2004 ஆம் ஆண்டு மார்ச் 12 அன்று, கலிபோர்னியாவின் ஃப்ரெஸ்னோவில் உள்ள வெஸ்ஸன் குடும்பத்தின் பாழடைந்த வீட்டிற்கு காவல்துறையினர் வந்தனர். வீட்டிலிருந்து தப்பிச் சென்றிருந்த குடும்பத் தலைவரின் இரண்டு மருமகள்கள், தங்கள் குழந்தைகளை மீட்க முயன்றதை அடுத்து போலீசாரின் வருகை நிகழ்ந்தது. அங்கு அவர்கள் கண்ட கட்சி தங்கள் வாழ்நாளின் மறக்கமுடியாத கட்சியாக மாறும் என்று, அன்று அவர்கள் நினைக்கவில்லை. இது அவர்களை மட்டுமல்ல இதை படிப்பவர்களைக் கூட உறையவைக்கும்.
அங்கு அவர்கள் கண்ட கட்சியானது, 1 முதல் 25 வயதுக்குட்பட்ட ஒன்பது உடல்களைக் கண்டெடுத்தனர். வெஸ்ஸனின் பிள்ளைகளுக்கு, பலதார மணம் மற்றும் முறையற்ற உறவுமுறையை அவர் போதித்து வந்துள்ளார். "நான் வாழவே விரும்பவில்லை" என்று வெஸ்ஸனின் மகள் ஜிப்ஸி போலீசாரிடம் கூறியுள்ளார். 2009-ம் ஆண்டு தன் தந்தைக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பிறகு முதல் இரண்டு ஆண்டுகளுக்குத் தன்னால் சரியாகச் சாப்பிடவோ தூங்கவோ முடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், வெஸ்ஸன் கியானியுடன் இரண்டு குழந்தைகளைப் பெற்றெடுத்து, அவர்கள் இருவரையும் கொலை செய்துள்ளார் என்ற அதிர்ச்சி தகவலும் போலீசாருக்கு தெரியவந்தது.
முன்னாள் ராணுவ வீரரான வெஸ்ஸன், தனது மனைவி மற்றும் அவளது பிள்ளைகள் மீது பல ஆண்டுகளாக கொடுமை இழைத்துவந்துள்ளார். வெஸ்ஸன் வியட்நாமில் பணியாற்றிவந்துள்ளார். மேலும், ராணுவப் பணியிலிருந்து விடுவிக்கப்பட்ட சிறிது காலத்திலேயே, அவர் ரோஸ்மேரி சோலாரியோவுடன் உறவைத் தொடங்கினார். ரோஸ்மேரி அவரது எட்டுப் பிள்ளைகளுடன் வெஸ்ஸின் வீட்டிற்குக் குடிபெயர்ந்துள்ளார். 1971-ம் ஆண்டு சமயத்தில், ரோஸ்மேரி வெஸ்ஸனின் மகனைப் பெற்றெடுத்திருந்தார். வெறும் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, வெஸ்ஸின் வக்கிரகுணம் இதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக வெளிவரத் தொடங்கியது , அப்போது வெறும் எட்டு வயதே ஆன தன் மகள் எலிசபெத்தை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தத் தொடங்கினார். எலிசபெத்துக்கு 14 வயதும், வெஸ்ஸனுக்கு 34 வயதும் ஆனபோது, அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். அதாவது அவர் தனது மகளை திருமணம் செய்துள்ளார். நான்கு மாதங்களுக்குப் பிறகு, எலிசபெத் அவர்களின் முதல் குழந்தையைப் பெற்றெடுத்தார். மொத்தமாக, அந்தத் தம்பதியருக்குப் பத்து குழந்தைகள் இருந்தனர். அவர்களில் ஒரு குழந்தை இறந்துவிட்டது. அதன் பின்பு வெஸ்ஸன் ஒரு கொடூரமான கணவனாகவும் தந்தையாகவும் இருந்துவந்துள்ளார். அவர் எந்த வேலைகளையும் செய்யாது தன் பிள்ளைகளை பணம் சேகரித்து நேரடியாகத் தன்னிடம் கொடுக்குமாறு கட்டாயப்படுத்தியுள்ளார்.
1989-ம் ஆண்டில், அவர் சமூக நலன் பேரில் பணம் பெற்று மோசடி செய்த குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டிருந்தார். அதன் விளைவாக, அந்தக் குடும்பம் கைவிடப்பட்ட வீடுகள், பாழடைந்த குடியிருப்புகள், மற்றும் கப்பல்களில்கூடத் தொடர்ந்து வசிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானது. வீட்டில் தன் பிள்ளைகளையும், மனைவியையும் சித்திரவதைக்கு உள்ளாக்கியதோடு, பிள்ளைகள் பள்ளிச்செல்ல மறுக்கப்பட்டனர். மேலும், அவர்களுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிக்க எலிசபெத் நிர்பந்திக்கப்பட்டார். அவரை, குழந்தைகள் கடவுள், ஆண்டவர் என்று தன்னை அழைக்குமாறு வற்புறுத்தியுள்ளார். அவருக்கு பிறந்த பெண் குழந்தைகளை அவரின் மற்ற ஆண் குழந்தைகளோடு பேசவும், அவர்களின் தாயோடு பேசவும் அனுமதி மறுத்துள்ளார். மேலும், அவரின் பெண் குழந்தைகளுக்கு 8 வயது முதலே அவர்கள் திருமண வாழ்க்கைக்கு தயார் செய்வதாக கூறி, அவரின் 2 மகள்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். அவரின் 3 மருமகள்களையும் பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். இதனால் அந்த 5 பெரும் பின்னாளில் கர்பமானனார்.
அதன் பின்பு 2004-ம் ஆண்டில், கலிபோர்னியாவின் ஃப்ரெஸ்னோவிலிருந்து தனது பெற்றோர் வசித்து வந்த வாஷிங்டனுக்கு முழு குடும்பமும் குடிபெயரப் போவதாக வெஸ்ஸன் அறிவித்தார். அதன் பின்புதான் ஆரம்பத்தில் கூறிய அனைத்தும் நடந்தது. முதலில் இது ஒரு குழந்தைப் பராமரிப்பு உரிமை தகராறு என அதிகாரிகள் கருதினர். அங்கு வந்ததும், வெஸ்ஸன் அவர்களை நுழைவாயிலில் காத்திருக்குமாறு கூறிவிட்டுத் தனது வீட்டிற்குள் சென்றார். அவர் வெளியே வந்தபோது, அவரது ஆடைகள் இரத்தத்தில் நனைந்திருந்தன. துப்பாக்கிச் சத்தம் எதுவும் கேட்கவில்லை என்று அதிகாரிகள் கூறினார். அவர்கள் அந்த இடத்திற்குள் வலுக்கட்டாயமாக நுழைந்தபோது, ஒரு திகிலூட்டும் காட்சியைக் கண்டனர். பழங்கால சவப்பெட்டிகளால் நிரப்பப்பட்டிருந்த அந்தப் படுக்கையறையில் ஒன்பது உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. அந்த குடும்பத்தில் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் கண்ணில் நேரடியாகச் சுடப்பட்டு இறந்துகிடந்தனர். இது, அந்த பகுதியில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதன் பின்பு, 79 வயதான வெஸ்ஸன், ஜூன் 17, 2005 அன்று மரண தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 'சான் குவென்டின்' மறுவாழ்வு மையத்தில் சிறையில் உள்ளார். 2019-ல் ஆளுநர் நியூசம் கலிபோர்னியாவில் மரண தண்டனையை நிறுத்தி, பின்னர் மரண தண்டனைக் கைதிகள் பிரிவையும் ஒழித்ததால், அவர் இனி அவர் மரண தண்டனையை எதிர்கொள்ள வேண்டியதில்லை என்ற நிலை உருவாகியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.