பெண்களை ஆபாச படமெடுத்து ரசிக்கும் 26 வயது இளைஞர்! 20-க்கும் மேற்பட்ட வீடியோக்களுடன் சிக்கிய நெட் சென்டர் ஓனர்!

இதில் அசரப் அலியின் செல்போன் மட்டும் இளம்பெண்ணின் கணவரின் கையில் சிக்கியுள்ளது
thirunelveli crime news
Published on
Updated on
1 min read

நெல்லை மாவட்டம் பேட்டை ஆர்.பி. சன்னதி தெருவை சேர்ந்தவர் கோதர் மைதீன். இவரது மகன் முகமது அசரப் அலி (வயது 26). இவர் பேட்டையில் உள்ள அம்மா உணவகம் எதிரே ஆன்லைன் சேவை மையம் நடத்தி வருகிறார்.

இவரது கடைக்கு நேற்று பேட்டை நாராயணசாமி கோவில் பகுதியை சேர்ந்த 26 வயது இளம்பெண் ஒருவர் ஆதார் கார்டு ஜெராக்ஸ் எடுப்பதற்காக வந்துள்ளார். அப்போது அசரப் அலி அந்த இளம்பெண்ணை அவருக்கு தெரியாமலேயே தனது செல்போனில் புகைப்படம் எடுத்துள்ளார். மேலும் இளம் பெண்ணை தவறான முறையில் ஆபாச வீடியோவும் எடுத்துள்ளார். இதனை அறிந்த கொண்ட இளம்பெண் மிகுந்த சங்கடத்திற்கு உள்ளாகியுள்ளார். உடனடியாக தனது கணவரை போன் மூலமாக அழைத்துள்ளார் இது குறித்து கூறியுள்ளார்.

அங்கு விரைந்து வந்த அந்த பெண்ணின் கணவர் அசரப் அலியிடம் இதுகுறித்து தட்டி கேட்கவே முதலில் மறுத்துள்ளார். இதையடுத்து போலீசில் புகார் அளிக்க போவதாகவும், காவல்துறைக்கு தகவல் கொடுக்க போவதாகவும் செல்போனை எடுத்துள்ளார். பயத்தில் இருந்த அசரப் அலி பெண்ணின் கணவர் மற்றும் அங்கிருந்தவர்களிடம் இருந்து தப்பி ஓடி உள்ளார். இதில் அசரப் அலியின் செல்போன் மட்டும் இளம்பெண்ணின் கணவரின் கையில் சிக்கியுள்ளது. அதைத்தொடர்ந்து அந்த போனுடன் பேட்டை போலீஸ் நிலையத்துக்கு சென்ற தம்பதி, நடந்த சம்பவம் தொடர்பாக புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் விசாரணையை தொடங்கினர்.

அதையடுத்து அசரப் அலியின் செல்போனை திறந்து பார்த்தபோது, அதில் சுமார் 20க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாசமான வீடியோக்கள் பதிவாகி இருந்தது போலீசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் அசரப் அலி கடைக்கு எதிரே பஸ் நிறுத்தம் இருக்கும் நிலையில், அங்கு வந்து பஸ்சுக்காக காத்திருக்கும் பெண்களையும் தொலைவில் இருந்தவாறு தவறான எண்ணத்தில் போட்டோ மற்றும் வீடியோ எடுத்து ரசித்து வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் புதிய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 77-ன் கீழ் (பிறர் அறியாமல் அந்தரங்கத்தை பார்ப்பது) வழக்குப்பதிவு செய்து அசரப் அலியை தேடி வந்தனர். இந்நிலையில் மாநகர போலீஸ் கமிஷனரின் மேற்பார்வையின் கீழ் இயங்கும் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் வேல் சவுத்ரி தலைமையிலான குழுவினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி இன்று காலை முகமது அசரப் அலியை கைது செய்து, காவல் நிலைய சிறையில் அடைத்தனர். மேலும் வேறு ஏதும் குற்ற செயலில் ஈடுபட்டுள்ளாரா என்றும் கடையில் இருந்த கணினி மற்றும் அவரின் செல்போன்களை சோதனை செய்து வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com