“ஏழு பேரின் உயிரை காவு வாங்கியதா கல்கத்தா காளி? ” - பயத்தில் தவிக்கும் எண்ணூர் மக்கள்… தொடர்ந்து வெடிக்கும் போராட்டங்கள்!

இந்த வழக்கையும் விசாரித்த நீதிமன்றம் விரைவில் சிலையை ஒப்படைக்க வேண்டும் என காவல் துறைக்கு எச்சரிக்கை கொடுத்தது.
“ஏழு பேரின் உயிரை காவு வாங்கியதா கல்கத்தா காளி? ” - பயத்தில் தவிக்கும் எண்ணூர் மக்கள்… தொடர்ந்து வெடிக்கும் போராட்டங்கள்!
Published on
Updated on
2 min read

சென்னை, எண்ணூர் நெட்டுக்குப்பம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் கார்த்திக். இவர் மீன் பிடிக்கும் தோழி செய்து வரும் நிலையில் அதே பகுதியை சேர்ந்த சுகன்யா என்ற பெண்ணை கடந்த சில வருடங்களுக்கு அன்பு திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ள நிலையில் அவர்களுக்கு சொந்தமான வீட்டில் கடந்த (பிப் 16) ஆம் தேதி கல்கத்தா காளி சிலையை நிறுவி கும்பாபிஷேகம் செய்து வழிபட தொடங்கியிருக்கின்றனர்.

கார்த்திக் கல்கத்தா காளியை வழிபட தொடங்கியதில் இருந்து அந்த கிராமத்தை சேர்ந்த 60 வயதான முனியம்மா, 40 வயதான குப்புசாமி, 40 வயதான சுரேந்தர், 60 வயதுடைய மணி, 40 வயதுடைய சேகர் உட்பட ஏழு நபர்கள் மர்மமான முறையில் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த கிராமத்தினர் இதற்கு காரணம் கார்த்திக் கல்கத்தா காளியை வழிபாடு செய்வத்தான் என நினைத்திருக்கின்றனர். எனவே கடந்த ஜூன் மாதம் ஊர்மக்கள் அனைவரும் சேர்ந்து கார்த்திக் வீட்டின் முன்பு காளி சிலையை அப்புறப்படுத்த வேண்டும் என போராட்டம் செய்தனர்.

Admin

இதனை தொடர்ந்து என்னுள் வட்டாட்சியர் நேரடியாக சம்பவ இடத்திற்கு சென்று போலீசாரின் உதவியுடன் கல்கத்தா காளி சிலையை அப்புறப்படுத்தி வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து பாதுகாத்தனர். எனவே இதனை தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த கார்த்திக் “என் வீட்டில் எனக்கு இஷ்டமான தெய்வத்தை வைத்து வணங்குவது எனது தனிப்பட்ட உரிமை” என கூறினார். மேலும் 7 பேர் இறந்ததற்கு கல்கத்தா காளி தான் காரணம் என்பதற்கு போதிய ஆதாரங்கள் இல்லாததால் சிலையை கார்த்திக்கிடம் ஒப்படைக்க வேண்டும் என தீர்ப்பளித்தது.

இருப்பினும் சிலை ஊருக்குள் கொண்டுவரக் கூடாது என பொதுமக்கள் போராட்டம் செய்ததால் காவல் துறையினர் சிலையை கார்த்திக்கிடம் ஒப்படைக்காமல் இருந்திருக்கிறது. பின்னர் இதன் காரணமாக கார்த்திக் காவல்துறை மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கையும் விசாரித்த நீதிமன்றம் விரைவில் சிலையை ஒப்படைக்க வேண்டும் என காவல் துறைக்கு எச்சரிக்கை கொடுத்தது. எனவே இன்று மீண்டும் காவல்துறையினர் சிலையை ஒப்படைக்க வந்த நிலையில் அதனை எதிர்த்து 300 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாயில் கருப்பு துணி கட்டி போட்டதில் ஈடுபட்டுள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com