இந்த கோவிலில் நாம் நினத்த காரியம் நிறைவேற .கற்பூரம் ஏற்றி, இங்குள்ள சுனை நீரில் போடும் போது,.எரியும் கற்பூரம் அணையாமல் இருந்தால் எண்ணியதை நிச்சயம் நிறைவேற்றுவாள் பொன்னூத்தம்மன் என்கிறார்கள் கிராம மக்கள்.
அந்த அதிசயம் மிக்க குகைக்கோவில் கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில். பன்னிமடை என்கிற ஊர் அருகே வரப்பாளையம் என்னும் வனப்பகுதிக்குள் அமைந்துள்ளது.
மேலும் சில ஆன்மீக தகவல்களை தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்
மலை பிரதேசங்களின் மத்தியில் உள்ள வரப்பாளையத்தில் அந்த குகை கோயிலில் சக்தி வாய்ந்த தெய்வமாக வீற்றிருக்கிறாள் பொன்னூத்தம்மன்.
ஆள் அரவமற்ற காட்டுப்பாதை, நெடுமையாக வளர்ந்த மரங்கள், நிசப்தமான சூழலை அவ்வப்போது உடைத்து எரியும் பறவைகளின் ஒலிகள், இதனிடையே சற்று திகிலோடு நடக்கும் போது பொன்னூத்தம்மனின் கோவில் படிகள் பசுமையான காட்சிகளுக்கு இடையே வண்ண விரிப்பை விரித்தது போல் காட்சியளிக்கிறது.
படிகளை தாண்டி சென்றால் வாழ்க்கையில் பல படிகளை தாண்டி உயர்ந்த நிலைக்கு செல்லலாம் என்று தவழும் காற்று காதில் தூது சொல்கிறது.
கண்களுக்கு எங்கும் மங்களகரமான மஞ்சள் வண்ணத்துடன் காட்சியளிக்கும் அந்த சிறு கோவிலில் இத்தனை ஆதிசயங்களா என வியக்கவைக்கிறது.
கோவிலின் ஒரு பாறையின் அடியில் குகை போன்ற அமைப்பில் அம்மன் உள்ளே வீற்றிருக்க அங்கே நீர் ஊற்று எப்போதும் ஊறிக் கொண்டே இருக்கிறது. பொன்னீர் ஊறும் இந்த நீருற்றின் பெயரால் இங்கே வீற்றிருக்கும் சக்தி வாய்ந்த அம்மன் பொன்னூத்தம்மன் என்ற பெயரோடு பக்தர்களால் போற்றிப்புகழப்படுகிறார்.
இந்த குகைக்குக்குள் குடிகொண்டுள்ள அம்மன் இங்கு தோன்றியது எப்படி என்ற தெய்வீக சம்பவம் கேட்போர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, இங்குள்ள குருடி மலைகளுக்கு அருகில் காடுகளில்,14 வயதுடைய பொன்னம்மா என்ற இளம் பெண் ஆடு மேய்த்துக்கொண்டிருக்கிறாள். அப்போது இடியும் மின்னலும் தொடர்ந்து ஒலிக்கும் சூழலில் கால்நடைகளை வேட்டையாட வந்த நரிக்கு பயந்து அங்குள்ள ஒரு குகையினுள் பதுங்குகிறாள் அந்த சிறுமி
இச்சம்பவத்திற்கு பின் குகையை வீட்டு வெளிவாராத அந்த சிறுமி காடுகள் மலைகளின் எங்கு தேடியும் கிடைக்கவில்லை . கண்ணீருடன் நாட்கள் நரகமாய் கடந்த நிலையில், பெற்றோர்களின் கனவில் தோன்றிய சிறுமி தான் குகைக்குள் தேவியுடன் கலந்து விட்டதாகவும் குகைக்குள் என்னை வந்து பார்க்கும் படியும் அழைக்கிறாள்
பெற்றோர்கள் பதற, ஊர்மக்கள் ஒன்று சேர அனைவரும் குகைக்குள் சென்று பார்க்கும் பொது பொன்னம்மா பொன்னூத்தம்மனாக சுயம்பு வடிவில் காட்சியளித்தாள்.
அன்றிலிருந்து அந்த கிராமத்து மக்களின் அன்னையாய் விளங்கி காவலாய் காத்து நிற்கிறாள் குகையில் வாழும் பொன்னூத்தம்மன்.
காலங்கள் கடந்த நிலையில் காடு முழுவதும் தண்ணீர் பஞ்சம் எற்படவே கனவில் வந்த பொன்னம்மா, தான் சுயம்புவாக இருக்கும் இடத்தின் பின்னால் வற்றாத ஊற்று இருப்பதாகவும், அந்த ஊற்று நீர் இனி தண்ணீர் பஞ்சமில்லா நிலையை இனி உருவாக்கும் என கூறியுள்ளார். அதனை கேட்ட அக்கிராம மக்கள் அம்மனுக்கு பின்னால் இருந்த இடத்தை தோண்டியது போது, பீறிட்டு எழுந்த நீர் ஊற்று, கிராம மக்களின் தண்ணீர் பஞ்சத்த நீக்கியதோடு, இன்று வரை வற்றாது வழிந்தோடிக்கொண்டே இருக்கிறது.
அம்மனின் அற்புதத்தை அறிந்த மக்கள் அவளை குலம் காக்கும் தெய்வமாக வழிபட்டு வருவதுடன் கோவில் எழுப்பி அர்ச்சனைகளையும் ஆராதனைகளை செய்து வருகின்றனர்.
இக்கோயிலில் ஆலமரத்தின் கீழ் விநாயகர் வீற்றிருப்பதோடு. முருகன், சிவன், ஆஞ்சநேயர் தனி சந்நிதியில் அருள் பாலிக்கின்றனர். நவக்கிரக சந்நிதியும், பாறை குகையால் உருவாகிய தியான பீடமும், குகைக்கு அருகில் சிறிய அருவியும் உள்ளது.
ஒருவர் மட்டுமே நுழைய முடியும் அந்த அம்மன் குகைக்குள் நுழைந்து கற்பூரத்தை எரித்து அந்த ஊற்று தன்ணீரில் போடும் போது கற்பூரம் அணையாது எரிந்தால் நினைத்து காரியம் நிறைவேறுவதாக பக்தர்கள் திண்ணமாய் தெரிவிக்கின்றனர்
பொன்னூத்தம்மனை வேண்டினால் திருமணத்தடை நீங்கும் என்பதும், குழந்தை வேண்டி இங்குள்ள பூவரசு மரத்தில் தொட்டில் கட்டுவோருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது
காடுகளுக்கும் விலங்குகளுக்கும் கிராமமக்களுக்கும் தண்ணீர் பஞ்சத்தை தீர்க்கும் இந்த பொன்னூத்தம்மன் ஒரு அதிசய தெய்வமே
மாலை முரசு செய்திகளுக்காக கோவை ஒளிப்பதிவாளர் மாசானதுரையுடன் செய்தியாளர் சுரேந்தர் மற்றும் கலைமாமணி நந்தகுமார்
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்