"காதலி கர்ப்பம்.. திருமணம் செய்துகொள்ள சொல்லி தகராறு!" பெண்ணை கொலை செய்த காதலன் - 'எலும்புக்கூடாய்' கண்டெடுத்த போலீசார்

பெண் தன்னை திருமணம் செய்து கொள்ள கூறியதையடுத்து தகராறு காரணமானாக, குற்றம் சாட்டப்பட்டவர் அப்பெண்ணைக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.
Pregnant teen murder
Pregnant teen murderPregnant teen murder
Published on
Updated on
1 min read

காதலி கர்ப்பமானதைத் தொடர்ந்து தனது காதலனால் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் 19 வயதுப் பெண், லக்னோவின் புறநகர்ப் பகுதியில் உள்ள வனப்பகுதியில் சனிக்கிழமையன்று எலும்பு கூடாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

சீதாபூர் மாவட்டம், சந்தனாவைச் சேர்ந்த உயிரிழந்த பெண், குச்லாய் கிராமத்தில் உள்ள கல்லூரிக்குச் செல்வதற்காக மே 25 அன்று வீட்டை விட்டுப் புறப்பட்டுள்ளார். இரவாகியும் அந்தப்பெண் வீடு திரும்பாததால், அவரது குடும்பத்தினர் சந்தனா காவல் நிலையத்தில் கடத்தல் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், சீதாபூர் மாவட்டம், சரையா கிராமத்தைச் சேர்ந்த விஷால் பால் என அடையாளம் காணப்பட்ட குற்றவாளி, சனிக்கிழமையன்று போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர், காவலில் இருந்து தப்பிச் செல்ல முயன்றபோது நடந்ததாகக் கூறப்படும் மோதலில் அவர் காயமடைந்துள்ளார்.

விசாரணையின் போது, ​​போலீசார் ஆதாரங்களைச் சேகரித்து, சீதாபூர் மாவட்டம், சரையா கிராமத்தைச் சேர்ந்த விஷால் பாலிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இருவரும் காதலித்து வந்ததாகவும், பின்னர் அப்பெண் கர்ப்பமாக இருந்ததாகவும் புலனாய்வாளர்களிடம் தெரிவித்துள்ளார். அந்த பெண் தன்னை திருமணம் செய்து கொள்ள கூறியதையடுத்து தகராறு காரணமானாக, குற்றம் சாட்டப்பட்டவர் அப்பெண்ணைக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.

பால் அளித்த தகவலின் அடிப்படையில், போலீசார் சம்பவம் நடந்த வனப்பகுதிக்குச் சென்று, அந்தப் பெண்ணுக்குச் சொந்தமானவை என நம்பப்படும் ஆடைகள், ஒரு செருப்பு, மண்டை ஓடு போன்ற எலும்புக்கூடுகள், எலும்புகள் மற்றும் முடி ஆகியவற்றை மீட்டெடுத்துள்ளனர். மீட்கப்பட்ட ஆடைகளையும் உடற்பாகங்களையும் குடும்ப உறுப்பினர்கள் அடையாளம் கண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், சுற்றுச் சாலைக்கு அருகிலுள்ள வனப்பகுதியில் வீசப்பட்ட சடலம், முழுமையாக சிதைந்து எலும்புக்கூடு நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக காவல்துறை மேலும் தெரிவித்துள்ளது. தடயவியல் குழுவினர் சம்பவ இடத்திலிருந்து ஆதாரங்களைச் சேகரித்த நிலையில், மீதிருந்த உடல்கள் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. தேவைப்பட்டால், டி.என்.ஏ பகுப்பாய்வு மற்றும் பிற சோதனைகளும் நடத்தப்படும்.

பால் கைது செய்யப்பட்டதாகவும், பின்னர் விசாரணையின்போது அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும் சீதாபூர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் துர்கேஷ் சிங் தெரிவித்தார். சனிக்கிழமையன்று, ஆதாரங்களை மீட்பதற்காகக் காவல்துறையினர் குற்றம் சாட்டப்பட்டவரை அழைத்துச் சென்றபோது, ​​அவர் இயற்கை உபாதையைக் கழிக்கச் செல்ல அனுமதி கேட்டதாகவும், பின்னர் ஒரு கைத்துப்பாக்கியைப் பறித்துக்கொண்டு காவல்துறையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தித் தப்பிக்க முயன்றதாகவும் அவர் மேலும் கூறினார்.

போலீசார் பதிலுக்குச் சுட்டதில், குற்றம் சாட்டப்பட்டவரின் காலில் குண்டு காயம் ஏற்பட்டது. பின்னர் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். மேலதிக விசாரணை நடைபெற்று வருவதாகவும், குற்றம் சாட்டப்பட்டவரின் வாக்குமூலத்தின் பேரில் முக்கிய ஆதாரங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com