ஆன்மீகம்

வக்கிரமடைந்தார் குருபகவான் " தனுசு ராசி முதல் மீன ராசி வரை" என்ன பலன்?

உங்களுக்கு பின்னால் மறைந்திருந்து பேசியவர்கள் கூட தற்பொழுது முன்னாள் வந்து புகழ இருக்கிறார்கள்...

மாலை முரசு செய்தி குழு

குரு பகவான் கடக ராசியில் உச்ச நிலையில் பயணித்துக் கொண்டிருக்கும் பொழுது தற்பொழுது வக்கிரம் என்ற நிலையை அடைந்திருக்கிறார் அதாவது பின்னோக்கி செல்லுதல் என்று அர்த்தம் கடகத்தில் இருந்து பின்னோக்கி மிதுன ராசியை நோக்கி தற்போது பயணித்துக் கொண்டிருக்கிறார் குரூ.... ஏற்கனவே அதிசாரமாக மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு வந்த குரு பகவான் பலரது வாழ்க்கையில் நன்மைகளை வாரி வழங்கி இருக்கிறார் குறிப்பாக குருவினுடைய அமைப்பு பொது ஜன வசியம் தான் காரணம் உயிர்களுக்கு எல்லாம் தலைவன் குரு தான் அப்படிப்பட்ட குருபகவான் உச்ச நிலையில் அடையும் பொழுது அனைத்து ராசியினருக்கும் ஏதேனும் ஒரு வகையில் நிச்சயமாக உதவிகளை செய்து கொண்டே தான் இருந்திருக்கிறார்...

தற்பொழுது வக்கிரமடையும் குரு பகவான் மிதுன ராசியை நோக்கி பயணிக்கிறார் அப்படி என்றால் அவர் மிதுன ராசியில் இருப்பது போலவே செயல்படுவார் என்பதை எடுத்துக் கொள்ளலாம்... ஏற்கனவே நீங்கள் ஆரம்பித்த வேலை நல்லவிதமாகவோ அல்லது உங்களுக்கு பிடிக்காத வண்ணமோ தற்பொழுது மாறக்கூடும்... காரணம் கடகத்தில் இருந்து குருபகவான் செயல் படுவது போல மிதுனத்தில் இருந்து செயல்பட மாட்டார்... கடக ராசி குருபகவானுக்கு மிகவும் பிடித்த ராசி காரணம் உணவின் மூலமாக உயிர்கள் வாழ்கின்றன... உயிர்களுக்கு ஆதாரமே குரு கிரகம் தான்... அதனால் தான் உணவின் உறைவிடமான கடகத்தில் கொழுப்புக்கு அதிபதியான குரு பகவான் உச்ச நிலையில் இருக்கிறார்... உயிர்களைத் தொடர்ந்து காப்பாற்றிக் கொண்டே தான் இருக்கப் போகிறார்...

அனைத்து ராசிக்குமே கடகத்தில் இருக்கும் குரு பகவானின் அருள் ஆசி கிடைத்தது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.. அப்படிப்பட்ட 6 8 12 போன்ற அசுபஸ்தானங்களுக்கு குரு பகவான் வந்தும் கூட சில ராசிக்கு மிகப்பெரிய நன்மைகளை வாரி வழங்கி இருக்கிறார்... கடக ராசிக்கு 12ஆம் வீட்டில் இருந்த குரு பகவான் ராசியை நோக்கி வந்தார்... அந்த சமயத்தில் ஆறாம் பாவமான நோய் எதிரி கடலில் மிகப்பெரிய அளவில் முழுகி தவித்தாலும் கூட ஏதேனும் ஒரு வகையில் உதவிகள் கிடைத்து அவர்கள் அதிலிருந்து மீண்டு வரத்தான் செய்தார்கள்... இப்படியாக அசுபஸ்தானங்களில் குரு பகவான் அமர்ந்தாலோ பார்த்தாலே கூட நல்ல பலன்களை வாரி வழங்குவதற்கு அவர் தயங்கியதே இல்லை... சரி வாருங்கள் இன்ன பிற ராசிகளுக்கு குரு பகவானின் வக்கிர பலன் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம்...

தனுசு ராசி:

அன்பார்ந்த தனுசு ராசி அன்பர்களே குரு பகவான் இதனால் வரை அஷ்டம ஸ்தானத்தில் பயணித்து மிகப்பெரிய பஞ்சாயத்துகளையும் சிக்கல்களையும் கொடுத்து இருப்பார் குறிப்பாக வம்பு வழக்குகளில் சிக்க வைக்க சில ஏற்பாடுகளை செய்திருக்கும் பொழுது நீங்கள் அதிலிருந்து சாமர்த்தியமாக தப்பித்து வந்திருப்பீர்கள்... உங்களுக்கு பின்னால் மறைந்திருந்து பேசியவர்கள் கூட தற்பொழுது முன்னாள் வந்து புகழ் இருக்கிறார்கள்... வேலைக்காக மிகப்பெரிய பாராட்டை பெறுவீர்கள்.... குருவின் நேர்பார்வை உங்களது ராசியின் மீது படிவதால் வீட்டில் மற்றும் வேலைத்தளத்தில் நல்ல பெயரை சம்பாதிப்பீர்கள்...

கடினமான வேலைகளையும் எளிதாக முடிக்க கூடிய நீங்கள் ராசி அதிபதியே ஏழாம் வீட்டில் பயணிப்பதால் அடுத்தவர்கள் என்ன மனநிலையில் இருக்கிறார்கள் என்பதை உணரக்கூடிய காலகட்டம்..... ஏழாம் வீட்டில் பயணிக்கும் குருபகவான் உங்களுடைய லாப ஸ்தானத்தை பார்ப்பதால் எதிர்பாராத தன வரவுகள் உருவாகும்.... குறிப்பாக உங்களிடம் சேமிப்பு உயரும்... எந்தவித சிக்கலும் இல்லாமல் வாழ்க்கையை நகர்த்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் உங்களை வந்து சேரும்.. திருமணத்திற்காக காத்திருக்கின்ற தனுசு ராசி அன்பர்களுக்கு இதோ உங்களுடைய தேகம் பொலிவு பெறும் வரன்கள் வாயில் வந்து நிற்கும்...

மகர ராசி:

அன்பார்ந்த மகர ராசி வாசகர்களே குரு பகவான் இதனால் வரை ஏழாம் வீட்டில் பயணித்து உங்களுக்கு மிகுந்த புகழை கொடுத்துக் கொண்டிருப்பார் தற்பொழுது வக்கிரநிலையை அடைந்து ஆறாம் வீட்டில் பயணித்து நல்ல வேலையை கொடுக்கப் போகிறார்... நான் கடினமாக வேலை செய்கிறேன் அதற்கான பலன்களை என்னால் அனுபவிக்க முடியவில்லை என்று ஏங்கி இருக்கும் மகர ராசி அன்பர்களே ஆறாம் வீட்டிற்குள் பிரவேசிக்க போகும் குரு பகவானால் உங்களுக்கு கடினமான வேலை மற்றும் நல்ல வேலை அமையும்.... அந்த வேலையால் பெயர் புகழ் கிடைப்பது மட்டுமல்லாமல் நல்ல வருமானமும் கிடைக்கும்... முயற்சிக்க அதிபதி குரு பகவான் ஆறாம் வீட்டில் அமர்ந்து இரண்டாம் வீட்டை பார்ப்பதால் கடினமான உழைப்பின் மூலம் கிடுகிடுவென உங்களுடைய வருமானம் உயர்ந்து கடன்களெல்லாம் அடைய வாய்ப்பு உள்ளது.... எதிரிகளைப் பற்றி கவலைப்பட வேண்டாம் அவர்கள் உங்களுக்கு முன்பாக ஒருபோதும் பேச மாட்டார்கள் உங்களுக்கு பின்னால் இருந்து பேச தான் வாய்ப்பு உண்டு.... முருகப்பெருமானின் கோவிலுக்கு சென்று அவருடைய அனுகிரகத்தை பெறுங்கள் வாழ்க்கை வளமாகும்.....

கும்ப ராசி:

அன்பார்ந்த கும்ப ராசி வாசகர்களே உங்களுடைய அமைப்புக்கு படி இதனால் வரை ஆறாம் வீட்டில் எதிரி ஸ்தானத்தில் பயணித்துக் கொண்டிருந்த குரு பகவான் தற்பொழுது வக்கிரநிலையை அடைந்து ஐந்தாம் வீட்டில் பயணிக்கிறார்.. முன்னேற்றத்திற்காக துடித்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஐந்தாம் வீடு ஒரு மிகப்பெரிய யோகமான வீடு காதல் திருமணம் வரை கைக்கூடும்.... இருவீட்டார் சம்மதத்துடன் திருமணத்தை முன் நின்று நடத்துவீர்கள்... தேகம் பொலிவு பெறும் உங்களுடைய சிந்தனை அடுத்தவர்களுக்கு உதவி செய்வது போலவே அமையும்... உங்கள் புத்திசாலித்தனத்திற்காக நீங்கள் பாராட்டப்படுவீர்கள்... அடுத்தவர்களால் பெரிதும் புகழப்படுவீர்கள்... செயல்பாடுகள் உங்களுக்கு திருப்திகரமானதாக இருக்கும்.... லாப ஸ்தானத்தை குரு பகவான் பார்ப்பதால் நீங்கள் நினைக்கின்ற லாபத்தை எட்ட முடியும்... பணப்பழக்கத்தோடு செயல்படும் காலம் தான் இது...

மீன ராசி:

அன்பார்ந்த மீன ராசி வாசகர்களே இதனால் வரையில் ஐந்தாம் வீட்டில் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பயணித்துக் கொண்டிருந்த குரு பகவான் தற்பொழுது வக்கிரநிலையடைந்து நாலாம் வீட்டிற்குள் நுழைகிறார்...நிம்மதியாக ஓரிடத்தில் அமர்ந்திருப்பீர்கள் என்றால் அந்த இடம் விட்டு இடம் போகும் வாய்ப்பு தற்போது உருவாகும் குறிப்பாக தேசாந்திரம் செல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள் நீண்ட தூர பிரயானங்களில் ஆசைப்படுபவர்களுக்கு இது ஒரு சிறப்பான காலகட்டம் தான்... வீடு மாற்றம் இடமாற்றம் தொழில் மாற்றம் போன்றவை வரும் ஆனால் அதில் நல்லது கெட்டது பார்த்து தேர்ந்தெடுப்பது நல்லது... தொழிலில் தற்பொழுது பெரிய லாபம் ஏற்படும் நான்காம் வீட்டில் பயணிக்கும் குருபகவான் பத்தாம் வீட்டை பார்ப்பதால் தொழில் வியாபாரம் முன்னேற்றம் ஏற்படுவது உடன் அதில் நல்ல பெயரும் புகழும் உங்களுக்கு கிடைக்கும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.