வர்த்தக போரை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் இரு நாடுகளும் 90 நாட்களுக்கு வரிகளை திரும்பப்பெற்றுக்கொண்டன.
அமெரிக்க அதிபர் டிரம்ப் பதவி ஏற்றதிலிருந்து, சீனா மீது வரிகளை அள்ளி வீசினார். இதானால் உலகம் முழுவதும் பெரும் வர்த்தக பதற்றம் அதிகரித்தது. இந்த பதற்றத்தினால் உலக பொருளாதாரமும் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் சமீபத்தில் ஜெனிவாவில் நடைபெற்ற அமெரிக்கா-சீனா வர்த்தக பேச்சுவார்த்தைகளின் முடிவாக, இரு நாடுகளும் 90 நாள் இடைக்கால ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளன. இதன்படி, அமெரிக்கா சீன பொருட்களுக்கு விதிக்கப்பட்ட 145% வரி விகிதத்தை 30% ஆக குறைக்கும், மேலும் சீனா அமெரிக்க பொருட்களுக்கு விதிக்கப்பட்ட 125% வரியை 10% ஆக குறைக்கும். மேலும், புதிய வரி விதிப்புகள் மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாடுகள் இடைநிறுத்தப்படுகின்றன, இது இரு நாடுகளின் வர்த்தக உறவை மேலும் சமூகமாக்கும் என நம்பலாம்..
இந்த ஒப்பந்தம் உலகளாவிய நிதி சந்தைகளில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்கின்றனர் நிபுணர்கள்.
மாற்றி மாற்றி இரு நாடுகளும் தங்களுக்குள் வரிவிதிப்புகளை நடத்திய பிறகு அமெரிக்காவும் சீனாவும் ஒரு உடன்பாட்டுக்கு ஒப்புக்கொண்டுள்ளன. இந்த ஒப்பந்தம், அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த 145% வரி விகிதத்தால் ஏற்பட்ட வர்த்தக போர் மற்றும் அதன் விளைவாக சந்தைகளில் ஏற்பட்ட அதிர்வுகளை குறைக்கும் என நம்பலாம்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்