

ஓமலூர் அருகே 10 வயது சிறுவன் வெட்டி கொலை! கொலை செய்த வாலிபரை போலீசார் தேடி வந்த நிலையில் சேலம் அருகே கருப்பூர் பகுதியில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலையால் பரபரப்பு.
சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த கருத்தானூர் பகுதியைச் சேர்ந்த சத்யா (வயது 30). சத்யாவிற்கு கடந்த 15 வருடங்களுக்கு முன்பு காமலாபுரம் ஊராட்சி பூமாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு மஹிஷா (13) என்ற மகளும், கிஷாந்த் என்ற 10 வயது மகனும் உள்ளனர். இவர்களை அதே பகுதியை சேர்ந்த பள்ளியில் படித்து வருகின்றனர்.
சத்யா மற்றும் ராஜ்குமார் இருவரும் 2 வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். ராஜ்குமார் சத்யாவை விட்டுவிட்டு வேறு பெண்ணுடன் ஏற்பட்ட பழக்கத்தினால் மனைவி மற்றும் குழந்தைகளை விட்டு விட்டு வேறு ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்தி வருகிறார். இதனால் சத்யாவும் கணவரைப் பிரிந்து தனது இரு குழந்தைகளுடன் தனியாக கருத்தானூரில் உள்ள கரும்பு ஆலையில் வசித்து வருகிறார். மேலும் சத்யா ஓமலூரில் உள்ள ஒரு டார்லிங் ஷோரூமில் பணியாற்றி வந்தார் .
இந்த டார்லிங் ஷோரூமி ல் மேலாளராக பணிபுரிபவர் சேலம் கருப்பூர் வெள்ளாளப்பட்டி காலனி பகுதியை சேர்ந்த சக்திவேல் (வயது 28) எனும் இளைஞர். மேலாளர் சக்திவேலுக்கும் சத்யாவுக்கு இடையே திருமணத்தை மீறிய தொடர்பு இருந்து வந்துள்ளது. இருவரும் நெருக்கமாக பழகி வந்துள்ளனர். இந்நிலையில் சத்யா கடந்த 3 மாதங்களாக சக்திவேலிடம் சரியாக பேசாமல் அவரை தவிர்த்து வந்துள்ளார். மேலும் சத்யா வேறு ஒருவருடன் பழகி வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சக்திவேல் சத்யாவிடம் சண்டையிட்டுள்ளர். ஆனாலும் சத்யா அதை பொருட்படுத்தாமல் அந்த நபரின் தினமும் தொலைபேசியில் பேசி பழகி வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று இரவு சத்யாவும் குழந்தைகளும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவில் ஷோரூம் மேலாளர் சக்திவேல் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது செல்போனில் பேசிக்கொண்டு இருந்துள்ளார். சக்திவேலை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த சத்யா “நள்ளிரவில் எதற்காக வந்த?” என கேட்டு வாய் தகராறில் ஈடுபட்டுள்ளார். இவர்களுக்கிடையில் சத்யாவின் மகன் கிஷாந்த் தடுக்க முயன்றுள்ளேன். அப்போது கோபமடைந்த சக்திவேல் வீட்டின் மின் விளக்கை அணைத்துவிட்டு அங்கிருந்த கத்தியால் சிறுவன் கிஷாந்தை சரமாரியாக தாக்கினார்.
பின்னர் சத்யாவையும் தாக்கியுள்ளார். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு வந்த சத்யாவின் தந்தை மற்றும் அருகில் உள்ள உறவினர்கள் ஓடி வந்து பார்த்துள்ளனர். அப்போது கத்தியால் கத்தியால் சரமாரியாக குத்தி கிழிக்கப்பட்ட மகன் கிஷாந் அங்கேயே உயிரிழந்துள்ளார். தாய் சத்யாவிற்கும் கை மற்றும் உடல் முழுவதும் வெட்டுக்காயம் விழுந்துள்ளது.
அவர்களை தாக்கிவிட்டு சக்திவேல் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். ஒருவன் கண் இமைக்கும் நேரத்தில் சத்யாவையும் ,அவரது 10 வயது மகன் கிஷாந்தையும் அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான். இதில், சிறுவன் கிஷாந்த் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். கை துண்டிக்கப்பட்ட நிலையில் அலறியபடி ஓடி வந்த சத்யாவை மீட்ட உறவினர்கள், அவரை ஓமலூர் மருத்துவமனையில் சேர்த்தனர். இங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது .
இறந்த சிறுவனின் சடலத்தை ஓமலூர் போலீசார் மீட்டு உடற்கூறாய்வு செய்ய ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக சிறுவனை கத்தியால் குத்தி கொன்ற சக்திவேலை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் அவர் இன்று அதிகாலை சேலம் அருகே உள்ள கருப்பூர் பகுதியில் இருக்கும் மரம் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவரது சடலத்தை கருப்பூர் போலீசார் மீட்டு விசாரணை செய்து வருகின்றனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டது யார் என ஓமலூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். கொலையாளி யார்?, முன்விரோதம் காரணமாக தாக்குதல் சம்பவம் நடந்ததா ? அல்லது கள்ளக்காதல் விவகாரமா? என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்