ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் தொடர்ந்து இந்திய ஒருநாள் டீமில் நீடிக்க வேண்டும் என்றால், இனிமேல் கட்டாயமாக உள்நாட்டுப் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று பிசிசிஐ கண்டிப்புடன் தெரிவித்துள்ளது. பி.சி.சி.ஐ-யின் உயர் அதிகாரிகள், அணி கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் சீனியர் பிளேயர் விராட் கோலி ஆகியோருடன் பேசி இந்த முடிவை எடுத்திருக்கிறார்கள். இருவரும் ஏற்கெனவே டெஸ்ட் மற்றும் டி20 ஃபார்மட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதால், இப்போது அவர்கள் ஒருநாள் போட்டி ஃபார்மட்டில் மட்டுமே விளையாடுகிறார்கள்.
இவர்கள் இரண்டு ஃபார்மட்டிலும் விளையாடாததால், அவர்களுக்கு இன்டர்நேஷனல் மேட்ச்களுக்கு இடையே லாங் கேப் கிடைக்கிறது. இந்த நேரத்தில், அவர்களுடைய மேட்ச் ஃபிட்னஸ்ஸை (விளையாடும் திறனை) மெயின்டெயின் செய்ய வேண்டும் என்றால், டொமஸ்டிக் போட்டிகளில் விளையாடுவது அத்தியாவசியம் என்று வாரியம் கருதுகிறது.
வாரியத்தின் வட்டாரங்கள், "அவர்கள் இந்தியாவுக்காக ஓ.டி.ஐ. (ODI) போட்டிகளில் தொடர்ந்து விளையாட வேண்டும் என்றால், விஜய் ஹஸாரே கோப்பை போன்ற டொமஸ்டிக் டோர்னமென்ட்களில் விளையாடுவது இப்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரூலின்படி, வீரர்கள் அனைவரும் டிசம்பர் 24ஆம் தேதி தொடங்க உள்ள விஜய் ஹஸாரே கோப்பை ஒருநாள் போட்டித் தொடரில் விளையாட வேண்டும்.
இந்தத் தொடர், இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் சீரிஸை முடித்துவிட்டு, நியூசிலாந்துக்கு எதிரான சீரிஸ் தொடங்கும் முன் இருக்கும் குறுகிய இடைவெளியில் வருகிறது. இதில் விளையாடுவது, 2027ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பைத் தேர்வுக்கு இவர்களைத் தகுதியுடன் வைத்திருக்க உதவும்.
எனினும், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா, பி.சி.சி.ஐ-யின் இந்த உத்தரவை உடனே ஏற்றுக் கொண்டார். அவர் மும்பை கிரிக்கெட் அசோசியேஷனிடம் (MCA) பேசி, வரவிருக்கும் விஜய் ஹஸாரே கோப்பையில் மும்பை டீமுக்காக விளையாடத் தான் ரெடி என்று அறிவித்துள்ளார். இதன் மூலம் தனது இருப்பை ரோஹித் உறுதி செய்துகொண்டார்.
ஆனால், ரோஹித் சர்மா போல, விராட் கோலியின் நிலை என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை. அவர் டெல்லி அணிக்காக விஜய் ஹஸாரே கோப்பையில் விளையாடுவாரா என்ற சஸ்பென்ஸ் நீடிக்கிறது. கோலி கடைசியாக டெல்லி டீமுக்காக விளையாடி ரொம்ப வருஷங்கள் ஆகிவிட்டன. அவர் இப்போது லண்டனில் இருப்பதால், விரைவில் தன்னுடைய முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பி.சி.சி.ஐ-யின் இந்த நடவடிக்கை, நாட்டில் உள்ள "ஸ்டார் கலாச்சாரத்தை ஒழித்து, டீமில் ஒரு புது டிசிப்ளினை கொண்டு வர உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உத்தரவைப் ஃபாலோ செய்யாதவர்கள், சென்ட்ரல் கான்ட்ராக்ட்டை இழக்கவும் வாய்ப்புள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.