திருநெல்வேலியில் விடுதியில் தங்கியிருந்த பெண்களின் அந்தரங்க வீடியோ மற்றும் புகைப்படங்களை ரகசியமாக எடுத்து ஆண் நண்பருக்கு அனுப்பியதாக திருமணமான பெண் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி டவுன் பகுதியைச் சேர்ந்தவர் மகரஜோதி (39). இவர் அதே பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கணவன் - மனைவி இருவருக்குமிடையே இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மகரஜோதி குடும்பத்திலிருந்து பிரிந்து வந்து, திருநெல்வேலியில் உள்ள தனியார் பெண்கள் விடுதியில் ஓர் அறை எடுத்து தங்கி வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், கோயம்புத்தூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவருடன் மகரஜோதிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் சாதாரண நட்பாக இருந்த இவர்களது பழக்கம், பின்னாளில் திருமணத்தை மீறிய உறவாக மாறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அதன் பின்னர் இருவரும் செல்போனில் அடிக்கடி பேசி வந்துள்ளனர். அப்போது அந்த இளைஞர், பெண்கள் விடுதியில் தங்கியிருந்த மற்ற பெண்களின் அன்றாட நடவடிக்கைகள் மற்றும்அவர்களின் அந்தரங்க புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுத்து அனுப்பும்படி மகரஜோதியிடம் கேட்டதாக கூறப்படுகிறது. அதனை ஏற்றுக் கொண்ட மகரஜோதி, தனது கள்ளக்காதலனை மகிழ்விக்க விடுதியில் உள்ள குளியலறை, துணி மாற்றும் அறை உள்ளிட்ட பகுதிகளில் மறைந்திருந்து பெண்களின் ரகசிய மற்றும் அந்தரங்க புகைப்படங்களை எடுத்து அவரது கள்ளகாதலனுக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது.
மகரஜோதியின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த விடுதியில் தங்கியிருந்த சில பெண்கள், அவருக்கு தெரியாமல் மரகத ஜோதியை கண்காணித்துள்ளனர். அப்போது அவர் மறைவாக இருந்து பெண்களை வீடியோ எடுப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இதையடுத்து, விடுதி காப்பாளரிடம் மாணவிகள் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து விடுதி காப்பாளர் பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். இந்த புகாரின் அடிப்படையில், பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து மகரஜோதியை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவரது செல்போன் மற்றும் பிறவற்றை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய கோயம்புத்தூர் இளைஞர் குறித்து கூடுதல் தகவல்களை சேகரிக்கும் பணியிலும் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.
தங்களுக்கே தெரியாமல் ஒரு பெண் இவ்வாறான செயல்களில் ஈடுபட்டது விடுதியில் தங்கியிருந்த மாணவிகள் மற்றும் பெண்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும், பெண்கள் தங்கும் விடுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்த வேண்டும் என்றும், மறைமுகமாக வீடியோ எடுப்பது போன்ற சம்பவங்களை தடுக்க கடுமையான கண்காணிப்பு அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.