அனுராக் பாஜ்பாய்.. அமெரிக்காவில் மிகப்பெரிய தொழிலதிபர். பல பில்லியன் டாலர் நிறுவனத்தின் CEO. ஆனால், இப்போது ஒரு பெரிய சர்ச்சையில் சிக்கியிருக்கார்.
அனுராக் பாஜ்பேயி இந்தியாவுல உத்தரபிரதேசத்துல இருக்குற லக்னோவுல பிறந்தவர். அங்கே லா மார்டினியர் காலேஜ்ல 2003-ல படிப்பை முடிச்சவரு. பள்ளி படிப்பு முடிச்சதுக்கு அப்புறம், அமெரிக்காவுல உள்ள மிசோரி பல்கலைக்கழகத்துல (University of Missouri) இன்ஜினியரிங் படிச்சாரு. அங்கிருந்து மாஸ்டர்ஸ் மற்றும் PhD-யை பிரபலமான MIT (Massachusetts Institute of Technology)-ல மெக்கானிக்கல் இன்ஜினியரிங்ல படிச்சு 2013-ல முடிச்சாரு. இவரோட ஆராய்ச்சி முக்கியமா தண்ணீர் சுத்திகரிப்பு (water treatment) மற்றும் தேவையற்ற உப்பு நீக்குதல் (desalination) பத்தி இருந்தது. இவரு பண்ண ஆராய்ச்சி, Scientific American இதழோட “Top 10 World-Changing Ideas” லிஸ்ட்ல இடம்பிடிச்சு உலக அளவுல பாராட்டு பெற்றது.
பிறகு, 2013-ல அனுராக், Gradiantனு ஒரு கம்பெனியை தொடங்கினாரு. இது ஒரு கிளீன் வாட்டர் டெக்னாலஜி ஸ்டார்ட்அப், அதாவது தண்ணீர் சுத்திகரிப்பு தொடர்பான புது டெக்னாலஜி உருவாக்குற கம்பெனி. இப்போ இந்த கம்பெனியோட மதிப்பு ஒரு பில்லியன் டாலருக்கு மேல (அதாவது சுமார் 8,400 கோடி ரூபாய்க்கு மேல)! 2025-ல இந்த கம்பெனி Edison Gold Award வாங்கியிருக்கு. அனுராக் இந்த கம்பெனியோட CEO-வா இருக்காரு, இவரோட தலைமையில கம்பெனி நிறைய சாதிச்சிருக்கு.
இப்போ மெயின் டாபிக்குக்கு வருவோம். 2025-ல அமெரிக்காவுல பாஸ்டன் பகுதியில, கேம்பிரிட்ஜ் மற்றும் ஹார்வர்டு பல்கலைக்கழகத்துக்கு பக்கத்துல ஒரு பெரிய ஹைடெக் விபச்சார விவகாரம் வெளியே வந்துச்சு. இதுக்கு பேரு “Cambridge Brothel Hearings”னு வச்சிருக்காங்க. இந்த விவகாரத்துல அனுராக் சிக்கியிருக்கார்.
அதாவது, கேம்பிரிட்ஜ், டெட்ஹாம், வாட்டர்டவுன் மற்றும் கிழக்கு விர்ஜினியாவுல உள்ள ஆடம்பர அபார்ட்மென்ட்கள்ல ஒரு உயர்மட்ட விபச்சார கும்பல் இயங்கி வந்திருக்கு. இந்த கும்பல், டாக்டர்கள், வக்கீல்கள், பொது அதிகாரிகள், ப்ரொஃபெசர்கள், ராணுவ அதிகாரிகள் மற்றும் பெரிய பெரிய தொழிலதிபர்கள் மாதிரியான பணக்கார, செல்வாக்கு மிக்க ஆளுங்ககிட்ட இருந்து மணிக்கு 600 டாலர் (சுமார் 50,000 ரூபாய்) வசூல் பண்ணி சேவை வழங்கியிருக்கு. இதுல பெரும்பாலான பெண்கள் ஆசிய நாடுகளைச் சேர்ந்தவங்க, அவங்கள பாலியல் கடத்தல் (sex trafficking) மூலமா இந்த வேலைக்கு வந்திருக்காங்கனு சொல்லப்படுது. இது தொடர்பான விசாரணையும் நடந்து வருது.
அனுராக் இந்த இடங்களுக்கு பல தடவை போயிருக்காரு என்றும், இந்த சேவைகளுக்கு பணம் கொடுத்திருக்காருனும் குற்றச்சாட்டு இருக்கு. 2025 தொடக்கத்துல ஒரு ஸ்டிங் ஆபரேஷன்ல (sting operation) இவரு கைது செய்யப்பட்டாரு. இந்த விவகாரத்துல அவரு மட்டுமில்ல, 30-க்கும் மேற்பட்ட பிரபலமான ஆளுங்க பெயரும் வெளியாகியிருக்கு. இந்த கும்பல் ரொம்ப ரகசியமா இயங்கியிருக்கு, கிளையன்ட்ஸ் தங்களோட ID, பேட்ஜ்கள், ரெஃபரன்ஸ் எல்லாம் கொடுத்து இந்த சேவையை பயன்படுத்தியிருக்காங்க. “Girlfriend Experience”னு ஒரு ஸ்பெஷல் சேவையும் இங்க வழங்கப்பட்டிருக்கு. அதாவது இது சாதாரண ஒரு Call Girl போன்று இல்லாமல், ஒரு உண்மையான Girl Friend போல பழகி ஈடுபடும் ஒரு வகை விபச்சார மாடலாம்.
இந்த விபச்சார கும்பல் ரொம்ப திட்டமிட்டு, ரகசியமா இயங்கியிருக்கு. ஆடம்பர அபார்ட்மென்ட்கள்ல இந்த வேலை நடந்திருக்கு, கிளையன்ட்ஸ் யாருனு ரகசியமா வச்சுக்க ஒரு நல்ல சிஸ்டம் இருந்திருக்கு. ஒவ்வொரு கிளையன்ட்டோட விவரங்களையும், அவங்க என்ன சேவை வாங்கினாங்கனு எல்லாம் விபரமா பதிவு செய்து வச்சிருக்காங்க. இந்த பதிவுகள் இப்போ கோர்ட்டுல வெளியாகி, “Cambridge Brothel Hearings”னு பேர் வாங்கியிருக்கு. இந்த கேஸ்ல ஆசிய பெண்கள் பெரும்பாலும் பாலியல் கடத்தலுக்கு பலியாகியிருக்காங்கனு அதிகாரிகள் சொல்றாங்க, இது இன்னும் பெரிய விஷயமா மாறியிருக்கு.
இந்த கேஸ்ல அனுராக் மேல மைனர் குற்றச்சாட்டுகள் (misdemeanor charges) இருக்கு. ஆனா, இவரு கம்பெனியான Gradiant இவருக்கு ஆதரவா இருக்கு. “நாங்க நீதித்துறையை நம்புறோம், இது சரியான முடிவுக்கு வரும்னு நம்பிக்கை இருக்கு”னு கம்பெனியோட பிரதிநிதி ஃபெலிக்ஸ் வாங் சொல்லியிருக்காரு. ஆனால், நிறுவனத்துக்குள்ள சிலர் அனுராக் பதவி விலகணும்னு குரல் கொடுக்குறாங்க. இந்த வழக்கு அமெரிக்காவில் பெரிய பரபரப்பை கிளப்பியிருக்கு. இதனால பலர் தங்களோட உயர்மட்ட பதவிகளை ராஜினாமா செய்திருக்காங்க. ஆனால், அனுராக் இன்னும் தன்னோட CEO பதவியில் தொடருகிறார்.
அனுராக் பாஜ்பாய் ஒரு பக்கம் உலக அளவில் தண்ணீர் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு, பலரால பாராட்டப்பட்டவர். ஆனால், இந்த சர்ச்சை அவரோட புகழுக்கு ஒரு பெரிய கரையை ஏற்படுத்தியிருக்கு. எனினும், வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்