சகோதரனுக்காக காவல் நிலையம் முன்பு விஷமருந்தி உயிரிழந்த பெண்; சம்பந்தப்பட்ட காவலர்கள் அதிரடி மாற்றம்!

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே நடுக்காவேரி காவல்நிலையத்தில் தினேஷ் என்பவரை
police station
police stationAdmin
Published on
Updated on
1 min read

இளம் பெண் உயிரிழந்த விவகாரம் உதவி ஆய்வாளர்கள் மற்றும் தலைமை காவலர்கள் மாற்றம்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே நடுக்காவேரி காவல்நிலையத்தில் தினேஷ் என்பவரை காவல்துறையினர் கைது செய்ததை கண்டித்து அவரது சகோதரிகள் மேனகா மற்றும் கீர்த்திகா காவல் நிலையம் முன்பு விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்தனர். இதில் கடந்த 9ஆம் தேதி கீர்த்திகா சிகிச்சை பலனின்றி இன்றிய உயிரிழந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக காவல் ஆய்வாளர் ஷர்மிளா காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் இந்த காவல் நிலையத்தில் பணிபுரிந்த தலைமை காவலர் மணிமேகலை மற்றும் உதவி ஆய்வாளர்கள் அறிவழகன், கலியபெருமாள் ஆகியோர் வேறு காவல் நிலையத்திற்கு பணியிடை மாற்றம் செய்து அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com