

ஆன்மீக நகரமான திருவண்ணாமலைக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வரும் கோவிலில் பெண்களை மடக்கி பாலியல் சீண்டல் மற்றும் பணம் பறிக்கும் கும்பலால் பரபரப்பு ஏற்பட்டது. இரண்டு பெண்களிடம் நகை மற்றும் பணப்பறிப்பில் ஈடுபட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டனர். திருவண்ணாமலையில் பவுர்ணமி நாட்களில் கிரிவலம் செல்வது விஷேசமான ஒன்று. இதனால் ஒவ்வொரு பவுர்ணமி நாட்களிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலதிற்கு வந்து செல்வது வழக்கம்.
இந்நிலையில் வைகாசி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் கடந்த 30ம் தேதி நண்பகல் தொடங்கி 31ம் தேதி நண்பகல் நிறைவுற்றது. தர்மபுரி மாவட்டத்திலிருந்தும் திருவண்ணாமலை பகுதியைச் சேர்ந்த இளம் பெண்கள் கிரிவலம் முடிந்த நிலையில் அய்யம்பாளையம் ஏரிக்கரை பகுதியில் தனியாக சென்றனர். அப்போது அதே பகுதியில் மது அறிந்து கொண்டிருந்த 4 பேர் கொண்ட கும்பல் அந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதுடன் நண்பர்கள் 9 பேரை அழைத்து வந்து அந்த பெண்ணை நிர்வாணமாக வீடியோ எடுத்து மிரட்டி பணம் மற்றும் செல்போன்களை பறித்து சென்றுள்ளனர். மேலும் “எப்போது பணம் கேட்டாலும் தர வேண்டும் என்றும் இல்லையென்றால் வீடியோவை இணையத்தில் வெளியிடுவோம்” என மிரட்டல் விடுத்துள்ளனர். தர்மபுரியை சேர்ந்த பெண்ணை செல்போனில் அழைத்து ரூ 1 லட்சம் பணம் கேட்டும் மிரட்டியுள்ளனர். செய்வதறியாது இருந்த அந்த பெண் ரூ.4 ஆயிரம் GPay மூலம் அனுப்பியுள்ளார். இது பாத்தது மீதி பணத்தையும் அனுப்பாரு மிரட்டியுள்ளனர். இதையடுத்து அந்த பெண் காவல்துறையை தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளார். அதைத்தொடர்ந்து திருவண்ணாமலை போலீசார் அந்த பெண்ணை தொடர்பு கொண்டு, விசாரணையை தொடங்கினர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட திருவண்ணாமலை சேர்ந்த மற்றொரு பெண், நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய திருவண்ணாமலை நகர காவல் நிலைய போலீசார் விசாரணை செய்ததில் அந்த கும்பலிடம் 23 பெண்களை நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்து மிரட்டியது தெரிய வந்தது. இதை அடுத்து 10 பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் கைது செய்தனர். அதில் ஒருவர் மைனர் என்பதால் அவர் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பப்பட்டார்.
மேலும் 8 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆடையூர் கிராமத்தைச் சேர்ந்த வாசுதேவன், பெரியபாலியப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஆகாஷ், அஸ்வநாதசுரனை கிராமத்தைச் சேர்ந்த அப்பு, ஹரிகரன், ஷர்மா, சேந்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த அருண்குமார், திருவண்ணாமலை பாலாஜி நகரை சேர்ந்த சிவகணேசன் (எ) சூர்யா மற்றும் விண்ணவனூர் கிராமத்தைச் சேர்ந்த துரை ஆகியோர் தற்பொழுது குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தால் ஆன்மீக நகரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கிரிவலம் சென்ற பெண்களை கடத்தி சென்று நிர்வாணமாக வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டிய 8 பேர் கொண்ட கும்பல் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்