
மத்திய பிரதேசத்தில் உள்ள காண்ட்வா மாவட்டத்தில், ஏழு இளைஞர்கள் கிணற்றில் இறங்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினரிடையே, பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.காண்ட்வாவில் நடக்கயிருந்த கெங்கையூர் திருவிழாவை முன்னிட்டு.
திருவிழாவின் ஒரு பகுதியான, சிலை நீராட்டத்திற்காக அங்கு உள்ள கிணற்றை சுத்தம் செய்ய அந்த ஊரை சேர்ந்த ஒரு இளைஞர்,கயிறு கட்டி இறக்கி விடப்பட்டுள்ளார், கயிறு பிரிந்த நிலையில் கிணற்றின் அடிப்பாகத்திற்கு தடுமாறி விழுந்தார், இதனை தொடர்ந்து அவரை காப்பாற்ற ஒவ்வொருவராக ஏழு பெரும் இறங்கியுள்ளனர்.
கிணற்றுக்குள் இறங்கிய ராகேஸ்,வாசுதேவ்,மோகன், அஜய்,கஜ ,சரண் மற்றும் அணில் ஆகிய ஏழு பெரும்,ஒவ்வொருவராக அடுத்தடுத்து உயிரிழந்து உள்ளனர். தீ அணைப்பு துறையினர் பதினைந்து பேர் கிட்டத்தட்ட,இரண்டு மணி நேரம் போராடி இவர்களின் உடலை மீட்டுள்ளனர்.பிறகு காண்ட்வா அரசு மருத்துமனையில் உடர்கூறு ஆய்வு செய்யப்பட்ட இவர்களது உடலில், விஷவாயு தாக்கியுள்ளதாக மருத்துவர்கள் குறிப்பிட்டனர்.
இதை குறித்து விசாரணை நடத்திய காண்ட்வா மாவட்டத்தின் காவல் ஆய்வாளர் "மனோஜ் ராய்" இதற்கு காரணம் கிராமத்தின் கழிவுநீர் கால்வாய், கிணற்றில் விடப்பட்டதால், கிணறு முழுவதும் விஷவாயு நிரம்பியிருந்தது காரணம், என கண்டறிந்தார்.
இந்நிலையில் இறந்த ஏழு பேரின் குடும்பத்திற்கு தல நான்கு லட்சம்,நஷ்ட ஈடாக கொடுக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்,காண்ட்வா மாவட்டத்தின் காலெக்ட்டர்,"ரிஷவ் குப்தா" மேலும் அந்த கிணற்றை மூடும்படியாக ஆணையிட்டுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்