
கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகையை வழங்கி கௌரவித்து வருகிறார். விஜயின் இந்த முயற்சி மாணவர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. விஜய் கையால் பரிசு பெற வேண்டும் என்றும், விஜய்யை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும் என்பதால் பெற்றோர் தரப்பிலும் இதற்கு நல்ல இசைவான பார்வை உண்டு.
இந்த நிலையில் 2025 கல்வி ஆண்டுக்கான கல்வி விருது வழங்கும் விழா மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்றது. இன்று இரண்டாவது கட்டமாக பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகளை விஜய் சந்தித்து வருகிறார். விஜய்யை சந்திக்க வரும் மாணவர்கள் விஜயோடு குழு புகைப்படம் எடுத்துக் கொள்வது வழக்கம். மேலும் மாணவர்களுடன் ஹார்ட்டின் சிம்பல் காட்டுவது, விஜய் படங்களில் வருவது போல போஸ் கொடுப்பது, கட்டி பிடிப்பது, டான்ஸ் ஆடுவது அன்பு மிகுதியால் முத்தம் கொடுப்பது என மாணவ மாணவிகள் விஜயின் மீதான தங்கள் அன்பை இவ்வாறு வெளிப்படுத்தி வந்தனர். இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இளைய காமராஜர்!
இன்று நடந்த விருது விழாவில் பெற்றோர்கள் சிலரும் “அடுத்த CM, இளைய காமராஜர் என பல புகழாரங்களை சூட்டுகின்றனர்.ஆனால் அது சிலநேரங்களில் சர்ச்சையாகிறது. காமராஜரின் ஒப்பற்ற பணிகளோடு ஏன் விஜய் -யை ஒப்பிட்டு பேச வேண்டும். என்ற பல கேள்விகளும் எழுகின்றன.
அது மட்டுமின்றி இதனை விஜய் தனது கட்சியின் சுயநலத்திற்காக செய்கிறார், இவை இயல்பாக நிகழவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் வந்த வண்ணம் உள்ளன.
இன்று நடந்த கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழாவிலும் ஒரு சில மாணவ மாணவிகள்தொடர்ந்து விஜய் தான் தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் என பேசினர் மாணவி ஒருவர் தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் நீங்கள்தான் என விஜய்யைப் பார்த்துக் கூறினார்.
வால்பாறையைச் சேர்ந்த மாணவன் கார்த்திக்கிற்கு தங்க மோதிரம் பரிசு
வழங்கினார் விஜய். அப்போது அந்த மாணவனின் தந்தை விஜய்யின் வேண்டுகோளையும் மீறி மேடையில் அவரைப் புகழ்ந்து பேசினார். அவர், விஜயகாந்த் மற்றும் எம்ஜிஆரை ஆகியோருடன் விஜய்யை ஒப்பிட்டு பேசினார்.
தொடர்ந்து மைக்கை வாங்கிய விஜய்” மீண்டும் ஒரு வேண்டுகோள், 2026 தேர்தலைப் பற்றி பேச வேண்டாம். அதேபோல் தயவுசெய்து இளைய காமராஜர் என்று என்னை அழைக்க வேண்டாம். அதற்குப் பதிலாக உங்கள் பள்ளி மற்றும் ஆசிரியர்களைப் பற்றி பேசுங்கள்" என மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு வேண்டுகோள் அளித்துள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.