைப்பேன்" என்ற தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், ஷா தனது அமைச்சரவைக்கு 14 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்தார். ஹார்வர்டில் கல்வி பயின்ற பொருளாதார நிபுணரான ஸ்வர்னிம் வாக்லேவை அவர் நிதி அமைச்சராக நியமித்தார். ஊழலுக்கு எதிரான போராட்டங்களின் போது நடந்த வன்முறையை விசாரித்த குழுவின் அறிக்கையைச் செயல்படுத்துவதே ஷாவின் ஆரம்பகட்ட சவால் என்றும், இது பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் முக்கிய கோரிக்கை என்றும் புரஞ்சன் ஆச்சார்யா கூறினார். மேலும், இந்தியாவும் சீனாவும் ஷாவுக்கு வாழ்த்து தெரிவித்தன.
"இமயமலை அண்டை நாட்டின் சுதந்திரம், இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் பெய்ஜிங் ஆதரவளிக்கும்" என்று சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. முப்பது மில்லியன் மக்கள் தொகை கொண்ட அந்த நாட்டில், வேலைவாய்ப்பின்மை, அதிலும் ஊழல் போன்றவை இளைஞர்கள் தலைமையிலான போராட்டம் நடத்த உந்துதலாக அமைந்தது. அந்நாட்டின் மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் வறுமையில் வாடுகின்றனர், மேலும் தினமும் சுமார் 1,500 பேர் வெளிநாடுகளில் வேலைக்காக நாட்டை விட்டு வெளியேறுகின்றனர். பல அரசாங்கங்கள் மாறி, பதவியேற்ற போதிலும், அவற்றில் ஒன்றுகூட ஐந்தாண்டு பதவிக்காலத்தை முழுமையாக நிறைவு செய்யவில்லை. தற்போது ஷா, இவையனைத்தையும் மாற்றியமைப்பார் என்று அங்குள்ள மக்களால் நம்பப்படுகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.