"கள்ளக்காதலனோடு சேர்ந்து காதல் கணவனை கொலை!" வெட்ட வெளிச்சமான மனைவியின் நாடகம் - ஏரிக்கரையில் கண்டெடுக்கப்பட்ட சடலம்

அர்ச்சனாவுக்கு பருல் பாலுடன் திருமணத்திற்கு மீறிய உறவு இருந்துள்ளது. இதனால் அவர்களின் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
Bengaluru murder case
Bengaluru murder caseBengaluru murder case
Published on
Updated on
1 min read

பெங்களூரு புறநகரில் உள்ள ஒரு ஏரிக்கு அருகே, தனது கணவரைக் கொலை செய்து அவரது உடலைப் புதைத்ததாக 21 வயதுப் பெண்ணும், அவருடைய காதலராகக் கூறப்படும் நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அர்ச்சனா சௌஹான் மற்றும் பருல் பால் ஆகியோரை குற்றம் சாட்டப்பட்டவர்கள் என காவல்துறை அடையாளம் கண்டுள்ளது. பாதிக்கப்பட்டவரான 25 வயது அபிஜித் பண்டிட், மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர். இவர் பெங்களூருவில் பாதுகாப்பு காவலராகப் பணிபுரிந்து வந்துள்ளார்.

காவல்துறையின் தகவல்படி, அபிஜித்தும் அர்ச்சனாவும் காதலித்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர். இருப்பினும், அர்ச்சனாவுக்கு பருல் பாலுடன் திருமணத்திற்கு மீறிய உறவு இருந்துள்ளது. இந்த உறவைப்பற்றி அபிஜித் அறிந்ததால், சமீப மாதங்களில் அவர்களின் உறவில் விரிசல் ஏற்பட்டதாகவும், இது தம்பதியிடையே அடிக்கடி சண்டைகள் ஏற்பட வழிவகுத்ததாகவும் காவல்துறை தெரிவித்துள்ளனர்.

தனது கணவரை சுமார் ஒரு வாரமாகத் தொடர்புகொள்ள முடியவில்லை என்று கூறி, அர்ச்சனா கடந்த மே 27 அன்று ராஜானுகுண்டே காவல் நிலையத்தை அணுகி புகார் அளித்துள்ளார். இதன் பிறகே இந்த வழக்கு வெளிச்சத்திற்கு வந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. விசாரணையின் ஒரு பகுதியாக, போலீசார் பருல் பாலிடம் விசாரணை நடத்தியுள்ளனர், அவரது வாக்குமூலங்கள் சந்தேகத்தை ஏற்படுத்தியதாகவும் முன்னுக்கு பின் முரணாகவும் இருந்துள்ளது. விசாரணையின் போது, ​​அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும், சடலம் புதைக்கப்பட்ட இடத்தைத் தெரிவித்ததாகவும் சொல்லப்படுகிறது.

காவல்துறையின் கூற்றுப்படி, கயிற்றால் அபிஜித்தின் கழுத்தை நெரித்துக் கொல்வதற்கு முன்பு, தன் உடன் வந்த கூட்டாளிகள் இருவருடன் அவர் மது அருந்தியதாக பால் புலனாய்வாளர்களிடம் கூறியுள்ளார். இந்தச் சதித்திட்டம் பற்றி அர்ச்சனாவுக்குத் தெரிந்திருந்ததாகவும், தன் கணவரைக் கொலை செய்யும் திட்டத்திற்கு அவர் ஆதரவளித்ததாகவும் காவல்துறை தரப்பில் சந்தேக்கின்றனர். குற்றம் சாட்டப்பட்டவர் அளித்த தகவலின் அடிப்படையில், லிங்கனஹள்ளியில் உள்ள ஏரிக்கு அருகிலுள்ள ஒரு பகுதியில் இருந்து அபிஜித்தின் அழுகிய உடலை காவல்துறை குழு மீட்டுள்ளது. மரணத்திற்கான சரியான காரணத்தைக் கண்டறிய, அந்த உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

கொலைக்கு வழிவகுத்த சம்பவங்களின் வரிசைமுறையையும், குற்றம் சாட்டப்பட்ட ஒவ்வொருவரும் ஆற்றிய பங்கையும் கண்டறிய விசாரணை நடைபெற்று வருவதாக ஒரு மூத்த காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். கொலையில் நேரடியாகப் பங்கேற்றதாக நம்பப்படும் மேலும் இரண்டு நபர்களைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படுவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com