“இரண்டு கணவர்களை விட்டு காவலருடன் ஓட்டம் பிடித்த பெண்” - 10 வயது மகனுடன் பரிதவிக்கும் வாலிபர்.. மனைவியை மீட்டுத்தர கோரி புகார்!

சினிமா பாடல்களுக்கு ரீல்ஸ் செய்து அதை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதை வழக்கமாக வைத்திருந்ததாக...
“இரண்டு கணவர்களை விட்டு காவலருடன் ஓட்டம் பிடித்த பெண்” - 10 வயது மகனுடன் பரிதவிக்கும் வாலிபர்.. மனைவியை மீட்டுத்தர கோரி புகார்!
Published on
Updated on
1 min read

கர்நாடக மாநிலம், மைசூர் பகுதியை சேர்ந்தவர் மோனிகா இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மதன்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணமான நிலையில் சில கருத்து வேறுபாடுகள் காரணமாக மோனிகா மதனை பிரிந்து இருந்த நிலையில் சந்தன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அவரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்திருக்கிறார். சந்தன் மற்றும் மோனிகா தம்பதிக்கு 10 வயதிலொரு மகன் உள்ளார்.

சாந்தன் அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் நிலையில் மோனிகா மகனை பார்த்துக் கொண்டு வீட்டில் இருந்திருக்கிறார். அதிகமாக மொபைல் பயன்படுத்தும் பழக்கம் உடைய மோனிகா சினிமா பாடல்களுக்கு ரீல்ஸ் செய்து அதை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதை வழக்கமாக வைத்திருந்ததாக சொல்லப்படுகிறது. அப்போது மோனிகாவிற்கு எச்.எஸ்.ஆர்.லேவுட் காவல் நிலையத்தில் ஓட்டுநராக பணிபுரியும் காவலர் ராகவேந்திரா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவருக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர் இருவரும் தொடர்ந்து பேசி வந்த நிலையில் இவர்களது பழக்கமானது நாளடைவில் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியுள்ளது. இதனை தொடர்ந்து மோனிகா சந்தனை விட்டு விட்டு காவலர் ராகவேந்திராவுடன் சேர்ந்து வாழ முடிவு செய்திருக்கிறார். எனவே இதற்கு கணவர் சந்தன் இடையூறாக இருக்க கூடாது என நினைத்து அவர் மீது அருகில் உள்ள காவல் நிலையத்தில் குடும்ப வன்முறை புகார் அளித்திருக்கிறார். எனவே அவரை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரணை மேற்கொண்டு வந்திருக்கின்றனர்.

இந்த நேரத்தை பயன்படுத்தி கொண்ட மோனிகா வீட்டில் இருந்த நகைகள் மற்றும் ஒரு லட்சத்து எண்பதாயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு காவலர் ராகவேந்திராவுடன் ஊரை விட்டு சென்றிருக்கிறார். பின்னர் காவல் நிலையத்தில் இருந்து வீட்டிற்கு சென்ற சந்தன் தனது மனைவியும் காவலர் ஊரை விட்டு சென்றதை அறிந்து அதிர்ச்சி அடைந்திருக்கிறார். மேலும் இது குறித்து லெவுட் காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறார். இரண்டு கணவர்களை விட்டு விட்டு பெண் காவலருடன் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com