“தாத்தா விடுங்க.. நான் வீட்டுக்கு போனோம்” - 7 வயது சிறுமியை சீரழித்த 70 வயது கடைக்காரர்.. பிஸ்கெட் வாங்க போன குழந்தைக்கு நடந்த கொடூரம்!

அதிர்ச்சியையும் மனவேதனையையும் தாங்க முடியாமல் பின்னர் தனது தாயிடம் நடந்ததை கூறியுள்ளார்...
“தாத்தா விடுங்க.. நான் வீட்டுக்கு போனோம்” - 7 வயது சிறுமியை சீரழித்த 70 வயது கடைக்காரர்.. பிஸ்கெட் வாங்க போன குழந்தைக்கு நடந்த கொடூரம்!
Published on
Updated on
1 min read

அஸ்ஸாம் மாநிலம் திப்ருகர் மாவட்டம் மாவட்டத்தின் நாம்ரூப் பகுதியில் 7 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் வன்கொடுமை நடந்ததாக கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் 70 வயது முதியவர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

காவல்துறையினரின் தகவலின்படி, நாம்ரூப் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தில்லி தேயிலைத் தோட்டம் பகுதியில் வசித்து வந்த காலிதுர் ரஹ்மான் என்ற மூசா என்பவர், சிறுமியின் வீட்டருகே சிறிய கடை நடத்தி வந்துள்ளார். கடந்த மே 14ஆம் தேதி, அந்த 7 வயது சிறுமி பிஸ்கெட் வாங்குவதற்காக அவரது கடைக்கு சென்றிருந்தபோது, குற்றம் சாட்டப்பட்ட முதியவர் சிறுமியை வீட்டிற்குள் அழைத்துச் சென்றுள்ளார் அந்த கடைக்காரர். அப்போது சிறுமி “தாத்தா விடுங்க.. நான் வீட்டுக்கு போனோம்” என கெஞ்சியுள்ளார். ஆனால் அந்த 70 வயது முதியவர் வலுக்கட்டாயமாக அழைத்து சென்று அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரும், நாம்ரூப் ஆஞ்சலிக் கோர்க்கா மாணவர் சங்கத்தினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சிறுமியின் அப்பாவித்தனத்தை பயன்படுத்திக் கொண்டு குற்றவாளி இந்த கொடூரச் செயலில் ஈடுபட்டதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.மேலும், நடந்த சம்பவத்தை யாரிடமும் கூறக்கூடாது என அந்தச் சிறுமி மிரட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆரம்பத்தில் அவர் தனது பெற்றோரிடம் எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால் அதிர்ச்சியையும் மனவேதனையையும் தாங்க முடியாமல் பின்னர் தனது தாயிடம் நடந்ததை கூறியுள்ளார்.

இதையடுத்து, சிறுமியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் சனிக்கிழமை குற்றம் சாட்டப்பட்ட காலிதுர் ரஹ்மானை கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக நாம்ரூப் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் பிரிவு 6 மற்றும் பாரதிய நியாய சம்ஹிதா (BNS) சட்டத்தின் பிரிவு 65(2) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னர், Dibrugarh பகுதியில் உள்ள குழந்தைகள் பராமரிப்பு இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.இந்த சம்பவத்திற்கு கடுமையான கண்டனம் தெரிவித்துள்ள நாம்ரூப் ஆஞ்சலிக் கோர்க்கா மாணவர் சங்கம், குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com