"காதலியுடன் தனிமையில் இருந்த காதலன்!" ஹோட்டல் அறையில் சடலமாக மீட்பு - மது விருந்து கொலையில் முடிந்ததா?

இதற்கு முன்னரும் அந்த ஜோடி ஒன்றாக ஹோட்டல்களில் தங்கியுள்ளனர் என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
Chhattisgarh drummer death
Chhattisgarh drummer deathChhattisgarh drummer death
Published on
Updated on
2 min read

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ராய்ப்பூரில் சத்தீஸ்கரின் துர்க் மாவட்டம், பிலாய் நகரில் உள்ள ஒரு ஹோட்டலில், 19 வயது டிரம்மர் ஒருவர் புதன்கிழமை அன்று அறையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சமத்துவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனது 23 வயது காதலியுடன் மது போதையில் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து தற்கொலை செய்துகொண்டதாக முதற்கட்ட ஆதாரங்கள் சுட்டிக்காட்டுவதாக காவல்துறை தெரிவித்தது. பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் அவர் கொலை செய்யப்பட்டதாகக் குற்றம் சாட்டி, முழுமையான விசாரணைக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர். தனியார் நிகழ்ச்சிகளில் டிரம்ஸ் வாசித்துப் பிழைப்பு நடத்தி வந்த இளைஞர், கடந்த ஆறு மாதங்களாக அந்தப் பெண்ணுடன் உறவில் இருந்துவந்துள்ளார். இதற்கு முன்னரும் அந்த ஜோடி ஒன்றாக ஹோட்டல்களில் தங்கியுள்ளனர் என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

காவல்துறையின் தகவல்படி, மறுநாள் காலை சுயநினைவு திரும்பிய அப்பெண், அந்த இளைஞன் மின்விசிறியில் தூக்கில் தொங்குவதைக் கண்டுள்ளார். அவர் தன் காதலனை கீழே இறக்கி, அவரது நண்பர்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, அவன் ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஆனால், அங்கு மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக அறிவித்துள்ளார். இறந்தவரின் குடும்பத்தினர், தற்கொலை என்ற வாதத்தை முற்றிலுமாக நிராகரித்ததோடு, அந்தப் பெண்தான் அவரைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டியுள்ளனர். அந்த இளைஞரின் உடலில் பல காயங்கள் இருந்ததாகவும், அதனால் அவரால் தற்கொலை செய்துகொண்டிருக்க முடியாது என்றும் அவரது சகோதரர் தெரிவித்துள்ளார்.

அந்தப் பெண் கடந்த காலத்திலும் அந்த இளைஞர் மீது தாக்குதல் நடத்தியதாகக் குடும்பத்தினர் மேலும் குற்றம் சாட்டியுள்ளனர். அவர் இறந்துவிட்டதாகக் கூறப்பட்ட பிறகு, அப்பெண் ஏன் பல மணி நேரம் ஹோட்டல் அறையில் தங்கியிருந்தார்? என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். விசாரணையின் ஒரு பகுதியாக இந்தக் குற்றச்சாட்டுகள் சரிபார்க்கப்பட்டு வருவதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. துர்க் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜய் அகர்வால், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு அந்தத் தம்பதியினர் ஹோட்டல் அறையில் மது அருந்திக்கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் ​​பாதிக்கப்பட்டவரின் கைபேசிக்கு வந்த அழைப்பு வாக்குவாதத்தைத் தூண்டியதாகக் தெரிவித்துள்ளார்.

"அந்தப் பெண் மன உளைச்சலுக்கு ஆளாகி, தனது கையில் கத்தியால் காயங்களை ஏற்படுத்திக்கொண்டதாகக் கூறப்படுகிறது. அவர் போதையில் இருந்ததால் பின்னர் சுயநினைவை இழந்துள்ளார். முதற்கட்ட விசாரணையில், அந்த இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகத் கூறப்படுகிறது. இருப்பினும், விசாரணை அல்லது தடயவியல் சான்றுகள் இது ஒரு கொலை என்பதைச் சுட்டிக்காட்டினால், அந்தப் பெண் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்," என்று காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். தூக்கிட்டு மரணமடைந்ததற்கான முதற்கட்ட பிரேத பரிசோதனை முடிவுகள் ஒத்துப்போவதாக காவல்துறை தெரிவித்துள்ளது. விசாரணை பதிவு செய்யப்பட்டுள்ளது, மேலும் விரிவான பிரேத பரிசோதனை மற்றும் தடயவியல் அறிக்கைகளைப் பொறுத்தே இறுதி முடிவு அமையும். இந்த வழக்கின் அனைத்து அம்சங்களும் தொடர்ந்து விசாரணையில் இருப்பதாக புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com