உலகம் முழுத்திலும் 90’ஸ் கிட்ஸ்களின் காதல் வாழ்வில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய படமென்றால் அது ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 1997 -ல் வெளிவந்த டைட்டானிக் திரைப்படம்தான். பொருளாதார ஏற்றத் தாழ்வின் இரு துருவங்களை வைத்து காதலை அடிப்படையாக்கி உருவாக்கப்பட்ட இந்த படத்தில் நடித்த ஜேக்கும் (லியர்னாடோ டீகாப்ரியோ) ரோசும் (கேட் வின்ஸ்டன்) அன்றைய இளைஞர்களின் ஆதர்ஷ காதல் ஜோடிகளாக விளங்கினர். பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் வெகுஜன மக்களால் விரும்பப்பட்டதற்கு மற்றுமொரு காரணம் அந்த கதையில் இருந்த உண்மை தன்மை தான்… ஆம் உலக புகழ்பெற்ற பெரும் சொகுசு கப்பலான டைட்டானிக் கடலில் கரைந்தது இன்றோடு 113 ஆண்டுகள் ஆகிவிட்டது.
டைட்டானிக்கிலிருந்த பிரமிப்பூட்டும் வசதிகள்
இங்கிலாந்து நாட்டின் ‘ஒயிட் ஸ்டார் லைன்’ என்ற நிறுவனம் 1909 -ஆம் ஆண்டு அனைத்து வசதிகளுடன் கூடிய ஒரு சொகுசு கப்பலை நிர்மாணித்தது. இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பயணிக்குமளவு நிர்மாணிக்கப்பட்ட இந்த கப்பலில் 7 பெரிய நீச்சல் குளங்கள். பூங்காக்கள், சிறுவருக்கான விளையாடும் இடங்கள், நூலகம், புகைபிடிக்கும் அறை, உடற்பயிற்சி அறை, பயணிகளை மகிழ்விக்க இசை கலைஞர்களோடு இரண்டு உணவருந்தும் அறை இருந்தது, முதல் இரண்டு வகுப்பு பயணிகள் ஒன்றாகவும் முன்றாம் வகுப்பு பயணிகள் தனியாகவும் உணவருந்த வேண்டும் என்ற விதியும் அந்த கப்பலில் இருந்தது. மேலும் டைட்டானிக் கப்பலில் மற்றொரு வித்தியாசமான நடைமுறை இருந்தது அது என்னெவென்றால், குழந்தைகளை யாரும் உணவருந்தும் அறைக்கு அழைத்து வரக்கூடாது அவர்கள் நர்சரியில் காப்பாளர்களோடுதான் இருக்க வேண்டும் என்று அவர்களின் நுழைவு சீட்டிலே இடம்பெற்ற ஒருமுக்கிய விதியாக இருந்தது.
முடிவுக்கு வந்த பிரமாண்டம்
இந்த பிரம்மாண்ட கப்பல் 1912 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் சவுத் ஆம்டன் துறைமுகத்திலிருந்து 2223 பயணிகளுடன் தனது பயணத்தை தொடர்ந்தது, அப்போது யாரும் அறிந்திருக்கவில்லை இந்த அற்புத பயணம் அகாலமாக முடியும் என்று. நியூபவுண்ட்லேண்ட் தீவு. அட்லான்டிக் கடலில் அமெரிக்காவிற்கு கீழே உள்ள இந்த தீவிலிருந்து சுமார் 600 கி.மீ. தொலைவில் ஏப்ரல் 14-ந் தேதி இரவு சரியாக 11.20 மணிக்கு பனிப்பாறைகளில் இடருற்றது. அதிலிருந்து ஏற்பட்ட துளையால் கடல் நீர் கப்பலுக்குள் சென்று கப்பல் கொஞ்சம் கொஞ்சமாக மூழ்கத்துவங்கியது. அதிகாலை 2.20 மணிக்கு டைட்டானிக் இரண்டாக உடைந்து கடலில் மூழ்கியது. அதன் 112 ஆவது நினைவு அஞ்சலி இன்று சவுத் ஆம்ட, குயின்ஸ் டவுன், சேர்பெர்க் உள்ளிட்ட இடங்களில் அனுசரிக்கப்படுகிறது.
டைட்டன் வெடிப்பு
டைட்டானிக் முடிவுக்கு பிறகு பல ஆராய்ச்சியாளர்களும், நிறுவனங்களும், டைட்டானிக்கின் இறுதி எச்சங்களை தேடி கடலுக்குள் சென்றனர். ஆனால் டைட்டானிக்கின், மர்மமானது விலகவே இல்லை. அதற்கு மாறாக தேடி சென்றவர்களின் மரணமும் மர்மமாகவே இன்று வரை உள்ளது. கடந்த ஜூன் 13, 2023 அன்று கடலின் மேற்பரப்பிலிருந்து 3800 மீட்டர் ஆழத்தில் மறைந்த, டைட்டானிக்கின் எச்சங்கள் மற்றும் மர்மங்களை தேடி பயணித்தது டைட்டன், இதில் ஐந்து பேர் கொண்ட வல்லுநர் குழு பயணித்தது இந்த திட்டத்தை வழிநடத்திய “ocean gate” நிறுவனத்தின் நிறுவனரான ஸ்டாக்டன் ரஷ்-ம் உள்ளிருந்தார். கடலின் ஆழத்திற்கு செல்ல செல்ல நீர் மூழ்கி கப்பல் அதிகப்படியான அழுத்தத்தினால் வெடித்ததாக சொல்லப்படுகிறது, இந்த நீர் மூழ்கி கப்பலில் டைட்டானிக் பட இயக்குனரின் நெருங்கிய நண்பரும் டைட்டானிக் கப்பலின் ஆராய்ச்சி வல்லுநருமனா “பால் ஹென்றி நார்கியோலெட்”இருந்தது குறிப்பிடத்தக்கது.
டைட்டானிக்கின் தற்போதைய முப்பரிமாண படம்
டைட்டானிக்கின் சிதைந்த பாகங்கள் அட்லாண்டிக் பெருங்கடலின் 3,800 கிலோ மீட்டர் ஆழத்தில் இன்னமும் உள்ளது. இந்த பாகங்களை நீர் மூழ்கி ரோபோக்கள் மூலம் பல கோணங்களில் எடுக்கப்பட்ட 7 லட்சம் புகைப்படங்களை பயன்படுத்தி ‘டிஜிட்டல் இரட்டையை’ (Digital twinning) உருவாகியுள்ளது நேஷனல் ஜியோகிராபி மற்றும் அட்லாண்டிக் புரொடக்ஷன் நிறுவனம்.
இந்த டிஜிட்டல் ஸ்கேனிங் மூலம் டைட்டானிக் கப்பலின் சிதைந்த பாகங்களை தெளிவாக காணலாம், மேலும் பிரத்தியேக நுணுக்கமான ஆராய்ச்சிகளை மேற்கொள்ள முடியும் எனக்கூறப்படுகிறது.
1912 ஆண்டின் ஒரு குளிர் மூடிய இரவில் நடந்த இந்த கோர விபத்து பெரும் உயிர் மற்றும் பொருள் சேதத்தை ஏற்படுத்தியது. 2,223 உயிர்களோடு கடலினுள் சென்ற டைட்டானிக் 709 உயிர்களை மட்டுமே கரைக்கு அனுப்பியது. ஆனால் கடலினுள் அமிழ்ந்து கிடைக்கும் அதன் சிதைந்த பாகங்கள் சிதையாத பல கதைகளை அவ்வப்போது கூறிக்கொண்டே இருக்கிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்