அன்பார்ந்த மாலை முரசு வாசகர்களே சனி என்றாலே ஒருவருடைய தொழிலை குறிப்பிடும், சனி பகவானுக்கும் ஆய்ளுக்கும் மிக நெருங்கிய தொடர்புண்டு.... ஒருவர் நீண்ட காலம் வாழ வேண்டும் என்றால் சனி பகவானின் அருள் நிச்சயமாக தேவை... உழைப்புக்கு அதிபதி... அயராது உழைப்பாளி... சனி பகவானின் அணுக்கிரக பார்வை ஒருவருக்கு கிடைத்தால் மட்டும்தான் அவர் எழுந்து நடக்கவோ நிற்கவோ பேசவோ செயல்படவோ முடியும் என்கிறது ஜோதிட சாஸ்திரம்... பம்பரம் போல் சுற்றிக் கொண்டிருக்கிறார் என்ற வாசகத்தை கேள்விப்பட்டிருப்போம் அப்படிப்பட்ட நபர் சனியின் உச்சம் பெற்றவராக இருப்பார்... தாமத கிரகம் மந்தன் என்று சனி பகவானை கூறுவது உண்டு. ஆனால் உண்மையிலேயே சனிபகவானின் சக்தியாக பார்ப்பது அவருடைய வேகம் விவேகம் உழைப்பு போன்றவை...
சனி பகவான் ஒருவருடைய ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்து விட்டால் அவர் மிக சிறந்த உழைப்பாளியாகவும் சாதனையாளராகவும் நீண்ட ஆயுள் படைத்தவராகவும் இருப்பார் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை... பூமிக்கு சனி பகவான் மிகத் தொலைவில் இருப்பதால்தான் அவரை தாமதம் என்றும் மந்தன் என்றும் நாம் அழைக்கிறோம்... மிக வேகமான கிரகங்களாக புதன் மற்றும் துணைக்கோளான சந்திரன் பார்க்கப்படுகிறது... அவை பூமிக்கு மிக அருகிலேயே இருப்பதால் சட்டு என்று முடிவெடுக்கக்கூடிய சக்தியை அந்த இரு கிரகங்களும் நமக்கு வாரி வழங்குகின்றன... அவற்றையெல்லாம் தாண்டி மிக தொலைவில் இருக்கக்கூடிய சனி பகவான் தான் ஒரு குழந்தை இந்த மண்ணில் பிறந்து விட்டால் அவர் எவ்வளவு நாட்களுக்கு உயிர் வாழ வேண்டும் என்பதை தீர்மானிப்பவராக இருக்கிறார்....
கடினமான உழைப்பாளியாக ஒருவர் இருந்து விட்டால் நிச்சயம் இந்த பிரபஞ்சமும் இந்த பூமியும் அவருக்கு நீண்ட ஆயுளை கொடுக்கும் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை... சனியின் பேராற்றல் கொன்ற ஒருவரால் புதிதான கருவுகளை கண்டுபிடிக்கவும் அல்லது புதிய சாம்ராஜ்யத்தை உருவாக்கவோ மக்களின் நலனில் அக்கறை செலுத்தவோ மக்களின் பேராதனை பெற முடியும்... சரி வாருங்கள் அடுத்தடுத்த ராசிக்கு சனி பகவானின் வக்கிர நிவர்த்தி எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம்....
சனி பகவான் ஜூலை மாதம் 13ஆம் தேதி 2025 ஆம் ஆண்டு வக்கிரம் பெற ஆரம்பித்தார் மீன ராசியில் நேர்கதியில் பயணித்துக் கொண்டிருந்த அவர் வக்கிரம் என்று தன்னுடைய பயணத்தை பின்னோக்கி ஆரம்பித்தவர் பலருக்கு தொழிலில் ஏற்றத்தாழ்வுடன் கூடிய பலன்களை தான் கொடுத்து இருப்பார்... தற்பொழுது 28 11 2025 கார்த்திகை 12-ஆம் தேதி வக்கிர நிவர்த்தி அடைகிறார் சனி பகவான்... 2025 ஆம் ஆண்டு முடிவடைய போகிறது இந்த சமயத்தில் வக்கிர நிவர்த்தி அடையும் சனி பகவானால் எந்தெந்த ராசிக்கு என்ன பலன் என்பதை பற்றி பார்க்கலாம்...
மகர ராசி:
அன்பார்ந்த மகர ராசி வாசகர்களே இது நாள் வரையில் மூன்றாம் இடத்தில் வக்கிர நிலையில் இருந்த சனி பகவான் தற்பொழுது வக்கிர நிவர்த்தி அடைந்து மூன்றாம் வீட்டிலேயே பயணிக்க போகிறார்... சனிக்கு மிகவும் பிடித்தமான வீடு 3 என்று சொல்லலாம்.... காரணம் அவருக்கு உழைப்பது என்றால் மிகவும் பிடிக்கும் ஒருவர் உழைக்க வேண்டும் என்றால் முதலில் முயற்சி செய்ய வேண்டும் எழுந்து நடக்க வேண்டும் காரியங்களில் ஈடுபட வேண்டும் இப்படியாக ஓரிடத்திலேயே முடக்கி கிடக்காமல் சனியின் தன்மைகளாக உழைப்பு இருப்பதால் மூன்றாம் இடம் தைரியம் வீரியம் ஸ்தானம் என்று வைத்துக் கொண்டால் சனிக்கு மிகவும் மூன்று என்பது மிகவும் பிடித்தமான இடமாகும்... அமைதியாக வீட்டில் உறங்கி இருக்காமல் நீங்கள் தற்பொழுது எழுந்து குதிரை போல ஓடுவதற்கான காலகட்டம் வந்து விட்டது... ஒரு வேளைக்கு இரண்டு வேலை பார்த்தாவது குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்று தற்பொழுது மிக வேகமாக செயல்பட போகிறீர்கள்.. உங்களை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்ற அளவிற்கு மக்கள் மனதில் நல்ல பெயர் எடுக்கப் போகிறீர்கள்... யார் உங்களை என்ன சொன்னாலும் கூட அரசு விரோதமே ஏற்பட்டாலும் கூட மக்களின் ஆதரவு உங்களிடம் எப்பொழுதுமே இருக்கும்... மூன்றாம் இடத்தில் இருக்க கூடிய சனி பகவான் யாரை எப்படி கையாள வேண்டும் என்ற பிராக்டிசை உங்களுக்கு சொல்லிக் கொடுப்பார்.... ஐந்தாம் வீட்டிற்கு மூன்றாம் வீடு லாப ஸ்தானமாக வருவதால் நிச்சயமாக சனி வக்கர் நிவர்த்திக்கு பிறகு குழந்தை பேரு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து உங்களுக்கு விடுதலை உண்டாகும்... சனி பகவானின் ஆசிர்வாதத்தோடு நல்ல குழந்தை பெறும் கிடைக்கும்....
கும்ப ராசி:
அன்பார்ந்த கும்ப ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு இரண்டாம் வீட்டில் வக்கிர நிலை அடைந்த சனி பகவான் வக்கிர நிவர்த்தி அடைந்து இரண்டாம் வீட்டிலேயே பயணிக்க போகிறார்.... மிக வேகமாக உங்களுடைய பேச்சுத் திறமையை கையாண்டு அதன் மூலம் நல்ல தொழிலையும் வாழ்க்கை தரத்தையும் முன்னேற்றப் போகிறீர்கள்.. ராசியாதிபதியே சனிபகவான் ஆகி அவர் இரண்டாம் வீட்டில் நேர்வழியில் பயணிப்பதால் வாக்கு சாதுரியம் ஏற்படும்.... சபையில் நீங்கள் என்ன பேசுகிறீர்களோ அவை தான் எடுபடும்... மற்றவர்கள் உங்களுடைய ஆலோசனை கேட்டு நடக்கும் அளவிற்கு உங்களுடைய அறிவு கூர்மை அதிகமாக இருக்கும்.... இடம் வீடு மனை போன்றவை உங்களுக்கு லாபகரமாக அமையும் குறிப்பாக ரியல் எஸ்டேட் தொழில் இருப்பவர்களுக்கு இது ஒரு பொற்காலம் என்றே சொல்லலாம்..... கும்ப ராசிக்கு 12ஆம் அதிபதி இரண்டாம் வீட்டில் இருப்பதால் நீண்ட தூர பிரயானங்களை மேற்கொள்ள வாய்ப்புண்டு அதே சமயம் சுப வீரர்களாக உங்களுக்கு அமையும் வீட்டில் சுப காரியங்கள் சுபச் செலவுகள் ஏற்படலாம்.....
மீன ராசி:
அன்பார்ந்த மீன ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு சனிபகவான் ஜென்மத்திலேயே வக்கிரன்களை அடைந்து 12-ம் வீட்டை தொடர்பு கொண்டு இருந்தார் ஜான் ஏறினால் முழம் சறுக்கும் என்பார்களே அதுபோல எவ்வளவு உழைப்பு போட்டாலும் அதற்கான பலன் கிடைக்கவில்லை என்று ஏங்கி இருந்தீர்கள் அல்லவா தற்போது ஜென்மத்திலேயே சனி பகவான் நேர்கதியில் பயணிக்கும் இந்த காலகட்டத்தில் உங்களுடைய உழைப்பிற்கு ஊதியம் உங்களுக்கு கிடைக்கும்... அங்கீகாரத்துக்காக காத்திருப்பவர்களுக்கு லாபாதிபதி ராசியிலே அமர்ந்தால் அந்த அங்கீகாரத்தை பெற்று தருவார்... பேகம் பொலிவு வரும் அமர்ந்து நீங்கள் எழுந்து ஓடக்கூடிய காலகட்டமாக தான் தற்போது இது இருக்கும்... ஜென்ம சனி ஆயிற்று ஏதேனும் செய்வாரா என்ற இயக்கமும் சந்தேகமும் வேண்டாம் உங்களுடைய லாபாதிபதி மற்றும் வரியாதிபதி சனி பகவான் ஜென்மத்தில் அமரும்போது உங்களுக்கு தேவையானவற்றை கொடுத்துவிட்டு அதன் மூலம் சுபச் செலவுகளை மட்டுமே ஏற்படுத்துவார்... சனிக்கிழமை தோறும் சனி பகவான் கோவிலுக்கு சென்று தீபம் போட்டு வாருங்கள் பிரச்சனைகளிலிருந்து விடுபடுங்கள்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.