12 வயது வளர்ப்பு மகளை பாலியல் வன்கொடுமை.. வீட்டில் சடலமாகக் கிடந்த சிறுமி! 3 போதை மாத்திரைகளால் நேர்ந்த விபரீதம்?

"சிறுமியின் உடலில் மருந்துகளின் அளவு உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அளவிற்கு அதிகமாக இருந்ததாக.."
america 12 year old girl assault case
Published on: 
Updated on: 
2 min read

அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்தில், 12 வயது சிறுமி ஒருவர் போதைப்பொருள் அளவுக்கு அதிகமாக உட்கொண்டதால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியின் மரணத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அந்த சிறுமியின் வளர்ப்பு தந்தை அவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

கனெக்டிகட் மாகாணத்தின் என்ஃபீல்டு பகுதியைச் சேர்ந்த ஈவ் ரோஜர்ஸ் என்ற சிறுமி, கடந்த மார்ச் 18ஆம் தேதி அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். சிறுமியின் தாயார் மகள் தரையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். சிறுமியின் உடலை திருப்பி பார்த்த போது அருகில் மாத்திரைகள் கிடந்துள்ளது. இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், சிறுமி ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

பின்னர் சிறுமியின் உடலுக்கு அருகில் மாத்திரைகள் கண்டெடுக்கப்பட்டதாகவும், அவர் போர்வையால் மூடப்பட்டிருந்ததாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. போர்வையால் மூடப்பட்டிருந்த சிறுமி, இடுப்புக்குக் கீழ் ஆடையின்றி இருந்ததாக காவல்துறை தெரிவித்தது. இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்ட நிலையில், சிறுமியின் மர்ம மரணத்திற்கான காரணம் குறித்த மருத்துவ அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது.

அக்டோபர் 19ஆம் தேதி வெளியான தலைமை மருத்துவப் அறிக்கையின்படி, டைஃபென்ஹைட்ரமைன், ஃப்ளூக்ஸெடின் மற்றும் புப்ரோபியான் ஆகிய மூன்று மருந்துகளின் டாக்ஸிக் சிறுமியின் மரணத்திற்குக் காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் டைஃபென்ஹைட்ரமைன் என்பது ஒவ்வாமை மற்றும் சில அறிகுறிகளைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படும் ஆன்டிஹிஸ்டமைன் மருந்தாகும். ஃப்ளூக்ஸெடின் மற்றும் புப்ரோபியான் ஆகியவை மனச்சோர்வு உள்ளிட்ட மனநல பிரச்சனைகளுக்கான சிகிச்சைக்கு பயன்படுத்தும் மருந்துகள் என தெரிய வந்துள்ளது. 

காவல்துறை தகவல்களின்படி, சிறுமியின் உடலில் மருந்துகளின் அளவு உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அளவிற்கு அதிகமாக இருந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. இருப்பினும், சிறுமி இந்த மருந்துகளை எவ்வாறு உட்கொண்டார், இது தற்கொலை முயற்சியா அல்லது வேறு காரணமா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

சிறுமியின் மரணத்திற்கான மருத்துவக் காரணம் கண்டறியப்பட்டு இருந்தாலும், அதற்கான நோக்கம் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை என மருத்துவ பரிசோதகர் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் சிறுமியின் வளர்ப்புத்தந்தை அந்தோனி ஃபெடர்லைன் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி, பாலியல் வன்கொடுமை மற்றும் சிறாருக்கு ஆபத்தை ஏற்படுத்தியது போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுமியிடம் மேற்கொள்ளப்பட்ட பாலியல் வன்கொடுமை குறித்த பரிசோதனையில், டிஎன்ஏ மாதிரிகள் வளர்ப்புத் தந்தை அந்தோனி ஃபெடர்லைனின் டிஎன்ஏவுடன் பொருந்தியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர் ஏற்கனவே காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நீதிமன்றப் பதிவுகளின் படி, அவர் இதுவரை தனது தரப்பு வாதத்தை முன்வைக்கவில்லை. அடுத்தகட்ட நீதிமன்ற விசாரணை நவம்பர் 4ஆம் தேதி நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.

12 வயது சிறுமியின் மரணத்திற்கான காரணம் மற்றும் சூழல் இன்னும் முழுமையாக தெரியாத நிலையில், மருந்துகளின் நச்சுதன்மை மற்றும் வளர்ப்பு தந்தை மீதான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு ஆகியவை வழக்கில் முக்கிய ஆதாரங்களாக உள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com