tharagu malai matha temple Admin
ஆன்மீகம்

கருணை மிகுந்த கண்கள் மெய்சிலிர்க்க வைக்கும் தரகுமலை மாதா கோயில்

கருணை மிகுந்த கண்கள் காண்போரை மெய்சிலிர்க்க வைக்கும் அன்பின் உருவம்,இறை தூதரை ஈன்றெடுத்த தாய் நித்திய கன்னி, ஜென்ம பாவமில்லாமல் பிறந்த மாதாவின் பூரண அருள் நிறைந்த ஆலயத்தை பற்றி காணலாம்.

Anbarasan

அரும்பும் மலரின் அழகே - திருவே, உருகி அழைத்தேன் உயிராய் உனையே வருத்தம் விலக்கிட வா .ஞான வடிவே நலமருள் ராணியே !

வான ஒளியே! மோனதவமே, தெளிவினைத் தந்து மனத்தின்

கவலை துடைப்பாய் கனிந்து என்று மனம் உருகி வேண்டுவோர்க்கு அன்னையாய் இருந்து அருள் வழங்கி வருகிறான் இந்த தரகுமலை மாதா.

மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியிலே தரகு புற்களால் சூழப்பட்டு கிரீடம் போல் காட்சியளிக்கும் இந்த மாதாவின் ஆலயம் விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே மலைக்குன்றின் மேல் அமைந்துள்ளது. அழகும், அமைதியும் நிறைந்த இந்த ஆலையத்தை.

பார்க்கும் போதே உள்ளம் மன அமைதி பெறுகிறது. உணர்வுகள் அன்னையை நோக்கி கை கூப்பி வணங்கத் தூண்டுகின்றது

வானுயர்ந்த மலை முகடுகளையும் அதில் தவழும் மேகங்களைத் தொடும் அளவிற்கு உயர்ந்து நிற்கும் மரங்களையும், பலவண்ண மலர்களையும், எண்ணிலடங்கா உயிரினங்களையும் கொண்டிருக்கும் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் உள்ள அந்த குன்றின் மேல் ஒரு நாள் அந்த அதிசயம் நடந்தது.

1973 ஆண்டு ஜுலை 27 ஆம் தேதி சிறுவன் ஒருவன் இந்தத் தரகு மலையிலேயே ஆடுகளை மேய்த்துக் கொண்டு சென்றபோது அவன் கண்முன்னே அந்த நிகழ்வு நடந்தது.

பசுமையான புல்வெளிகளில் படர்ந்து கிடக்கும் செடி கொடிகளின் இடையே, காட்டுப் பூக்கள் மெத்தை விரிக்க, குவிந்த நட்சத்திரங்கள் ஒன்றாய் ஜொலிக்க வானத்து மேகங்கள் சாரல் மழை பொழிய தேவனின் தாய் விண்ணிலிருந்து இறங்கி வருகிறாள். அந்த ஆடுமேய்க்கும் சிறுவனின் முன் தேவனின் குழந்தையோடு காட்சி தருகிறாள்.

மணம் வீசும் தென்றல், இசை பாடும் குயில்கள் குடை பிடிக்கும் மிக நிழல்கள் நடுவே உலக மாதா காட்சியளிக்கிறாள். அந்த காட்சியை கண்டு சிறுவனின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது

அதிசயமான சூழலில் அன்னையையும் தோற்றத்தை பார்த்து அவன் உடல் அசையாது நிற்கிறது. சற்று நேரத்தில் ஓடுகிறான் சிறுவன், ஊர் மக்களிடம் சொல்லி பதறுகிறான். கண்டேன் அன்னையை, தரகுமலை உச்சியிலே தேவமாதாவைக் கண்டேன், தேவ குழந்தையோடு காட்சி கொடுத்ததை கண்டேன் என்று கூறினான்.

இதனையடுத்து அங்குள்ள மக்கள் அன்னையும், பிதாமகனும் காட்சியளித்த இடத்தில் மலை குன்றின் மத்தியில் 1976ஆம் அண்டு இந்த மாதாக்கோயிலை கட்டி வழிபாடு செய்து வருகின்றனர். மற்ற தேவாலயங்களில் மதியம் 12 மணிக்கு மணி அடித்து பூஜை நடக்கும் ஆனால் இங்கு 11 மணிக்கு மணி அடித்து பூஜை நடத்தப்படுகிறது. இதற்கு காரணம் இயேசுவும் மாதாவும் காட்சி கொடுத்த நேரம் சரியாக 11 மணி என்பதால் அந்த புனிதமான நேரத்தில் பூஜை நடைபெற்று வருகிறது.

மலை அடிவாரத்திலிருந்து பலநூறு படிகட்டுகளை தாண்டி செல்லும் போது மலைகளில் தவழ்ந்து வரும் தென்றல் காற்று நம் களைப்புகளை, மனதில் உள்ள கவலைகளையும் நீக்குகிறது. பிள்ளைகளே வாருங்கள் என் நிழலில் இளைபாறுங்கள் என்பது போல் ஆலயம் நம்மை வரவேற்கிறது.

இயற்கை அன்னையின் சூழ்ந்திருக்க தேவனின் அன்னை உருவம் அந்த அமைதி நிறைந்த ஆலயத்தில் அழகாய் காட்சியளிக்கிறது. என் வாழ்வின் துயர்களை துடைத்திடுவாய் அன்னையே என்று பக்தர்கள் அன்னையிடம் பிராத்திப்பதை அங்கு கேட்க முடிகிறது.

இதைத்தொடர்ந்து கலவாரி மலையில் மனிதர்களின் பாவங்களுக்காக உயிர் நீத்த கருணை தேவன் ஏசுவின் திருவுரும் தியாக ஒளியாய் காட்சித்தருகிறது.

குறைகளை நீக்கி நிறைவான வாழ்க்கையை தரும் இந்த பேராலயத்திற்கு தமிழகம் மட்டுமல்ல கேரளா, கர்நாடகா போன்ற இடங்ளில் இருந்து பக்தர்கள் வந்திருந்து மனமுருகி மதாவிடம் பிரார்த்தனை செயிகின்றனர். குழந்த பேறு வேண்டியும் , திருமண தடை நிக்ககோரியும் இங்குள்ள மரத்தின் மீது வேண்டுதல் துணிகளை கட்டிச்செலுகின்றனர்.

வருடம் தோறும் பல லட்சம் மக்கள் பங்கேற்கும் மாதவின் தேர் பவனி நிகழ்ச்சி விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த மலை குன்றினை சுற்றி பொதுமக்கள் கிரிவலம் வருகின்ற போது பக்தர்களின் மனம் நிறைவடைவதாக நம்பிக்கை நிலவுகிறது. இங்குள்ள தரகு புற்கள் புனிதமாக கருதப்படுவதால் பக்தர்கள் தங்கள் வீடுகளுக்கு கொண்டு சென்று மாதாவை வணங்கி வருகின்றனர்.

தன்னை நாடி வரும் மக்களின் குறைகளை நீக்கி அருள் வழங்கும் ஆலயத்திற்கு செல்வோம் தேவனின் அருள் பெறுவோம்.

மாலை முரசு செய்திகளுக்காக ஸ்ரீவில்லிபுத்துரிலிருந்து செய்தியாளர் பாலஜியுடன் நந்தகுமார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்