
தெலுங்கானா மாநிலம் ஜீடிமேட்ல பகுதியை சேர்ந்தவர் 39 வயதான அஞ்சலி. இவருக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த 27 ஆண்டுகளுக்கு முன்பு தனது சொந்த கிராமத்தில் இருந்து ஹைதராபாத் நகரத்திற்கு சென்று வாழ்ந்து வந்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு கணவரை இழந்த அஞ்சலி இரண்டு பெண் குழந்தைகளையும் தனியாக இருந்து வளர்த்து வந்துள்ளார்.
அஞ்சலியின் பெரிய மகளான தேஜஸ்வினி பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். பெரும்பாலும் அஞ்சலி வேலைக்காக வெளியில் சென்று விடும் நிலையில் தேஜஸ்வினியும் அவரது தங்கையும் வீட்டில் தனியாகவே இருந்துள்ளனர். எப்போதும் சமூக வலைதளங்களில் மூழ்கி கிடைக்கும் தேஜஸ்வினிக்கு பக்கத்து ஊரை சேர்ந்த 19 வயதான சிவா என்ற இளைஞருடன் நட்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதை அறிந்த அஞ்சலி தனது மகளிடம் “இது உனக்கு காதல் செய்யும் வயது இல்லை, நீயே ஒரு குழந்தை இப்போது நீ நல்ல படிக்கவேண்டும் உனக்கு சரியான வயது வரும்போது நான் உனக்கு பிடித்தவரை கல்யாணம் செய்து வைக்கிறேன்” என அறிவுரை கூறியுள்ளார். ஆனால் இதை சற்றும் காதில் வாங்காத தேஜஸ்வினி தனது காதலை தொடர்ந்துள்ளார்.
தனது காதலனுடன் செல்ல முடிவு செய்த தேஜஸ்வினி கடந்த (ஜூன் 16) தேதி வீட்டை விட்டு வெளியேறி காதலனுடன் சென்றுள்ளார். தனது மகளை காணவில்லை என அறிந்த அஞ்சலி காவல் நிலையத்திற்கு சென்று புகாரளித்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சிவா வீட்டில் இருவரும் இருப்பதாக அறிந்து இருவரையும் கண்டுபிடித்து(ஜூன் 20) தேதி தேஜஸ்வினியை மீட்டு அஞ்சலியுடன் அனுப்பி வைத்துள்ளனர்.
தேஜஸ்வினியை வீட்டிற்கு அழைத்து சென்ற அஞ்சலி மீண்டும் அறிவுரை கூறி தனது வழக்கமான வேலைகளை செய்ய தொடங்கியுள்ளார். தனது காதலனிடம் இருந்த தன்னை பிரித்ததால் தேஜஸ்வினி தனது தாயின் மீது கோபத்தில் இருந்துள்ளார். தனது காதலனுடன் சேர்ந்து வாழ நினைத்த தேஜஸ்வினி காதலனுடன் சேர்ந்து அஞ்சலியை கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.
பின்னர் தனது காதலனை கடந்த(ஜூன் 23) தேதி மாலை அஞ்சலியை கொலை செய்ய வீட்டிற்கு அழைத்துள்ளார். தேஜஸ்வினி கூறியதை கேட்டு சிவா தனது தம்பி யஷ்வந்த் உடன் சென்றுள்ளார். அப்போது வீட்டில் பூஜை செய்து கொண்டிருந்த அஞ்சலியை சிவா பின்புறமாக சென்று கழுத்தில் சேலையை போட்டு நெரித்து கொலை செய்துள்ளார். இவர்கள் வீட்டிற்குள் இருக்கும் போது நண்பர் வீட்டிற்கு சென்ற தேஜஸ்வினியின் தங்கை வீட்டிற்கு வந்துள்ளார்.
எங்கு தங்கை பார்த்தால் மாட்டி கொள்வோமோ என நினைத்து தங்கையிடம் “அம்மா பூஜை செய்யும் போது கீழே விழுந்து விட்டார்கள் நீ சென்று யாரையாவது அழைத்து வா” என வெளியில் அனுப்பியுள்ளார். பின்னர் தனது காதலன் மற்றும் அவரது தம்பியை வெளியில் அனுப்பிவைத்துள்ளார். பின்னர் வீட்டிற்கு வந்த தேஜஸ்வினியின் தங்கை தனது தாயை பார்த்து அதிர்ச்சியடைந்து அம்மாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காப்பாற்றலாம் என கூறியுள்ளார்.
அப்போது தேஜஸ்வினி தங்கையை மிரட்டி யாரிடமும் சொல்லவேண்டாம் என கூறியுள்ளார். மேலும் தனது தாய் அஞ்சலி இன்னும் உயிரிழக்கவில்லை என்று அறிந்த தேஜஸ்வினி மீண்டும் தனது காதலனை வீட்டிற்கு வரவழைத்து தாயினை உயிர் போகும் வரை அடித்து கொன்றுள்ளார். தாயை காப்பாற்ற வேண்டும் என நினைத்த தேஜஸ்வினியின் தங்கை அக்காவிற்கு தெரியமால் போலீசாருக்கு இது குறித்து தகவல் அளித்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு போலீஸ் வருவதற்குள் அஞ்சலி உயிரிழந்துள்ளார். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அஞ்சலியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் வழக்கு பதிவு செய்து தேஜஸ்வினி, சிவா, யஷ்வந்த ஆகிய மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மகளே தாயை காதலனுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.