
நெல்லை மேலப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முகமது ரஹ்மத்துல்லாஹ். இவர் மணிமுத்தாறு பகுதியில் ஒன்பதாவது பட்டாலியன் பிரிவில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த வாரம் விடுமுறைக்காக சொந்த ஊரான மேலப்பாளையம் சென்றுள்ளார். அப்போது தனது மனைவி மற்றும் குடும்பத்துடன் ஞாயிற்றுக்கிழமை மாலை வ உ சி மைதானத்திற்கு சென்றுள்ளார்.
விடுமுறை நாள் என்பதால் அருகில் உள்ள பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் மைதானத்திற்கு வந்ததால் கூட்டம் அதிகமாக இருந்துள்ளது. அப்போது மைதானத்திற்கு வந்த ஹரிஷ் என்பவர் அங்கு அமர்ந்து பேசிக் கொண்டிருந்த கணேஷ்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரையும் உடனிருந்த பெண்ணையும் தாக்கி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஹரிஷின் முன்னாள் காதலியுடன் கணேஷ் அமர்ந்து பேசியதால் ஆத்திரமடைந்த ஹரிஷ் தனது நண்பர்களுடன் கணேஷை தாக்கியுள்ளார்.
பதிலுக்கு கணேஷ் மற்றும் அவரது நண்பர்கள் ஹரிஷை தாக்க மைதானத்தில் இருந்த மக்கள் இதனால் பதற்றம் அடைந்தனர். இதை பார்த்துக் கொண்டிருந்த ரஹ்மத்துல்லாஹ் சண்டையிட்டுக் கொண்டிருந்தவர்களின் அருகில் சென்று சண்டையை நிறுத்த சொல்லி சத்தமிட்டுள்ளார். அதற்கு “எங்களை கேட்க நீ” யார் என கணேஷ் கேட்டுள்ளார். விடுமுறையில் இருந்தால் ரஹ்மத்துல்லாஹ் சாதாரண உடையில் இருந்துள்ளார். எனவே நான் காவலர் இப்போது சண்டையை நிறுத்த போகிறீர்களா இல்லையா என ரஹ்மத்துல்லாஹ் சத்தமிட்டுள்ளார்.
சண்டை போட்ட இரு தரப்பில் உள்ள ஐந்து பேரின் மீதும் சுற்று வட்டார காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே அவர்கள் “நீ போலீசா இந்த ஏரியால எங்களுக்கு தெரியாத போலீசா பொய் சொல்லிட்டு இருக்காதா போயிடு” என கூறியுள்ளனர். மேலும் ரஹ்மத்துல்லாவின் கையில் அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இதனை பார்த்த ரஹ்மத்துல்லாவின் மனைவி மற்றும் பொது மக்கள் அவரை மீது அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மேலப்பாளையம் போலீசார். வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர் மைதானத்திற்கு அருகிலிருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து காவலரை தாக்கிய ஹரிஷ், தினேஷ், பார்த்திபன் மற்றும் கணேஷ் உட்பட ஐந்து பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். காவல் அதிகாரிக்கே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளதால் அப்பகுதி மக்கள் பதற்றம் அடைந்துள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.