

கடந்த மாதம் 11 தேதி கிருஷ்ணகிரி அருகே ராயக்கோட்டை செல்லும் சாலையோரத்தில் அரை கிலோ மீட்டர் இடைவெளியிலேயே 2 ஆண் உடல்களை தீயிட்டு எரித்த நிலையில் கிடந்தது. வாலிபர் ஒருவரை, உடலில் பெட்ஷீட் உள்ளிட்டவற்றை சுற்றி எடுத்துக் கொண்டு வந்து பெட்ரோல் ஊற்றி தென்னை ஓலைகளை வைத்து எரித்து கொலை செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். அதேபோல் இந்த எரிந்த சடலத்திலிருந்து அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வெப்பாலம்பட்டி பகுதியில் மேலும் ஒரு இளைஞரை இதே பாணியில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொலை செய்துள்ளதாகவும் தகவல்கள் கிடைத்தன.
போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தீயில் கருகி உயிரிழந்தவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள்? எதற்காக கொலை செய்துள்ளனர்? வேறு பகுதியில் கொலை செய்து அவர்களை கொண்டு வந்து இங்கு தீ வைத்து எரித்தனரா? என்பது குறித்து தாலுக்கா போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
தற்போது அது கொலை என்றும், அதற்கான காரணம் குறித்தும் திடுக்கிடும் தகவல் கிடைத்துள்ளன. மேலும் இந்த இரண்டு கொலைக்கும் சம்பந்தம் உள்ளது என்றும், செய்தது ஒரே குற்றவாளிகள் தான் என்பதும் தெரியவந்துள்ளது. போலீசார் விசாரனையில், எரிந்து கிடந்தது பாலகுறி பகுதியை சேர்ந்த இராணுவ வீரர் மகேஷ்குமார் (36) மற்றும் அவரது தந்தை செல்லப்பன் (64) என்பது தெரியவந்தது. இராணுவ வீரர் மகேஷ்குமாரின் மனைவி பானுப்பிரியா (29) மற்றும் மேல்கொட்டாய் கிராமத்தை சேர்ந்த பூவரசன் (19) என்பவருடன் திருமணத்தை மீறிய ஆரோவில் இருந்துள்ளார். இதற்கு மகேஷ் குமார் இடையூறாக இருந்ததால் அவரையும், அவரது தந்தை செல்லப்பன் ஆகிய இருவரையும் கத்தியால் குத்திக் கொலை செய்து, சடலங்களை இருசக்கர வாகனங்களில் கடத்திச் சென்று டீசல் ஊற்றி கொலை செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் கொலையாளிகளை தனிப்படை போலீசார் 24 மணி நேரத்தில் இருவரையும் கைது செய்தனர்.
இவ்வழக்கு பொதுமக்களிடம் தீவிர அச்சத்தையும், சட்ட ஒழுங்கு குறித்த பதட்டத்தையும் ஏற்படுத்தியதால், மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் குமார் இருவர் மீதும் குண்டாஸ் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் பூவரசனை சேலம் மத்திய சிறையிலும், பானுப்பிரியாவை கோயம்புத்தூர் மகளிர் சிறப்பு சிறையிலும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.