"கடைக்கு கூட்டி சென்று.. கழிவறையில் சீரழிக்கப்பட்ட சிறுமி" - 'ஆபாச மெசேஜ்' அனுப்பிய அப்பாவின் நண்பர்!

பாலியல் வன்கொடுமை நடந்த பின்னர் அந்த ஊழியர் தன்னைக் கழிப்பறைக்குள் பூட்டிக்கொண்டதாகவும் குற்றப்பத்திரிகையில் அந்த சிறுமி கூறியுள்ளார்.
Child abuse investigation
Child abuse investigation
Published on
Updated on
1 min read

ஜெர்மனியில் கடந்த ஆண்டு 14 வயது சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், 55 வயதான திருநங்கை காவல்துறை அதிகாரி ஒருவர் விசாரணைக்கு உட்படுத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உயிரியல் ரீதியாக ஆணாக இருந்தும் தன்னை ஒரு பெண்ணாக அடையாளப்படுத்திய அதிகாரி ஒருவரிடமிருந்து, குழந்தைகள் ஆபாசப் படங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கடந்த செவ்வாய்க்கிழமை அன்று ட்ரான்ஸ்டைன் பிராந்திய நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். அரசுத் தரப்பின் கூற்றுப்படி, இந்த வழக்கு வெளிவந்த பிறகு அவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த அதிகாரி தனது நண்பர்களில் ஒருவருடைய பதின்மவயது மகளை துரித உணவு விடுதிக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது அந்த சிறுமியை கழிவறையில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வாட்ஸ்அப்பில் ஆபாசமான செய்திகளையும் அனுப்பிய அதிர்ச்சி சம்பவம் வெளிவந்துள்ளது.

கழிவறையில் நடந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட அந்த சிறுமி அதிர்ச்சியில் உறைந்துபோய், உடல் முழுவதும் நடுங்கிக்கொண்டும், இதயம் படபடத்துக்கொண்டும் இருந்ததாகவும் அந்த சிறுமி தெரிவித்துள்ளார். பாலியல் வன்கொடுமை நடந்த பின்னர் அந்த ஊழியர் தன்னைக் கழிப்பறைக்குள் பூட்டிக்கொண்டதாகவும் குற்றப்பத்திரிகையில் அந்த சிறுமி கூறியுள்ளார்.

அந்த ஊழியரிடமிருந்து பெறப்பட்ட கணினியிலிருந்து 3 வயது குழந்தையின் காணொளி இருந்துள்ளதாக அரசுத் தரப்பு தெரிவித்துள்ளது. மேலும், அந்த திருநங்கை அதிகாரி பாலியல் வன்கொடுமை படங்களைத் தயாரித்ததாகக் கூடுதல் குற்றச்சாட்டையும் எதிர்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அவரது விசாரணை நிலுவையில் இருக்கும் வரை சிறையில் ஆண்கள் பிரிவில் தடுத்து வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிறுமியைப் பாலியல் வன்புணர்வு செய்ததற்கு மற்றும் குழந்தை ஆபாசப் படங்களை வைத்திருந்ததற்கு என அந்த அதிகாரி மூன்று முதல் மூன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிப்பார் எனவும் கூறப்படுகிறது.

மேலும், இந்த வழக்கில் நான்கு நாட்களுக்கு விசாரணை நடைபெற உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக அக்டோபர் 8 அன்று தீர்ப்பு எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், நிர்ணயிக்கப்பட்ட தேதிக்கு முன்பே இந்த நடவடிக்கைகள் முடிவடையவும் வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com