சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியோட அடுத்த மேட்ச் இன்னைக்கு டெல்லி கேப்பிடல்ஸ் (DC) கூட சேபாக் மைதானத்துல நடக்க போகுது. இந்த சீசன்ல CSK தோல்விய அடிக்கடி சந்திச்சாலும், அவங்க டீம் மேனேஜ்மென்ட் புது திறமைகள தேடி எடுக்கிறதுல தீவிரமா இருகாங்க. அதுல ஒரு சுவாரஸ்யமான அப்டேட் தான் 17 வயசு இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே ட்ரைல்ஸ்கு அழைக்கப்பட்டது. இவர் மும்பைல இருந்து வந்தவர், CSK மேனேஜ்மென்ட்டோட கவனத்த ஈர்த்ததால, சேபாக்ல டிரையல்ஸ்க்கு அழைக்கப்பட்டிருக்கார். இந்த டிரையல்ஸ்ல இவர் தோனியையும், CSK CEO காசி விஸ்வநாதனையும் இம்ப்ரஸ் பண்ணியிருக்கார். எனவே இவரு ராகுல் திரிபாதியாவ ஓப்பனிங்க்ல ரீப்ளேஸ் பண்ணி இன்னைக்கு DC எதிரான மேட்ச்ல ஆடுவாருன்னு பேச்சு அடிபடுது.
ஆயுஷ் மாத்ரே - யார் இவர்?
ஆயுஷ் மாத்ரே, மும்பைல இருந்து வந்த 17 வயசு இளம் கிரிக்கெட் பிளேயர். இவர் ஃபர்ஸ்ட்-கிளாஸ் கிரிக்கெட்ல மும்பை டீம்க்கு ஆடி, ரஞ்சி ட்ரோஃபில நல்ல பர்ஃபாமன்ஸ் பண்ணியிருந்தாரு. இவரோட பேட்டிங் ஸ்டைல், டெக்னிக், பெரிய இன்னிங்ஸ ஆடுற திறமை - இதெல்லாம் CSK டேலன்ட் ஸ்கவுட்ஸோட கண்ணுல பட்டிருக்கு.
இவற்றை விட குறிப்பா, இவர் மகாராஷ்டிரா டீமுக்கு எதிரா 176 ரன்ஸ் அடிச்ச இன்னிங்ஸ் பெரிய டாக் ஆஃப் தி டவுன் என்றே சொல்லலாம். அதோட, விஜய் ஹசாரே ட்ரோஃபில 458 ரன்ஸ், லிஸ்ட் A கிரிக்கெட்ல 65க்கு மேல அவெரேஜ், இந்திய U-19 டீம்க்கு ஆசிய கப்புல செகண்ட் ஹையஸ்ட் ரன் ஸ்கோரர்னு அடுத்தடுத்து இவரோட சாதனை CSK டேலன்ட் ஸ்கவுட் கவனிக்கிற விதமா இருந்தது.
CSK டிரையல்ஸ் - என்ன நடந்துச்சு?
ஏப்ரல் 3, 2025-ல, ஆயுஷ் மாத்ரே செபாக் மைதானத்துல CSK டிரையல்ஸ்க்கு வந்தாரு. இவர் ராஜ்கோட்ல BCCI-யோட NCA ஸோனல் கேம்ப்ல U-19 பிளேயர்ஸ்க்கு ட்ரெயினிங் பண்ணிட்டு இருந்தப்போ, CSK மேனேஜ்மென்ட் இவர கூப்பிட்டு சென்னைக்கு வரவச்சிருக்கு. இந்த டிரையல்ஸ்ல இவர் பேட்டிங் ஸ்கில்ஸ், பவுலிங் எதிர்கொள்ளுற விதம் எல்லாம் CSK டீம் ஸ்கவுட்ஸ்க்கு பிடிச்சு போச்சு. காசி விஸ்வநாதன் ஒரு இன்டர்வியூல, “ஆமா, நாங்க அவர டிரையல்ஸ்க்கு கூப்பிட்டோம். எங்க டேலன்ட் ஸ்கவுட்ஸ இவர இம்ப்ரஸ்ஸிவா பாத்தாங்க. ஆனா இப்போ எந்த இன்ஜுரியும் இல்ல, அதனால தேவைப்பட்டா மட்டும் அவர எடுப்போம். இது ஜஸ்ட் டிரையல் தான்,”னு சொல்லியிருக்கார். அதுக்கு முன்னாடி, நவம்பர் 2024-லயும் CSK இவர டிரையல்ஸ்க்கு அழைச்சிருக்கு, ஆனா IPL 2025 மெகா ஆக்ஷன்ல இவர் வாங்கப்படல.
இதுல ஒரு சுவாரஸ்யமான ட்விஸ்ட் - தோனியோட ஒப்பினியன். தோனி, CSK-யோட முன்னாள் கேப்டனா, இளம் டேலன்ட்ஸ கண்டுபிடிக்கிறதுல எப்பவுமே கில்லாடி. ஆயுஷ் மாத்ரே பேட்டிங் பாத்து தோனியும் இம்ப்ரஸ் ஆகியிருக்காருன்னு ரிப்போர்ட்ஸ் சொல்றாங்க. தோனியோட அப்ரூவல் ஒரு பிளேயருக்கு கிடைக்கிறது சாதாரண விஷயமில்ல, அதுவும் 17 வயசுல!
திரிபாதிய ரீப்ளேஸ் பண்ணுவாரா?
IPL 2025 சீசன்ல CSK டாப் ஆர்டர் செம தடுமாறுது. ருதுராஜ் கெய்க்வாட் மூணாவது போஸிஷனுக்கு ஷிஃப்ட் ஆகியிருக்கார், ஆனா ஓப்பனிங்ல ரச்சின் ரவீந்திராவும், ராகுல் திரிபாதியும் சரியா கிளிக் ஆகல. திரிபாதி இந்த சீசன்ல பேஸ் பவுலிங்குக்கு எதிரா ரொம்ப சிரமப்பட்டு இருக்கார். மூணு மேட்ச்ல ஒரு வெற்றி, ரெண்டு தோல்வியோட CSK பாயிண்ட்ஸ் டேபிள்ல ஏழாவது இடத்துல இருக்கு. இந்த சூழல்ல, ஆயுஷ் மாத்ரே ஒரு ஃப்ரெஷ் ஆப்ஷனா பாக்கப்படுறாரு. சில ஃபேன்ஸ், மீடியா சர்க்கிள்ஸ்ல, “இவர திரிபாதிய ரீப்ளேஸ் பண்ணி, இன்னைக்கு DC எதிரான மேட்ச்ல ஓப்பனிங்குக்கு இறக்குவாங்க”னு ஸ்பெகுலேஷன் ஓடிட்டு இருக்கு.
ஆனா இங்க ஒரு டெக்னிகல் பாயிண்ட் இருக்கு. IPL ரூல்ஸ் படி, ஒரு பிளேயர சீசன் நடுவுல டீம்ல சேர்றதுக்கு, ஏற்கனவே ரெஜிஸ்டர்ட் பிளேயருக்கு இன்ஜுரி ஆகி சீசன் முழுக்க ஆட முடியாத சூழல் வரணும். CSK தரப்புல இருந்து இப்போ வரை எந்த இன்ஜுரி அப்டேட்ஸும் இல்ல. காசி விஸ்வநாதனும், “இப்போ யாரையும் எடுக்கிற பிளான் இல்ல, தேவைப்பட்டா மட்டும் பாப்போம்”னு கிளியரா ல்லியிருக்கார். அதனால, ஆயுஷ் இன்னைக்கு ஆடுறது கொஞ்சம் டவுட்ஃபுல் தான்.
இன்னைக்கு DC எதிரான மேட்ச்ல CSK ஜெயிச்சு, பாயிண்ட்ஸ் டேபிள்ல முன்னேறணும்னு ஃபேன்ஸ் எதிர்பாக்குறாங்க. ஆயுஷ் ஆடுறாரா இல்லையானு இன்னும் கொஞ்ச நேரத்துல தெரிஞ்சுடும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்