"சிறுமியை சீரழித்த 63 வயது முதியவர்" - ஆசை வார்த்தை கூறி சிறுமியை கர்ப்பமாக்கிய கொடூரம்! விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், மாணவியிடம் விசாரித்துள்ளனர்
sexually abuses
Published on
Updated on
1 min read

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர், அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் அந்த மாணவிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டதாக பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து மாணவியின் பெற்றோர் அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், மாணவியிடம் விசாரித்துள்ளனர். மேலும் இது குறித்து அருகில் உள்ள கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து கோட்டக்குப்பம் மகளிர் போலீசார் நடத்திய விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த பெருமாள் (63) என்ற முதியவர் மாணவியிடம் பழகி வந்ததாகவும், அதை தொடர்ந்து ஆசை வார்த்தைகள் கூறி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரியவந்தது.  இதையடுத்து அந்த மாணவி கர்ப்பமாகி உள்ளார். மேலும் இவர் மாணவியின் பக்கத்துக்கு வீட்டுக்காரர் என்பதால் பெற்றோருக்கு எந்த சந்தேகமும் எழாமல் பழகி வந்துள்ளார். ஒரே ஊரை சேர்ந்த பெரியவர் என்பதால் அவர் வீட்டுக்கு வருவதும், பக்கத்துக்கு வீட்டிற்கு இந்த பெண் போவதும் வழக்கமாக இருந்து வந்துள்ளது. மேலும் அந்த பெண்ணிடம் "இதெல்லாம் ஒன்றும் ஆகாது” என்பது போல் வார்த்தைகள் கூறி அவரை கட்டாயப்படுத்தியும் உள்ளார். விசாரணையில் தெரியவந்த தகவல்களை கேட்டு மாணவியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர் 

இதையடுத்து குற்றச்சாட்டப்பட்ட பெருமாள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் காவல்துறையினர். இந்த செய்தி அறிந்த பெருமாள் ஊரைவிட்டு தலைமறைவாகியுள்ளார். உறவினர்களிடம் விசாரித்த போலீசார் அவரை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில், மரக்காணம் அருகே உள்ள சவுக்கு தோப்பில் பதுங்கியிருந்த பெருமாளை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பாதிக்கப்பட்டார் 18 வயதுக்கு உட்பட்டவர் என்பதால் குற்றஞ்சாட்டப்பட்டவர் மீது போக்சோ வழக்கு பதியப்பட்டுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com