கால் தசைப்பிடிப்பு காரணமாக எம்.எஸ். தோனி 'ஐபிஎல் 2026' தொடரின் முதல் இரண்டு வாரப் போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பில்லை என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சனிக்கிழமை அன்று தெரிவித்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனான எம்.எஸ். தோனி, கால் தசைப்பிடிப்பு காரணமாக இரண்டு வாரங்களுக்கு விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளதால், சிஎஸ்கே அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது . மேலும், இந்தத் தகவலை உறுதிப்படுத்தும் விதமாக அறிக்கையை சிஎஸ்கே வெளியிட்டுள்ளது. "எம்.எஸ். தோனி தற்போது கால் தசைப்பிடிப்பிற்காக சிகிச்சையில் உள்ளார். இதன் விளைவாக, அவர் டாடா ஐபிஎல் 2026 தொடரின் முதல் இரண்டு வாரப் போட்டிகளைத் தவறவிட வாய்ப்புள்ளது. விரைவில் குணமடையுங்கள், தல!," என்று சிஎஸ்கே கூறியுள்ளது. சிஎஸ்கே அணி தனது தொடக்கப் போட்டியை திங்கட்கிழமை அன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. தற்போது இவர் முதல் இரண்டு வார போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என்பதை அந்த அணி உறுதி செய்துள்ளது.
தோனி குணமடையும் காலத்தில், இந்த சீசனின் இரண்டு வாரம் எனக் கூறும் போது, முதல் நான்கு போட்டிகளையாவது தவறவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது,
மார்ச் 30: ராஜஸ்தான் ராயல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ்
ஏப்ரல் 3: சென்னை சூப்பர் கிங்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ்
ஏப்ரல் 5: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs சென்னை சூப்பர் கிங்ஸ்
ஏப்ரல் 11: சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ்
தோனி இல்லாமல் களமிறங்கும் அவரது அணி இந்த சீசனின் தொடக்கத்தில் குறிப்பாக, தலைமைப் பண்பு மற்றும் ஆட்டத்தின் திறன் ஆகியவற்றில் சிஎஸ்கே அணி சவாலை சந்திக்க வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. 2020ல் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற தோனி, தொடர்ந்து ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடி வருகிறார். கடந்த சீசனில், அவர் 14 போட்டிகளிலும் பங்கேற்று,135க்கும் மேற்பட்ட ஸ்டிரைக் ரேட்டில் 196 ரன்கள் எடுத்தார். மேலும், காயம் காரணமாக ருதுராஜ் கெய்க்வாட் விலகிய பிறகு, அவர் சிறிது காலத்திற்கு மீண்டும் கேப்டன் பொறுப்பிற்குத் திரும்பினார் தோனி.
தற்போதைக்கு, சிஎஸ்கே அணி தங்களின் மிகப்பெரிய நட்சத்திர வீரரான 'கேப்டன் கூல்' இல்லாமலேயே இந்த ஆரம்பக்கட்டத்தைக் கடக்க வேண்டியிருக்கும். அவர் இல்லாத நிலையில், அவர்கள் எப்படிச் சமாளித்துக்கொள்கிறார்கள்? என்பதை இந்த முறை நடப்பு ஐபிஎல்-லில் அனைவரின் பார்வையும் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.